rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, July 26, 2012

சென்னைவாழ் மக்களாவது எப்படி??

ஒரு மாசம் சென்னையில வாழ்ந்த உரிமையில் இந்த பதிவை எழுதுகிறேன்...இந்த பதிவு சென்னை வாழ் தாய்மண் பிரியர்களுக்கு எதிரானது... சென்னை தமிழகத்தை குறைவாக பேசுவது பிடிக்காதவர்கள் இப்பொழுதே இந்த பக்கத்தை விட்டு வேறு எங்காவது செல்லதும்.. மன்னிக்கவும்...

சென்னையில வாழுற மக்களோட ஒண்டா பழகி அவங்கமாதிரி மாறுறதுக்கு சில ஐடியாக்கள் தரப்படும்.. கவனிச்சுக்குங்க... இந்த ஐடியாவ பின்பற்றாத என்னய பாத்த உடனேயே சில பல அறிவுக்கொழுந்துகள் நீங்க சிலோனானு கேட்டாங்க.. ம்ம்ம்..

ஐடியா 1- என்னதான் நாத்தம் (கப்பு) அடிச்சாலும் மூக்கை மூடவே படாது... கூவத்தில முங்கி எழுந்தாலும் மூக்க மூடக்கூடாது.. அப்பிடி மூடினா நீங்க சென்னைக்காரன் இல்லை.. குறைஞ்சது கழிவுதொட்டி கிட்ட 1 மணி நேரம் நின்டாலும் சென்னைக்காரன் எண்டு சொல்லலாம்..

ஐடியா 2- என்னதான் வெய்யில் அடிச்சாலும் குடை, தொப்பி, போடக்கூடாது..

ஐடியா 3- பொலிஸ் நிண்டா கூட ராபிக் ரூல்சை பின்பற்றக்கூடாது.. ரெட் சிக்னல் விழுந்தாப்பிறகும் போய்க்கிட்டுதான் இருக்கணும்.. மற்றவனுக்கு வழிவிட்டு குடுக்ககூடாது.. பைக்னா ஹெல்மெட் போடக்கூடாது.. கார் வான் னா சிக்னல் போடக்கூடாது.. அரசாங்க பஸ் கூட சிக்னல்ல நிக்கக்கூடாது...

ஐடியா 4- உதவி னு யாராச்சும் கேட்டா மற்ற பக்கம் திரும்பிக்கணும்.. அவன பாக்கவே கூடாது..

ஐடியா 5- இதுதான் ரொம்ப முக்கியமானதும் கடைசியானதுமான ஐடியா.. மேல உள்ள 4 ஐடியாவயும் பின்பற்றாட்டியும் பரவாயில்லை.. ஆனா இரு ரொம்ப முக்கியமானது.. அது என்னண்டா.. கண்டகண்ட இடத்தில சிறுநீர் கழிக்கணும்.. கூட்டமா இருக்குனு பாக்கக்கூடாது.. குறிப்பா ரோட்டுக்கரை, பஸ்ஸ்டாண்ட் ல சிறுநீர் கழிச்சா கட்டாயம் பாராட்டுவாங்க..

அடச்சை... உனக்கு வேற வேலையே இல்லையா எண்டு நீங்க திட்டினாலும் பரவாயில்லை.. இல்ல உண்மை தான் எண்டு நினைச்சாலும் பரவாயில்லை.. இந்த 1 மாசத்தில கண்டத வச்சு எழுதியிருக்கிறன்.. அந்தளவும் உண்மையே.. கற்பனை இல்லை...
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Monday, July 9, 2012

நான் ஈ- திரைவிமர்சனம்..

கிராபிக்ஸ், கதை, இயக்கம்,வசனம் என அனைத்து பக்கத்திலும் சிக்சர் அடித்து பட்டையை கிளப்புகிறது நான் ஈ... என்னடா இது ஈயை வச்சு படம் எடுக்கிறாங்களே எண்டு யோசிக்காதீங்க.. படம் பாத்தா சிரிச்சுக்கிட்டே வெளியில வருவீங்க..


நானி(ஹீரோ)யும் சமந்தாவும் லவ் பண்ணுறாங்க..சமந்தா ஒரு தொண்டு நிறுவனம் நடத்துறாங்க.. அதுக்கு காசு சேர்க்க சுதீப் கிட்ட போறாங்க.. சுதீப் கெட்டவன்.. சமந்தாவில ஆசப்பட்டு நானிய கொல்லுறாரு... நானியின் ஆவி ஒரு ஈயின் முட்டைக்குள் போய் ஈயாக வெளிவருகுது.. அது எப்பிடி சுதீப்ப பழி வாங்குது.. என்பதுதான் படம்..

அரைமணிநேரம் மட்டுமே நடித்திருக்கும் நானி நல்ல நடிகன்... அதை விட எல்லோரையும் கவர்வது.... சமந்தா இல்லை... வில்லன் சுதீப்... சப்பா... சான்சே இல்ல.. என்ன நடிப்பு... இதிலயும் ஈ யை கொல்லுறதுக்கும், ஈ சுதீப்பின் காதில் நுழைய வரும் காட்சியிலும் கலக்கியிருக்கிறார்...

சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசிக்கலாம்..

பாடல்கள் அருமை.. அதைவிட கிராபிக்ஸ் காட்சிகள் தத்ருபம்.. கிரேசி மோகன் அசைக்கமுடியாத ஆணி அடித்திருக்கிறார்.. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.. இந்த படத்துக்கு எதுக்கு சந்தானம்..

சத்யம் தியேட்டரில் பார்த்தேன்..(ஆமாப்பா சென்னைல தான் இருக்கிறன்... இன்னும் 4 நாட்களுக்கு..)
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Friday, July 6, 2012

இலங்கை சுற்றுலா-தம்புள்ளை

இலங்கையின் முக்கியமான வரலாற்று பகுதியான தம்புள்ளையில் அமைந்துள்ள சயனநிலை புத்தரின் படங்களும் அயற்சூழலும்..








.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......