rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, January 1, 2013

டாப் 14 படங்கள்.. சினிமா


நண்பன்
விஜய்யின் நடிப்பில் சங்கரின் டைரக்சனில்.. இத விட என்ன சொல்லவேணும்.. எல்லாரும் விழுந்துகட்டி இந்த படத்தை பாத்திருப்பீங்க..


வேட்டை
சில சறுக்கல்களுடன் வெற்றியடைந்த படம்.. விமர்சனத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்..

டோனி
பிரகாஸ்ராஜ் இயக்கத்தில் வெற்றியடைந்த படம்.. கிரிக்கெட் ஆர்வமுள்ள மாணவன். கண்டிப்பான அப்பா என ஒரு சிறந்த குடும்ப படம்..

3
சொதப்பல் படம் என்ன வெளிப்படையான விமர்சனம் இருந்தாலும் வித்தியாசமான கதை சிறந்த நடிப்பு பாடல்கள் என அனைத்திலும் ஹிட்தான்.. எல்லாரும் வை திஸ் கொலவைறி பாடல் வெற்றியை மனதில் வைத்து படத்தை பார்த்ததால் கதை பிடிக்கவில்லை.. ஆனால் நல்ல வித்தியாசமான படம்.

முகமூடி
மொக்கைனு எல்லாருமே சொல்லிட்டாங்க.. இதுக்கு விமர்சனம் எழுதி நான் மொக்கை வாங்க விரும்பவில்லை.. ஆனால் ஓவர்பில்டப்தான் படத்தை கவிழ்ந்தது.. இது சத்தியாமாக உண்மை..

வழக்கு எண் 18/9
தமிழ்சினிமா 2012ல் மிக சிறந்த படம்.. பாலாஜி சக்திவேலின் தனித்துவ படைப்பு.. படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்..

கலகலப்பு
சிறந்த காமடி படம் 2012.. என்னமா கதைய கொண்டுபோறாப்புல.. சுந்தர்.சி கிறேட்...

நான் ஈ
தெலுங்கு, தமிழில் மட்டும் வெற்றி.. இப்பொழுது ஹிந்தியில் ஊற்றிக்கொண்டுவிட்டது.. ஆனாலும் ராஜமௌலி ஒரு தம்மாத்துண்டு ஈயை ஹீரோவாக்கி பல்லில்லாத பட்டாளத்திலிருந்து பல்லுப்போன பட்டாளம் வரை எல்லோரையும் படம் பார்க்கவைத்துவிட்டார்..

ஓகேஓகே
உதயநிதியில் முதல்வெற்றி.. முதலாவதிலேயே வெற்றி.. ஆனால் முக்காவாசி படம்பாக்க வந்தவன் ராஜேஸ்ட கதைக்காக தான்..  மிச்சம் அந்த அரசியல்கட்சிதொண்டர்கள் வந்திருப்பாங்க.. ஆனா எப்பிடியோ உதயநிதிக்கு மிகப்பெரிய ஓப்பிணிங்கை ஏற்படுத்திவிட்டது.. கலக்குங்க உதயநிதி..
http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_17.html


சாட்டை
பாடசாலையை கதைக்களமாக்கி அடுத்த பசங்க எனும் நிலைக்கு வந்திருக்கிறது.. இலங்கையில் பத்திரிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் கூட இந்த படத்தை பார்க்க சொல்லி விளம்பரங்கள் கொடுத்திருந்தன. அந்த அளவுக்கு மிக தரமான படம்..

மாற்றான்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற புது முயற்சி.. ஆனால் ரசிகர்களுக்கு திருப்தியில்லாத கதை..  

பீட்சா
என்ன ரெரரா கதைய கொண்டுபோய் கடைசி 10 நிமிசத்துக்குமுதல் அட கடவுளே இந்த பேய பாத்த பயந்தம் என்று சிறுபுன்னகையை வரவைத்து பிறகு திரும்பவும் பேயை புகுத்திய அறிமுக இயக்குனர் கார்த்திக் சுபுராஜ்.. வெல்டண் பாஸ்..

துப்பாக்கி
விஜயின் மிகப்பெரிய வெற்றி.. இதவிட என்ன வேணும்.. இந்த படத்தில தேவையில்லாதது காஜல் மட்டும்தான்.. காமடிக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்..

நீதானே என் பொன்வசந்தம்
இந்தவருசம் கடைசியில மொக்கையோட முடியணும்னு எழுதியிருக்கு.. 'இங்க என்ன சொல்லுது தியேட்டர விட்டு ஓடு னு சொல்லுதா?? ' இந்த பீலிங்தான் திடீயட்டரில இருந்த பலருக்கு.. எனக்கும்தான்..
.
.இந்தளவும் எனக்கு இந்த படங்களை பார்த்ததால் ஏற்பட்ட பீலிங்.. உங்களது பீலிங் எப்படியோ நான் அறியேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013..

.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......


நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)