rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, October 2, 2012

தாண்டவம்-திரைவிமர்சனம்...



விஐய்-விக்ரம்-அனுஸ்கா கூட்டணியில் மீண்டும்.. பலத்த எதிர்பார்ப்பு.. ம்ம்.. விக்ரம் உடைய நடிப்புக்கு சிறந்த தீனியாக இந்த படம் அமைந்துள்ளது.. ஜீ.வீ இன் 25 வது படம் என்ற எதிர்பார்ப்பு.. பாடல்கள் ஏற்கனவே ஹிட்.. நல்ல கதை.. முதலில் இழுபடும் கதை பிற்பாதியில் சூடு பிடிக்கிறது.. 
லண்டனில் நடக்கும் தொடர்கொலை.. அதை விசாரிக்கும் தமிழ் பொலிஸ் நாசர்.. கொலைகாரனை தெரியாத்தனமாக இறக்கிவிடும் டாக்சி ஓட்டுனர் சந்தானம்.. மிஸ் லண்டன் எமி ஜாக்சன்.. (சில தியேட்டர் வாசல் போஸ்டரில் அனி சாக்சன் என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள்..ம்ம்.. நடக்கட்டும்..) யார் கொலை செய்தது என தேடும் போது கிடைக்கும் தடயங்கள்.. என்று கொஞ்சம் சுவாரஸ்யமாக போகும்.. இடையே பிளாஸ்பேக்கில் விக்ரம் இந்தியாவில் மிகப்பெரிய ரோ பொலிஸ் அதிகாரி.. அவருக்கு கிராமத்தில் வாய்க்கும் அழகான.... மனைவி அனுஸ்கா.. என்று கொஞ்சம் நகைச்சுவையாகவும் கதை நகரும்.. கிராமத்து பழக்கப்படி பார்க்காமலே கல்யாணம் செய்ததால் இருவரும் முதலில் நண்பர்களாக பழகுகிறார்கள்..
பிறகு தான் எல்லாமுமாம்.. அதாவது..(காதல், மனைவி..).. அப்பிடியே கொஞ்சம் போகும் அதுக்கிடையில ஒரு குண்டுக்கான ஃப்ளோ சாட் மிஸ் ஆகிட்டுது.. அத கண்டுபிடிக்க விக்ரமோட நண்பன் நியமிக்கப்படுகிறான்.. பிறகு அது விக்ரமிட்ட வருகுது.. கண்டுபிடிச்சாரா?? அதுக்கு பிறகு என்ன ஆச்சு எண்டு கொஞ்சநேரம் அதிலயே போகும்.. 
அததேடி பிறகு லண்டன் போவாரு.. அங்க யார் யார் இதில சம்பந்தப்பட்டு இருக்கிறாங்க எண்டு அறிஞ்சு அதிர்ச்சி அடைவாரு.. அங்க பலரால ஏமாத்துப்பட்டு அனுஸ்காவை லண்டன்ல நடக்குற குண்டுவெடிப்பில இழக்குறாரு.. விக்ரம்கு கண் தெரியாமல் போகுது.. பிறகு என்ன நடந்தது.. விக்ரம் பொலிஸ்ல பிடிபட்டாரா? எமி ஜாக்சன் என்ன செய்தாரு எண்டுறத படத்த பாத்து புரிஞ்சுக்குங்க.. 

யாழ். செல்லாவில் பார்த்தேன்.. 
பலருக்கு படம் பிடிக்கவில்லை என்பது படம் முடிந்து வரும்போது புரிந்தது.. ஆனாலும் ம்ம்.. நல்ல படம்..
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: