rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, May 6, 2012

அளவெட்டி மகாஜனசபை

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பெரிய கிராமமான அளவெட்டியில் இடம்பெறும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பதற்கு மிக சிறந்த இடமாகவும் கிராமத்தில் மத்தியிலும் காணப்படும் மகாஜனசபை மண்டபம் இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது என்ற கருத்துக்கு மறுப்பில்லை. 1922 ம் ஆண்டு பனை ஓலையால் வேயப்பட்ட சிறு மண்டபத்தை அமைத்து அதில் அளவெட்டி மகாஜன சபை சனசங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சனசங்கம் இன்று உலகளாவிய ரீதியில் பல நன்மக்களை உருவாக்கி உள்ளது. 1922 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் 1940 ம் ஆண்டளவில் பாரிய வளர்ச்சி கண்டது. சுpறிய கொட்டகையாக இருந்த கட்டடம் காலப்போக்கில் பெரிய கட்டடமாக வளர்ச்சி கண்டது. இடையே பல வருடங்கள் நெசவு நிலையமும் இங்கு இடம்பெற்றிருந்தது. தற்போதைய காலப்பகுதியில் வாசிகசாலை, நூல்நிலையம் செயற்படத்தக்கவகையில் கட்டடம் அமைக்கப்பட்டு வேலைப்பட்டறைகள், கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் கிராம மாணவர்களில் கல்வி அறிவு திறனை விருத்தி செய்யும் நோக்கில் இங்கு ஆங்கில, சிங்கள, கணனி பயிற்சி வகுப்புகளும் இடம்பெற்று வருகின்றன.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் நிலாக்காலம் என்ற பெயரில் கலை நிகழ்வுகளை நடத்தி அந்திகழ்வின் மூலம் அளவை கிராமத்தினரின் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். கிராம மக்களில் கல்வி, பல்துறை பயிற்சி, கலை போன்றவற்றை விருத்தி செய்யும் நோக்கில் இயங்கிவரும் மகாஜனசபையின் பணி எம் அளவைக்கிராமத்திற்கு இன்றியமையாத ஒன்றாகவே அமைகிறது.
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

11 comments:

varanan said...

அட நம்ம அளவெட்டி.. நல்லதுடா

hari said...

இப்பிடி போட்டா படிக்குறதுக்கு யாரும் வரப்போறதில்லைடா..

Kabilram said...

Good post..and good to share..

Pathmanathan said...

i know little about mahajana shaba.. but i don't know that's history.. but i know that form your blog.. so thanks..

சிவா said...

நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்...

சபேசன் said...

எம் பகுதியின் அம்சங்களை விளக்கி இன்னும் இதுபோன்ற பதிவுகள் இட வேண்டுகிறேன்.

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

@hari.. இப்படியான பதிவுகள் படிக்க யாரும் வராவிட்டாலும் போடுவது என் கடமை

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

@சபேசன் -இன்னும் தொடரும்..

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

Thanks for coming..

Kabilram said...

'இப்படியான பதிவுகள் படிக்க யாரும் வராவிட்டாலும் போடுவது என் கடமை படிப்பது உங்கள் கடமை'

என்று போடன்..

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing