rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, April 17, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி..-கல் எது கண்ணாடி எது??

உதயநிதியின் முதல்படம் என்ற பெரிய ஓப்பினிங் இந்த படத்துக்கு பெரிய இடத்தை தந்துள்ளது. ஆனா இந்த படத்துக்கு சந்தானம் மட்டும் இல்லைன்டா படம் புஸ்வாணம் தான். இந்த படத்துக்கு சந்தானம் தான் ஹீரோவே.. சந்தானத்தின் அறிமுகத்துக்கு நல்ல புதுமொடல் காரை காட்டி அதுக்கு பின்னுக்கு வாற கல்யாண காரில சந்தானம் வந்ததே டர் தான்.. குட்டி குஸ்புவின்ர கல்யாணத்த நிப்பாட்டி பொண்ண தூக்கி உதயநிதி கட்டிக்கிறதுண்ட பிளான் போட்டு அதுக்குள்ள கதைய கோர்த்து ஸப்பா ராஜேஸ் கொல்லுறானப்பா.. சந்தானம் போசுற ஒவ்வொரு வசனத்துக்கும் சிரிக்க வைக்கிறாரப்பா.. சந்தானம் இருக்கும் வரைக்கும் ராஜேஸ் படம் ஹிட்டு தான்.. பொண்ண கடத்துறதுக்கு பாண்டிசேரி வரைக்கும் போறதுக்கு அந்த காருக்கு பூ சுத்தி கோட் போட்டு.. கடவுளே..

ஆனா ஒதயநிதி நல்லா வரணும் எண்டுறதுக்காக படத்தில நீ எல்லாம் நல்லா வரணும் வரணும்னுறது ஏணப்பா..??
சரக்க மோந்து பாத்தே போதை ஏறுறது ஆஆஹா... ஏனப்பா இந்த கொடும.. அத விட ஆங்கிலத்த இப்பிடி கொல பண்ணுறாங்களே.. ஆனா இதில உதயநிதி பேசுற இங்கிலிசு சூப்பரா இருக்கே.. இதயே நாங்களும் ட்ரை பண்ணலாம் போல இருக்கு.. அடிக்கடி ஒவ், இஸ் போட்டு கதைக்கிறதுக்கு ரைமிங் நல்லா இருக்கு..
கோபப்பட தெரியாமல் கோபப்படும் சரண்யாவும், எதுக்கெடுத்தாலும் சிரிச்சு கதைச்சு பிறகு கத்தும் கு.கு (குட்டி குஸ்பு) வின் அப்பாவும் (பேர் மறந்து போச்சே..) ரசிக்க வக்கிறாங்க..
சந்தானம் தான் லவ்வுற பொண்ண வச்சு உதயநிதிய கலாய்க்கும் காட்சி சிரிக்க வக்குது..(படம் முழுக்க சிரிப்பு தானேடா..!!) அதில சந்தானத்தின்ட என்ரன்சும், பைக் ஓடுற ஸ்டைலும் ... நாங்களும் அதே ஸ்டைல பாலோ பண்ணலாம் போல இருக்கு.. 
ராஜேஸ் இந்த ஸகிலாவ விட மாட்டாரு போல இருக்கு.. எஸ்எம்எஸ் லயும் சகிலா இருக்கு, பாஸ்(எ)பாஸ்கரனிலயும் ரீச்சரா வாறா.. அதே மாதிரி இதில அவான்ர படம் பாக்கிறத பற்றி சொல்லுறாரு.. நல்ல சகிலா ரெக்னிக்..

உனக்கு மீராவா பார்த்தாவா வேணும் எண்டதுக்கு மீராதான் வேணுமெண்டு உதய் சொன்னதும் சந்தானம் செய்யுற முகபாவம் இருக்கே.. கடவுளே.. யூ ரொக்ஸ் சந்து..
சரண்யாவ வீட்டில காண இல்ல எண்டதும் 20 வருசம் கதைக்காமல் இருக்கும் அவாவின் புருசன் பதட்டபடுவது, தேடுவது குட்..  ஆனா
20 வருசமா உதயநிதியின்ர அப்பாவும் அம்மாவும் கதைக்காததுக்கு காரணமா டிகிரி இல்லாததுதான் பிரச்சினை எண்டு காட்டினாங்க.. ஆனா பெத்த பையன் உதயநிதி தியேட்டரில வேலை செய்யிறான் எண்டுறத அந்த அப்பா சிந்திக்கஇல்லையா??
லவ் பெயிலியரால சந்தானம் சாமியாரா போறதுல வாற உழுந்தூர்பேட்டை உலகானந்தா கதவைதிற காத்துவரட்டும் சாமியார் ஞாபகம் வாறாரு..
கு.கு வின்ர கல்யாணத்தில் உதயும், சந்தும் சொல்லுற கதை சூப்பரு..  ஆர்யாவின்ர அலப்பறை தாங்க முடியல..
சிரிப்பழகிக்கு இன்னும் சிரிப்பு குறையல...அதே சிப்பு...
படம் முடிஞ்சாம் பிறகு சூட்டிங் ஸ்பாட் ரகளைகளில் உதய் 'டான்ஸ், பயிட் ஒழுங்க வரணும், டயலாக் எல்லாம் ஒரு ப்ளோவா வரணும், கொஞ்சமாச்சும் நடிக்க வரணும் என்டவும்.. சினேகாவிட்ட பாய் ஃப்ரெண்டிட்ட நான் பேசிக்கிறன் அவர் பேரென்ன பிரசன்னா தானே எண்டு கேட்டதும் ரகளை..

பாட்டு எல்லாம் ஏற்கனவே ஹிட் ஆனதால அத பற்றி பேச தேவ இல்லைனு நினைக்கிறன். எல்லா பாட்டுமே குட்..
உதயநிதி இனி சொந்த படங்களை மட்டுமே தயாரிக்கலாம் போல.. ஹிட் ஆகுதே.. நடிப்பு நல்லா வருகுது. டான்சும் குட்.. சண்டைய பற்றிதான் தெரியல.. அடுத்த படங்கள்ள பாப்பம். ஆனா உடம்ப பாத்தா சண்டையில் தான் கொஞ்சம் பிரச்சனை வரும் போல தெரியும்.. இதே மாதிரி வேடம் நல்லா பொருந்தும்..

ஆக மொத்தம் ஓகே ஓகே.. ஓகோ ஓகோ தான்...
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

9 comments:

varanan said...

உனக்கு முதலே இந்த படம் பாத்திட்டன்டா..

hari said...

nanum pathiddan machi..

rajagobalpr said...

good review..

mokkaichami said...

pinneedda boss

venamda.. habil said...

அடிங்கொய்யால... ஏண்டா படத்துக்கு விமர்சனம் எழுதியே ஒண்ட ஃபிளாக்க ஓட்டிடுவாயா??

rathejan said...

அப்ப படம் பாக்கலாம்.. என்ன பாஸ்...

வலைஇல்லம் said...

நல்ல விமர்சனம்

வலைஇல்லம் said...

நல்ல விமர்சனம் பாஸ்

T.N.MURALIDHARAN said...

விமர்சனம் நன்று. இப்படத்திற்கு கவிதையில் விமர்சனம் காண
http://tnmurali.blogspot.com/2012/04/blog-post_15.html