rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, April 18, 2012

உயிர்காக்கும் தோழனாக..?

மற்றவர்களின் கவிதை, கட்டுரைகளும் அவர்களின் பெயர்களுடன் இங்கு பிரசுரிக்கப்படும்..இதன் ஆரம்பமாக.. ஒரு கவிதை
----------------------------------
உயிர்காக்கும் தோழனாக..?

சுற்றுகின்ற பூமி
எங்கள் சொர்க்க வாசல் ஆனதுவே
இயற்கை என்னும் எழில்ச் சோலை
ஒன்றுகூடி நிற்கையிலே
சுகமான வாழ்வெங்கே?
சுகந்திரக்காற்றெங்கே?.
நிலையான இவையெல்லாம்
வளமான சூழலிலே
உறவாட வேண்டுமாயின்
உணர்ந்து நீ நடந்திடுவாய்
பசுஞ்சோலை பாரினிலே
பரவிடவே வழி அமைப்பாய்.
எரிமலை வெடிப்புகளும்
கடலலை சீற்றங்களும்
பனிமலை அழிவுகளும்
பாரிய வெள்ளங்களும்
உருவாகி வந்தனவே
மூடனே உன் செயலாலே.
அழிவுகள் வேண்டாம்
அகில அன்னைக்கே உயிர் அழிவு நீங்கிடவே
உன் கழல் காத்திடுவாய்.
--ஜெ.பாரதி
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: