rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, May 12, 2012

வேற்றுக்கிரகவாசியுடன் நட்பு...

21.12.2011 ஞாயிற்றுக்கிழமை.. 
Software உருவாக்குவது என் வேலை.. அதிலும் முக்கியமா Mobile Software உருவாக்குவதுதான் எனக்கு பிடித்த வேலை.. அன்று ஐபோனுக்காக Alien GPS Tracking  என்ற புதிய மென்பொருளை உருவாக்கி அதை போனில் Install செய்து வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு Warning காட்டியது. இதுவரை எந்த ஐபோனிலும் அவ்வாறு Warning காட்டியதில்லை.  அந்த Warning 199205:486936:583058:05783965:496765874:48603477 என்ற IP இலக்கத்தில் இருந்து வந்திருந்தது.. 'just arrived to earth.. come and meet me..' இதுதான் அந்த Message. ஏதாவது Technical பிரச்சினையா இருக்கும் எண்டு நினைச்சு அதை மறந்து விட்டு Alien GPS Tracking ஐ நோண்டினேன். மீண்டும் அதே Warning காட்டியது. இந்த Warning ஆல் போனுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று நினைத்து அதோட நிப்பாட்டிற்று (ஏனெண்டா போனின் விலை 90000 ரூபா..) வேற வேலை பாக்க போனன். பிறகு கொஞ்சநாள் அத பற்றி கவனிக்க இல்லை..  
ஒரு மாதத்துக்கு அத பற்றிய எண்ணம் இன்றி என் வேலைகளில் கவனம் செலுத்தினேன். 
பின் அடுத்த 21.01.2012.. லீவு நாளில் மீண்டும் Alien GPS Tracking. ஆரம்பிக்கும் போது திரும்பவும் Warning காட்டியது. ஆனால் Warning வேறு..'I want to meet you..' இது தான் அந்த Message. அட கரச்சல.. ஏன் தான் இந்த பிரச்சனை வருகுதோ என்று தெரியாமல் ஐபோன் கம்பனிக்கு ஒரு கம்ளெயிண் அனுப்பினன். அவங்க அந்த கம்பிளபிண்ட பாத்துட்டு இது டெக்னிகல் பிராப்ளம் இல்லை.. தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கைவிரித்தார்கள். அவங்களுடைய பதிலுக்கு பிறகு நான் யோசித்து பார்த்ததில் Alien GPS Tracking. மென்பொருளை வேலை செய்ய வைக்கும் போது மட்டும் இந்த பிரச்சினை வருகிறது அப்படியானால் அந்த மென்பொருளில் தான் பிரச்சினை இருக்கவேண்டும் என்று புரிந்தது. அதன்பின் மீண்டும் மென்பொருளின் Coding ஐ சரி பார்த்தேன். ஆனால் அதில் அவ்வாறு Warning  காட்டுவதற்கோ அல்லது பிரச்சினைக்குரிய வகையிலோ Coding  எழுதப்பட்டிருக்கவில்லை.. அன்றே அந்த Coding கை நண்பன் ஹரியிடம் பகிர்ந்து அவனிடமும் இந்த பிரச்சினையை பற்றி சொல்லி Coding கை சரி பார்க்க சொன்னேன். அவனும் பார்த்துவிட்டு Coding ல் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னான். அதன் பின் ஹரியின் ஐபோனில் அந்த மென்பொருளை போட்டு Alien GPS Tracking ஐ வேலை செய்ய வைத்தேன். அதிலும் அந்த Warning  காட்டி பயப்படுத்தியது. அவன் பயந்து போய் அந்த மென்பொருளை அவனின் போனில் இருந்து அழித்துவிட்டு என்னிடம் 'டேய், சில நேரம் இந்த Alien GPS Tracking வேலை செய்யுதோ தெரியல.. Alien  கிட்ட இருந்து ஏதாச்சும் மெசேச் ரிசீவ் ஆகுதோ தெரியல' என்று என்னையும் பயப்படுத்தியும் விட்டான். 'டேய் ஓவரா பயப்பிடுத்தாதடா எனக்கு சாதா பேய் எண்டாலே பயம் அதுக்குள்ள Alien எண்டுமா பயப்படுத்துறா' எண்டு பேசீற்று வந்திட்டன்.

