rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, April 11, 2012

சுனாமியிலிருந்து தப்பிய ஸ்ரீ - ஆசைதான்

சரியா 3.26 யாழ் பஸ் நிலையத்தில் புதுவருட கொண்டாட்ட ஏற்பாடுகளுக்காக நின்றேன். என்ன சந்தோசமா இருக்கவிடமாட்டாங்க.. பூமிக்கே பொறுக்க இல்லை போல. புவிநடுக்கமாம் கடற்கரையோரப்பகுதில நிக்காமல் வீட்ட போங்க எண்டு முல்லைத்தீவிலிருந்து போன் கோல் வந்திச்சுது.. சொன்னது நம்ம நலன்விரும்பி... அதுதான்க என்னைத்தேடி வாசகர் ஒருவர்.. அவருக்கு நன்றி... சிறிது நேரத்தில் யாழ் நகர விளம்பர அறிவித்தல் லவ்ட்ஸ்பீக்கரில் சுனாமி எச்சரிக்கை பற்றியும் விரைவில் வெளியேறும்படியும் அறிவிச்சாங்க.. ஆகா உண்மையிலேயே ஆப்பா என்று கவலைப்படவில்லை.. மிகவும் சந்தோசப்பட்டேன்.. பின்ன இன்னும் உடுப்பு வாங்க கடைக்கு போய் காசு செலவு செய்ய இல்லையே.. சுனாமில் போனாலும் உடுப்பு செலவு வைக்காமல் போய் சேர்ந்த திருப்தி ஏற்படுமல்லே.. 

ஸ்பீக்கரில் சொன்னாலும் எங்கட சனத்துக்கு பயம் எண்டுறது கொஞ்சம் கூட இல்லாமல் வருடப்பிறப்பு சேல்ஸ்ஸில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.. (அம்புட்டு தைதியசாலிங்க போல..) 
சரி கூட்டத்தோட கூட்டமா ஜோதியில கலந்துக்கிட்டு நானும் கொள்வனவில் இறங்கினேன். திடீரென என்னைச்சுற்றி இருந்த சனத்தில் அளவு குறைந்தது. முதலில் 50 பேர் நிண்டாங்க எண்டால் பிறகு 10 பேரா மாறீட்டுது.. இனியும் நிண்டா தனிப்பிணம் தான்னு நினைச்சு நானும் கிளம்பினேன். டவுணிலயே சுத்திக்கொண்டிருந்த எனக்கு வீரசிங்கம் மண்டபம், யாழ் நூலகம் எல்லாம் அதிர்ந்ததான செய்தி தெரியவில்லை. ஆனால் நண்பர்கள் எல்லோரும் போனில் விசாரித்தார்கள். 

நல்ல படியா சுனாமியில சிக்காமல் தப்பி வந்ததா பதிவிடலாம் என்று நினைத்த எனக்கு சுனாமியே வராது என்று பதிவிடும் யோகம்தான் கிடைத்துள்ளது. ஆனாலும் சுனாமி அடிக்கணும் நான் அந்த இடத்தில இருக்கணும். ஆனா உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது. இது நடக்கணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.  ஏனெண்டா நம்மளுக்கும் ஒரு பப்ளிகுட்டி தேவைப்படுதுதானே. சுனாமியிலிருந்து தப்பிய ஸ்ரீ என்று பதிவிட்டா நல்லாயிருக்கும் தானே.. அதோட சுனாமிய போட்டோ எடுக்கணும் எண்டது என் கனவு.. இந்த கனவு வந்தது 2004 சுனாமியின் பின். 
சரி இந்த தடவை இந்த ஆசை நிறைவேறாட்டியும் அடுத்த தடவை அடிக்கும் போது எடுப்பன். 

இந்த பதிவை சும்மா தான் எழுதின்னான்.. 

இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்டதல்ல..
Don't think seriously..
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

6 comments:

hari said...

டேய்.. சுனாமி உன்ன ஏன் தூக்கல எண்டு கவலைப்பட வைக்காத..

Sriharshan said...

ஏண்டா... ஹரி... நான் ஒன் நண்பேண்டா...

Sriharshan said...

ஏண்டா... ஹரி... நான் ஒன் நண்பேண்டா...

hari said...

அதுகாகக இப்பிடி சுனாமி அடிக்காட்டியும்.. சுனாமியிலிருந்து தப்பிய ஸ்ரீ எண்டு பதிவு போட்டது நியாயமாடா..

hari said...

அதுகாகக இப்பிடி சுனாமி அடிக்காட்டியும்.. சுனாமியிலிருந்து தப்பிய ஸ்ரீ எண்டு பதிவு போட்டது நியாயமாடா..

Sriharshan said...

எல்லாம் ஒரு பப்ளிக்குட்டிக்குதான்டா..