rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, April 1, 2012

உலக மகா முட்டாளுங்க..

உலக மகா முட்டாளுங்க..உலக முட்டாள்கள் தினம் இன்று.. இதுவே 2010, 2011 எண்டா தமிழகத்தில வேற பெரிய பெரிய பாராட்டுவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இப்பதால் அதெல்லாம் அவுட் ஆகி அடுத்தாள் வந்தாச்சே. அதால விழா எல்லாம் கான்சல்.. 
ஆனா வெளிநாட்டுக்காரன் எல்லாத்திலயும் கொஞ்சம் வித்தியாசமானவன். இல்லாட்டா இப்பிடி முட்டாள்களுக்காக கூட விழா கொண்டாடுவாங்களா.. ஆனா எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். சும்மா சும்மா எல்லாம் கொண்டாட மாட்டாங்க.. 
அதாவது நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணுவாங்கனு சொல்லுறன். 
சரி இப்ப நம்மளுக்காககெல்லாம் ஏன் இந்த முட்டாள் தினம் கொண்டாடுறாங்க எண்டு பாப்பம். 
லவ்வேர்ஸ்டேக்கு ஒரு கதை இருக்கிற மாதிரி இதுக்கும் ஒரு கதை இருக்கு. ஆனா இது கொஞ்சம் சோகமான கதை. 

இங்கிலாந்தில மார்க் ஸ்டாவேன் எண்டுற ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அந்தளவும் பரப்பரை சொத்து.. கிட்டத்தட்ட 10 தலைமுறைக்கு ஒக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து..  இது நடந்தது 1672.. இந்தளவு சொத்து.. அதால படிப்பு இல்லாமல் குடியும் கூத்துமா சுத்தினான். அவன் பல கம்பனிகளுக்கு ஓணர். அந்தக்கால அம்பானினு கூட சொல்லலாம். அந்தளவு சொத்து. ஆனா அவன் தனிக்கட்டையாவே காலங்கடத்தினான்.. கல்யாணம் செஞ்சுக்கல. 

பணக்காரண் எண்டாலே ஒரு பெரிய நட்பு வட்டம் இருக்கும் தானே. அது போல இவனுக்கும் இருந்திச்சு. அவங்கள்ள சில பணவெறியார்கள் சேர்ந்து ஒண்ணு கூடி மார்க் கிட்ட இருந்து சொத்துகளை பறிக்க திட்டம் போட்டாங்க. அந்த திட்டம் அவனுக்கு திருமணம் செஞ்சு வக்கிறது தான். (என்ன இந்த கதை தமிழ் சினிமா மாதிரி இருக்குமா.. சவ்வ்னு..) அதுக்குன்னு ஒரு பொண்ண பிடிச்சு அவளுக்கு பணம் தருவதாக கூறி அவளை நடிக்க வைத்தனர். எல்லாம் பிளான் மாதிரி நடந்திச்சு. கல்யாணமும் நடந்திச்சு.. அவங்களுக்கு கலியும் பிடிச்சுச்சு. திருமணத்தின் பின் மனைவி மார்கிடம் சென்று தனி ஒருவர் மீது சொத்துகள் இருப்பதால் வருமானவரி பிரச்சினை இருப்பதாகவும், அதனால் சொத்தை தெரிந்தவர்கள் பெயருக்கு மாற்றி எழுதி விடுமாறு சொன்னாள். 

புதுமணத்தம்பதிகள், அதவிட சொல்லுறது ஒரு பொண்ணு.. எந்த ஆணாவது இல்லை எண்டு சொல்வானா.. சரி என்றான். சொத்தும் மாத்தி எழுதியாச்சு.. கூட இருந்த நண்பர்களுக்கு கொண்டாட்டம்.. பிளான் படி நடக்குது எண்டு.. 
சில நாட்களில் பொண்ண காண இல்லை..பிறகு விசாரிச்சப்ப தெரிஞ்சது எண்னாண்ணுறீங்க..?? அந்தளவு சொத்தும் பொண்ணுக்கும் பொண்ணோட உறவினர்கள் பெயருக்கும் எழுதப்பட்டிருந்தது. 


அந்தளவு சொத்தும் போய், ஓட்டாண்டியான மார்க்கும், சொத்துக்காக ஆசைப்பட்ட மார்க்கும் நண்பர்களுக்கும் உங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்குது..அது எண்ணண்டு கேக்குறீங்களா.. இந்தளவுக்கு ஓட்டு ஓட்டுனு கதை சொல்லிக்கிட்டிருக்கிறன். இதயும் நம்பிக்கிட்டு படிச்சிக்கிட்டு இருக்கிறீங்களே.. நீங்க தான் ஒண்ணாம் நம்பர் முட்டாளு... (ஆனா நீங்க தான் நம்மாளு..)

வருகைக்கு நன்றி... 
உலக முட்டாள்கள் தினவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.. 
இத படிச்சதான உங்களுக்கு உலகமகா முட்டாள் எண்டுற பட்டமும் தாறன்.. இந்த பட்டம் தான் அந்த சோகமான கதை..
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

அடச் சே ... போங்க பாஸ்.