சில நாள் யாருடனும் பேசாமல் அந்த Warning பற்றியே யோசித்தேன். சில உண்மைகள் புரிந்தன. ஐபோனில் தான் இவ்வளவு நாளும் சோதித்து பார்த்தேன். அப்படியானால் வேறு போன்களிலும் இதே பிரச்சினை வருமா என்று யோசித்தேன். சோதித்தும் பார்த்தேன். எந்த மெசேச்சும் வரவில்லை. அப்படியானால் ஐபோனில் மட்டும் தான் வருகிறது என்ற தீர்மானத்திற்கு வந்தேன். அதேநேரம் ஹரியும் அந்த Coding கை ஏனைய போன்களில் போட்டு பரிசோதித்து வந்தான். 

21.02.2012 அதிர்ச்சியான செய்தியுடன் விடிந்தது. ஹரி வேறு போன்களில் பரிசோதிக்கும் போது அந்த Message  வந்ததாம். Message  Copy ஐ மெயிலில் அனுப்பி வைத்தான். 'Come to Mayan's temple, Mexcico 21.03.2012..' மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மாயன்கள் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகளை பேணிவந்தமை பற்றிய ஆய்வுகள் மனதில் தோன்றன. உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் அழைக்கிறார்களா என்றும் பயந்தேன். நான் உருவாக்கிய அந்த மென்பொருளின் வெளியீட்டுதிகதி நெருங்குவதால் அதை பற்றிய குறை நிறைகளை அறிய மாயன் கோயிலுக்கு சென்று Alien உண்மையா இல்லையா என்று அறியவேண்டிய கடமையால் மெக்சிகோ செல்ல தீர்மானித்தேன். 
ஹரியிடம் இதை பற்றி சொல்ல அவனும் வருவதாக கூறினான். சரி எனக்கும் துணை கிடைத்ததாயிற்று என்று எண்ணி சரி என்றேன். 
20.03.2012 மெக்சிகோ போய் சேர்ந்தோம். அங்கே உள்ள ஒரு நண்பனுக்கும் விடயத்தை கூறி அவனின் உதவியுடன் அன்றே மாயன் கோயிலுக்கு சென்று வித்தியாசமாக ஏதேனும் தென்படுகின்றனவா என பார்த்தோம். ஒரு பயனும் இல்லை. மறுநாள் 21.03.2012 நேரத்திற்கே எழுந்து மாயன் கோயிலுக்கு சென்றோம். வழக்கமாக சுற்றுலா பயணிகள் பலர் தென்படும் இடமான அங்கு அன்று யாரையும் காணவில்லை. சிறிது நேரம் காத்திருந்தோம். யாரையும் காணவில்லை. அப்பகுதி பற்றி விளக்கம் தரும் போர்ட்டர்களை கூட காணவில்லை. சரி ஆனது ஆகட்டும் என்று கோயிலுக்கு உள் சென்றோம். முதல்நாள் பார்த்ததை விட பல மாற்றங்கள் தென்பட்டன. வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. பயம் எனும் பிசாசு அடிவயிற்றில் தொத்தியது. ஆனாலும் முன்னேறினோம். புதிதாக ஒரு கதவு தென்பட்டது. உள்நுழைந்தோம். கதவு மூடிவிட்டது. திடீரென மேற்கூரை திறந்து ஒரு சிறு விண்கலம் இறங்கியது. ஒரு உருவமும் தென்பட்டது. உருவம் முழுவதும் தென்பட முன் 'Welcome to Mayan's temple. how are you Mr.Sri and friends.. ' என்ற ஒலி கேட்டது. அதன் பின் ஒரு உருவம், வேற்றுக்கிரகவாசி தென்பட்டது. மனிதனை போலவே தென்பட்டாலும் கண்களும், காதும், முடியும் வித்தியாசமாக இருந்தது. விரல்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் சவ்வு போன்ற ஒன்று காணப்பட்டது. 
தொடர்ந்து அருகில் வந்த அந்த Alien தமிழிலும் கதைக்க ஆரம்பித்தது. நான் செவ்வாய்க்கு அருகே ஆராய்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது பூமியிலிருந்து ஒரு சிக்னல் என் கயோனிம்டாவிற்கு வந்தது. கயோனிமாடா என்பது உங்கள் பூமியில் காணப்படும் தொலைத்தொடர்பு சாதனங்கள், கணனி முதலிய அனைத்தும் இணைந்த சாதனம். வந்த சிக்னல் பற்றி தேடும்போது அது நீங்கள் உருவாக்கிய மென்பொருளால் வந்தது என்று தெரிந்தது அதால் தான் உங்களை பார்க்க வந்தேன். இந்த மென்பொருள் உங்கள் பூமிக்கும் எங்கள் செக்டார் 283 இற்கும் இடையே தொடர்புகளை மேற்கொள்ள உபயோகமாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு போனது. நான் இடையே நிறுத்தி செக்டார் 283 அழிவடைந்துவிட்டதாக எம் விஞ்ஞானிகள் சொன்னார்களே என்று கேட்டேன். அதை அந்த Alien மறுத்ததுடன் உங்கள் விஞ்ஞான ஆய்வுக்கருவிகள் எல்லாம் கழிக்கப்படவேண்டிவை. எல்லாம் தவறான செய்திகளை தருகின்றன. வேண்டுமானால் உங்களுக்காக, எங்கள் கிரகத்தவர்களுடன் விஞ்ஞானகருவிகளுக்கான இறக்குமதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தர என்னால் முடியும். நீங்கள் உங்கள் தலைமையிடம் கேட்டு சொன்னால் சரி என்றது.

