rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9 -டவுட்டோடு விமர்சனம்


ஒரு பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில் இருந்து அந்த பெண்ணுக்கு என்ன ஆனது.. யாரால் பிரச்சினை ஏற்பட்டது என்று ஆராய்கிறது வழக்கு எண் 18/9
பிளாட்பாஃர கடையில் வேலை செய்யும் ஹீரோ.. வீடுவீடாக சென்று வேலை பார்க்கும் வேலைப்பெண்மணி ஹீரோயின்...
ஹீரோயினுக்கு என்ன நடந்தது என்றதை ஆராய பொலிஸார் ஹீரோவையும் விசாரிக்கிறார்கள்.. அவனிடம் கேள்விகளை கேட்கிறார்.. அவனது வரலாற்றை ஃபிளாஸ்பாக்காக சொல்கிறார்கள்..
கிராமத்தில் இருந்து வறுமை காரணமாக சென்னை வந்து வேலை செய்கிறான்.. முறுக்கு போடும் கடைக்கு வேலைக்கு செல்கிறான்.. அங்கு இடம்பெறும் சில கொடுமை, கஸ்டங்களையும் பொறுத்து கொண்டு வேலை செய்கிறான்.. பெற்றோர் இறந்ததை கூட சொல்லாமல் வேலை வாங்கியதால் கடையை விட்டு வெளியேறினான்.. வேலையில்லாததால் வீதியில் விழுந்துகிடக்கும் போது யாரும் உதவாதபோதும் ஒரு பாலியல் தொழிலாளி உதவி செய்தாள்.. அவள் தெரிந்த வீதியோர உணவுக்கடையில் சேர்த்துவிட்டாள்.. அங்குதான் ஹீரோயினை சந்திக்கிறான்.. அவன் ஹீரோயினை சந்திக்கும் அனைத்து தடவையும் சண்டைதான்.. 

பையனோடு வேலை செய்ய இன்னொரு பையனும் வருகிறான்.. அவன்தான் இந்த படத்துக்கு காமடியன்.. கூத்தாடியான அவனை சினிமாவில் நடிக்கவும் தூண்டுகிறான் ஹீரோ.. அதுக்கிடையில ஒரு சீன்ல சினிமா சூட்டிங்க காட்டுறாங்க.. அதில ஹீரோனு காட்டுற ஆள பாக்கும்போது பவர்ஸ்டார்தான் ஞாபகம் வாறார்.. கூத்தாடியின் நிலையும் இடையே சொல்லப்படுகிறது.. எவ்வாறு ஹீரோயினை லவ் பண்ண ஆரம்பித்தேன் என்றும் ஒரு கொஞ்ச கதை இருக்கு.. அத படத்த பாத்து தெரிஞ்சுக்குங்க..

இந்தளவும் பொலிஸிடம் ஹீரோ சொல்லுவதுதான்..
அந்த விசாரணையின் பின் பொலிஸிடம் ஒரு மாணவி வந்து இன்னொரு பையனையும் விசாரிக்க வேணும் எண்டு சொல்வதுடன் அவளின் கதை தொடங்கியது..

அவளோடு ஒரு பையன் பழகியதாகவும்.. கொஞ்சம் கொங்சமாக நெருங்கி பழகியதாகவும்.. பின் அவுட்டிங்.. சென்றதாகவும் சொன்னாள்.. அவுட்டிங் சென்று திரும்பி வரும்போது அவள் அவனின் போனை பார்க்கும் போது அதில் அவள் குளித்தது, இன்னும் சில பல அவளின் A படங்களும் இருந்ததை கண்டு அந்த மெமரிகாட்டை எடுத்து வந்துவிட்டாள்.. அந்த மெமரிகாடடை தரசொல்லி அவளை பையன் மிரட்டினான்.. காரால் இடிக்க முயற்சித்தான்.. அதிலிருந்து தப்பினாள்.. பிறகு வீட்டில் நிற்கும் போது அவளின் வீட்டுக்கு வேலை செய்ய வேலைக்காரி (ஹீரோயின்) வாறாங்க.. பெண்ணின் அம்மா மேல்மாடிக்கு சென்றிருந்தார்.. அந்த பெண் உள்ளே இருந்தாள்.. காலிங் பெல் அடிக்க அம்மாதான் வருகிறா என்று வேலைக்காரி கதவை திறந்தாள்.. அசிட் வீசப்பட்டது.. 
யார் அசிட் வீசியது என்று ஆராய்வது தான் கதை.. 
பொலிஸ் அந்த பையனின் அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஹீரோவை ஏமாற்றி தான் தான் அசிட் ஊற்றியது என்று நீதிமன்றத்தில் சொல்லவைக்கிறான்.. அவனுக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கிறது..
பிளாட்பாரத்தில் ஹீரோவோடு சேர்ந்து வேலை செய்த பையன் ஹீரோயினிடம் நடந்த விடயங்களை கூறினான்.. ஆத்திரத்தில் ஹீரோயின் விசாரணை நடத்திய பொலிஸ் மீது அசிட் ஊற்றினாள்.. அவளது கோரிக்கையின் பேரில் ஹீரோவின் வழக்கு மறுவிசாரணைக்குள்ளாக்கப்பட்டு அவன் விடுவிக்கப்பட்டான்.. ஆனால் ஹீரோயினுக்கு 7 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.. சிறையில் இருவரும் சந்திக்கிறார்கள்.. ஹீரோ காத்திருப்பதாக சொல்கிறான்..

டவுட்டுகள்..
  • கமராமேன் ஏன் நடிகர்களின் உடலுடன் கமராவை சேர்த்து அவர்களை நடிக்கவைத்துள்ளார்.. அடிக்கடி அவ்வாறான காட்சிகள் வருவதால் அலுக்கிறது..

  • ஹீரோயின் அந்த பொலிஸ் மீது அசிட் வீசாமல் பாதிக்கப்பட்ட பெண் என்ற ரீதியில் வழக்கு மீள்பரிசீலணைக்கு விண்ணப்பித்திருந்தால் ஏழு வருட சிறை என்ற டச்சிங்கை இல்லாமல் ஆக்கியிருக்கலாம்..

  • ஏன் அந்த அரசியல்வாதியின் முகம் மறைக்கப்பட்டு காட்டப்படுகிறது.. என்ன பிரச்சினை.. ??

  • சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது தப்பா...ஹீரோவோடு வேலை செய்த பையனுடைய ஆசைக்கு கடைக்காரன் தடை விதித்தது ஏன்..


இந்தளவு டவுட் இருந்தாலும்.. மக்களிடையே பாராட்டை பெறும் படங்கள் வரிசையில் கண்டிப்பாக இடமுண்டு...
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

கோவை நேரம் said...

டவுட் லாம் ஓகே..படம் நல்லா இருக்கு தானே பாஸ்

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

படம் உண்மையில் நல்ல படம்.. பார்க்கவேண்டிய படம்.. ஆனால் இன்று நல்ல படங்கள் வசூலில் நன்றாக இருப்பதில்லையே..பொறுத்திருந்து பார்ப்போம்..

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

நல்லவன் said...

இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
......................................................
வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
- இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

(அல்லது)
1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

நன்றி மற்றும் வணக்கம்
ராஜு.சரவணன்  

படித்தவுடன் இதை நீக்கிவிடவும்