rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, November 19, 2012

துப்பாக்கி- விஜயின் வெற்றிப்பாதை...


இவ்வளவு காலமும் விஜயின் படங்களில் உருப்படியான கதையை எதிர்பார்க்க முடியாது என்றிருந்த பேச்சை துரத்தி துரத்தி போட்டுத்தள்ளியிருக்கிறது துப்பாக்கியின் வெற்றி... 
யாரும் எதிர்பார்க்க முடியாத கதை நகர்வு, நேரம் போவது தெரியாமல் ரசிகனை கட்டிப்போட்டுவைக்கும் ரசனை, இடையிடையே விஜயின் காமடி, ஆக்சன் என்று சகல தரப்பிலும் புகுந்துவிளையாடி இருக்கிறது துப்பாக்கி..

ராணுவத்திலிருந்து லீவில் ஊருக்குவரும் விஜயை ராணுவ உடையுடனேயே பொண்ணுபார்க்க அழைத்து போவது.. அங்கே காஜலை பார்த்து பிடிக்கவில்லை என்பது பிறகு காஜலின் குணத்தை !!!! பார்த்து பிடிப்பது என்று மாறி மாறி சில காமடிகள் வந்து பிறகு சீரியஸ் ட்ராக்கில் பயணிக்கிறது..
பஸ்ஸில் குண்டு வைக்கும் தீவிரவாதியை பிடிப்பதும், அவன் பொலிஸிலிருந்து தப்ப மீண்டும் விஜய் பிடிப்பது, அவனிடம் இருந்து பெற்ற சில தகவல்களை வைத்து தீவிரவாத குழுவை முற்றாக ஒழிக்க பாடுபடுவது என ராணுவவீரனின் பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார் தளபதி விஜய்.. (ஆனா அந்த குறுந்தாடி மட்டும் உறுத்துதே.. எப்பிடி ஆர்மி கொமாண்டர் தாடி வளர்க்கலாம்.. !! டவுட்டு தான்.. ஆனா சில வாதங்களின் பின் தாடி வளர்ந்திருக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறது... காஸ்மீர்லயோ, டெல்லியிலயோ இருந்து ரயில்ல சென்னைக்கு வாறதுக்கு 2 நாளாவது தேவைப்படும் அதுக்குள்ள லைட்டா தாடி வளர்ந்திருக்கும்.. அதிலயும் ரயில் வழியில பிரேக்டவுண் வேற ஆகியிருக்குதே..ஹிஹி..)

12 இடங்களில் குண்டு வெடிக்கப்போவது தெரிந்ததும் வெடிக்கப்போகும் நாளன்றும் கூலாக திருமணவிழாவில் கலந்துகொண்டு அங்கிருந்த ஆர்மி நண்பர்கள் 11 பேருடன் சேர்ந்து ஒரு நேரத்தில் 12 தீவிரவாதிகளையும் போட்டுத்தள்ளுவது ஸ்மார்ட்...

ஆனா முருகதாஸிக்கு சைனிஸ் வில்லன்களை தான் பிடிக்கும் போல.. 7ம் அறிவில டொங்குலி.. இங்க அதே மாதிரி இன்னொரு வில்லன்... ஆனா இந்த வில்லன் வெரிஸ்மார்ட்.. ரொம்ப அழகா இருக்கிறான்..

கல்யாண வீட்டிலதான் கோட் போடுவாங்க என்று கண்டுபிடிப்பதும், ஆர்மியின் தங்கைகளை கடத்தி யார் யார் என்று அறிவதும் கொஞ்சம் திரில்.. ஆனால் பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது கொடுமை... 

ஆக மொத்தம் தீபாவளி சரவெடியை துப்பாக்கி பெரிதாக வெடித்துள்ளது... கலெக்சன் அள்ளுதாம்ல.. 

(ஒரு முக்கிய விடயம்.... துப்பாக்கியின் குவாலிட்டி குறைந்த டீவீடீ தீபாவளிக்கு அடுத்தநாளே வெளிவந்தது... அதேபோல உயர்தர குவாலிட்டி டீவீடீ அடுத்த 3ம் நாளே வந்துவிட்டது.. துப்பாக்கி கலெக்சன் இதனாலும் பாதிக்கப்படும்... )
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

Mahindan Kurunathan said...

நீங்க சொல்றது சரிதான் நண்பா ஆனா படத்தை இன்னொரு வாட்டி கவனிச்சு பாருங்க விஜய் ரயில்ல வந்து இறங்கின உடன தங்கச்சி என்ன இது தாடின்னு கேப்பா. அதுக்கு விஜய் லீவுக்கு வர்றேன்ல அதன் சும்மா ஸ்டைலுன்னு சொல்வாரு :)

Mahindan Kurunathan said...

நீங்க சொல்றது சரிதான் நண்பா ஆனா படத்தை இன்னொரு வாட்டி கவனிச்சு பாருங்க விஜய் ரயில்ல வந்து இறங்கின உடன தங்கச்சி என்ன இது தாடின்னு கேப்பா. அதுக்கு விஜய் லீவுக்கு வர்றேன்ல அதன் சும்மா ஸ்டைலுன்னு சொல்வாரு