rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, May 7, 2012

மகத்தான மனிதர்கள் சிலர்..

செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்விகற்ற இவர் ஆசிரியராக கடமையாற்றினார். பண்டிதர் பரீட்சையிலும், சைவப்புலவர் பரீட்சையிலும் சித்தியெய்திய இவர் மட்டக்களப்பு, கொழும்பு பகுதியில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெறும் காலத்தில் யூனியன் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவராகவும் விளங்கிய இவர் சைவ உலகில் மதிப்புக்குரிய தலைவராக திகழ்கிறார். இவரது பெயரால் துர்க்கையம்மன் கோயிலருகே சைவத்தமிழ் ஆய்வு நூலகம் இயங்கிவருகிறது.


யோகர் சுவாமிகள்
1872ல் மாவிட்டபுரத்தில் அவதரித்த இவர் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்தார். சிவதொண்டன் நிலையத்தையும், சிவதொண்டன் சஞ்சினையையும் ஆரம்பித்த இவர் யாழ் மக்களிடையே ஆன்மீக ஞானத்தை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது. 1964ல் இறையடி சேர்ந்தார்.








பண்டிதர்.க.நாகலிங்கம்.
1920ல் அளவெட்டியில் பிறந்து சீனன்கலட்டியில் கல்விகற்றார். அளவெட்டி அருணோதயக்கல்லூரியின் தமிழாசானாக கடமையாற்றிய இவர் பல தமிழறிஞர்களை உருவாக்கியுள்ளார். செந்தமிழ் இலக்கணவிளக்கம், செய்யுளியலும் அணியியலும், அகத்திணையியலும் புறத்திணையியலும் போன்ற பல நூல்களை ஆக்கியவர்.

மகாகவி.து.உருத்திரமூர்த்தி

1927ல் அளவெட்டியில் அவதரித்த இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எல பல்துறை ஆற்றலை கொண்டவர். தமிழ் கவியுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சாதாரண மக்களும் தன் கவிதையை புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய தூக்கணாங்குருவிக்கூடு என்ற சிறுகதை சிறப்பாக பேசப்பட்டது. வள்ளி, குறும்பா, கண்மணியாள் காதை, கோடை முதலிய 10 நூல்கள் வெளியிடப்பட்டன். 1971ல் இறைவனடி சேர்ந்தார்.



என்.கே.பத்மநாதன்
1931ல் அளவெட்டியில் பிறந்தார். நாதஸ்வர இசையுலகில் சிகரமாக திகழ்ந்தார். இளம்வயதிலேயே தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தார். தந்தையையே முதற்குரவாக கொண்டார். பின் பல நாடுகளுக்கும் சென்று தன் இன்னிசை பரப்பினார். ஸ்வர சுத்தத்துடனும், லயசுத்தத்துடனும் வாசிப்பார். நாதஸ்வரகலாநிதி, இன்னிசைவேந்தன், ஏழிசைவேந்து, கலாசூரி போன்ற பட்டங்கள் பெற்றார். 2003ல் இறைவனடி சேர்ந்தார்.
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

krishy said...

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்