அதன் பின் எங்களை அவ்விண்கலத்தை பார்க்க விட்டது. மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தை பாவித்து அவர்களின் கயோனிமாடாவில் அனைத்து கிரகங்களுடைய மொழியையும் பதிந்திருந்தார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்கள் தொடர்பான தகவல்களையும சேகரித்துவைத்திருந்தது. அவற்றை பற்றி கதைக்கும் போதுதான் எவ்வாறு ஆங்கிலத்திலும் தமிழிலும் கதைக்க முடிந்தது என்ற கேள்விக்கான பதில். 
அதன்பின் என் நண்பன் மாயன்களில் உலக அழிவு பற்றி அந்த Alien இடம் கேட்டான். அதற்கு அந்த Alien மாயன்களுக்கு இந்த நாட்காட்டி அமைப்பதற்கு எம் கிரகத்தவர்களே உதவினார்கள். அது 2 துண்டுகளை உடையது. முதற்பகுதி இங்கேயும் மறு பகுதி எங்கள் கிரகத்திலும் வைக்கப்பட்டது. 21.12.2012 உடன் உங்கள் நாட்காட்டி முடிவடைகிறது. அதன் பின் எங்கள் நாட்காட்டியை பயன்படுத்தவேண்டும் என்றது. மேலும் பூமி இயற்கையாக அழியப்போவதில்லை என்றும் என் மூதாதையர்கள் கூறுவார்கள். ஆனால் மனிதர்களின் செயற்கை சாதனங்களால் பூமி விரைவில் அழியப்போகிறது. குண்டுகள், போர் தளபாடங்கள் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டு அழியப்போகிறீர்கள் போலுள்ளது என்று கூறி முடிக்க அதன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. விஞ்ஞானிகள் குழு ஆயுதபடையினருடன் நுழைந்து விண்கலத்தையும், அவ்வேற்றுக்கிரகவாசியையும் கைப்பற்ற முனைந்தது. ஆனால் பூமிவாசிகளை விட அவர்கள் அறிவில் சிறந்தவர்கள். தானாகவே விண்கலம் இயங்கி அவ்வேற்றுக்கிரகவாசியையும் ஏற்றிக்கொண்டு செக்டார் 283 ஐ நோக்கி பறந்தது. விஞ்ஞானிகள் குழு என் மெக்சிகோ நண்பனை பார்த்து முறைத்துவிட்டு போனார்கள். அவன் என்னிடம் மன்னிப்பு கேட்பதுபோல் பார்த்தான். ஏனென்றால் அவன்தான் விஞ்ஞானிகள் குழுக்கு தகவல் கொடுத்து அவ் வேற்றுக்கிரகத்தானை பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அன்றுடன் முறிந்தது எம் நட்பு. விஞ்ஞானிகள் குழு என் தலைமையகத்திற்கு அறிவித்து என் மென்பொருள்களை தடைசெய்தது. Alien GPS Tracking மென்பொருளின் Codeing ஐயும் அபகரித்து சென்றார்கள். ஆனால் அதை வேலை செய்ய வைக்கும் முக்கிய பகுதிகளை நான் அழித்துவிட்டதால் அது வேலை செய்யவில்லை..  நண்பனாக இருந்தவன் இன்று துரோகியானான்.
ஆனால் எனக்கு வேறு நல்ல நண்பன் கிடைத்துள்ளான். அவன் பூமியிலில்லை. செக்டார் 283ல் இருக்கிறான்..
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

Dr.Dolittle said...

nice one , by the by ஏலியன்களுக்கு என்னுடய வணக்கத்தை கூறிவிடுங்கள் பாஸ்

Tamil Pathivu said...

தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

sheik mohideen said...

hallo boss super prouda

fantastic ok carryon

dubackoor