rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Friday, April 27, 2012

வாழ்ந்த மண்ணை தேடி...

இயற்கையின் அழகை அனுபவிக்காதவர் யாருண்டு. என் சொந்த ஊர் அனலைதீவின் அழகிய படங்கள்..

புளியந்தீவு தரவை

ஒற்றைப்பனையடி.. இங்கு பேய்கள் அதிகம்.. இரவில் இவ்வழி செல்பவர்களுக்கு பேய்களை பார்த்த அனுபவம் ஏற்படும். இது உண்மை


முருகைக்கல்லில் தானாகவே அமைந்த தட்சணாமூர்த்தி வடிவம்.

தானாகவே வளரும் தன்மைகொண்ட சிவ வடிவம். புளியந்தீவு சிவன் கோயிலில் உள்ளது. 
கந்தபுராணம்.. பனையோலைச்சுவடியில்தீவகத்தின் ஒரேயொரு விஸ்ணு கோயில்

ஹாஹா
.
. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, April 25, 2012

தொலைத்தவையும் தேடுபவையும்..

ஆ உரஞ்சிக் கல்
முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.


சுமைதாங்கி
மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.


துலா
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.

பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.

துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.சூத்திர கிணறு
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.


சங்கடன் படலை
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.


.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Thursday, April 19, 2012

கிரிக்கெட் கலாட்டா... 5
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

சில பல இந்து ஆலயங்கள்.


ஆலயங்கள் தமிழர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சான்றாக விளங்கும் அடையாளமாகும். அவ்வகையில் அளவெட்டியில் காணப்படும் இந்து ஆலயங்கள் பல..
1. அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரியம்மன்
2. அளவெட்டி வடக்கு அழகொல்லை பிள்ளையார் கோயில்
3. அளவெட்டி மேற்கு முதலியார் கோயில்
4. அளவெட்டி மேற்கு பெரியதம்பிரான் கோயில்
5. அளவெட்டி மத்தி கும்பளாவளை பிள்ளையார் கோயில்
6. அளவெட்டி மத்தி கேணிக்கரை வைரவர் கோயில்
7. அளவெட்டி கிழக்கு குருக்கள் கிணற்றடி பிள்ளையார் கோயில்
8. அளவெட்டி தெற்கு நரசிங்க வைரவர் கோயில்
9. அளவெட்டி தெற்கு பெருமாக்கடவை பிள்ளையார் கோயில்
10. அளவெட்டி தெற்கு முத்துமாரியம்மன் கோயில்
11. அளவெட்டி தெற்கு நாகவரத நாராயணர் கோயில்
 இவற்றை விட இன்னும் பல ஆலயங்கள் இவ் அளவெட்டியில் காணப்படுகின்றன.

அளவெட்டி ஆலயங்களை எடுத்துக்கொண்டால் மூன்று பிரபலமான பிள்ளையார் கோயில்கள் காணப்படுகின்றன. இவ்வாறு 3 பிள்ளையார் கோயில் இங்கு அமைய மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்கப்பெறல் காரணமாகியது. மாருதப்புரவீகவல்லிக்கு குதிரை முகம் நீங்கிய பின்னரும் அவருக்கு அந்த உணர்வு நீங்கவில்லை. விநாயகரை வழிபடாமல் முருகன் கோயில் கட்டியமையாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டதாக ஒரு பெரியவர் கூறினார். தன் தவற்றை உணர்ந்த ராணி தென்திசை நோக்கி ஏழு பிள்ளையார் கோயில்களை கட்டினார்.
அக்கோயில்களாவன..
1. கொல்லங்கலட்டி விநாயகர் கோயில்
2. வரத்தலம் விநாயகர் கோயில்
3. அழகொல்லை விநாயகர் கோயில்
4. கும்பழாவளை பிள்ளையார் கோயில்
5. பெருமாக்கடவை பிள்ளையார் கோயில்
6. ஆலங்குழாய் பிள்ளையார் கோயில்
7. கல்வளை பிள்ளையார் கோயில்

இவற்றில் மூன்று பிள்ளையார் கோயில்கள் அளவெட்டியில் அமைந்திருப்பது அளவெட்டி கிராமத்திற்கு கிடைத்த பேறாகும்.

வலிகாமம் வடக்கின் சில ஆலயங்கள்..
கும்பழாவளை பிள்ளையார் கோயில்
மாருதப்புரவீகவல்லியின் குதிரை முக உணர்வு நீங்கப்பெற்ற இடமாகவும், அவர் கட்டிய ஏழு ஆலயங்களில் நடுவில் வீற்றிருக்கும் ஆலயம் இதுவாகும். இங்கு குதிரை முகம் நீங்கியதால் மாவிடுதிட்டி என்றும் இப்பகுதிக்கு பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விட கும்பழாவளை என்ற பெயர் ஏற்பட்டதற்கும் காரணம் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாலயப்பகுதி முன்பு மண்மேடாக காணப்பட்டதாகவும் இப்பகுதியில் மாடு மேய்த்த சிறுவன் சோதி வடிவான பிழம்பை கண்டதாகவும் அங்கு கொம்புடன் பிள்ளையார் தோன்றியதாகவும் கூறப்பட்டது. இதனால் கொம்பு 10 ஆவளை என்ற பெயர் பின்பு திரிபடைந்து கும்பழாவளை ஆக மாறியதாகவும் கூறப்படுகிறது. வருடந்தோறும் வைகாசி மாதம் இவ்வாலய திருவிழா இடம்பெறுகிறது.

அழகொல்லை விநாயகர் கோயில்
மாஞ்சோலைகள் சூழ வீற்றிருக்கும் விநாயகரின் இவ் ஆலயத்தில் கட்டடம் கட்டப்படும் போது பல தடங்கல்கள் ஏற்பட்டதுடன் முதல் நாள் கட்டிய கட்டடம் அடுத்த நாள் இடிந்து காணப்பட்டதாகவும் இதனால் அனைவரும் விநாயகரிடம் மனம் வருந்தி வேண்டினர்.
இதன் பின் ஆச்சாரியாரின் கனவில் தோன்றிய விநாயகர் நிர்மாண அளவு பிரமாணத்தில் பிழை இருப்பதாகவும் ஓர் அளவு ஓலை ஒன்று குறிப்பிட்ட பகுதியில் இருப்பதாகவும் அதன் பிரகாரம் கட்டடம் அமைக்குமாறும் கூறினார். அதன் பிரகாரம் கட்டடம் கட்டினார்கள். இதனால் அளவு ஓலை என்பது அழகொல்லை என மருவியதாகவும் கூறப்படுகிறது. இதைவிட சுற்றி வர அழகிய சோலைகள் காணப்பட்டமையாலும் அழகொல்லை என பெயர் பெற்றது. இக்கோயில் திருவிழா சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.

பெருமாக்கடவை விநாயகர் கோயில்
அளவெட்டியில் காணப்படும் பிரபலமான விநாயகர் ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்றாகும். சுன்னாகம், கந்தரோடை, அளவெட்டிக்கு மத்தியில் அமைந்த பினாக்கை வயலையொட்டி அமைந்துள்ள இவ்வாலயத்தின் முகப்பின் முன் சதுர வடிவான புராதன செந்தாமரைத்தடாகம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தின் தெற்குப்பக்கம் துர்க்கையம்மன் கோயிலொன்றும் காணப்படுகிறது. இப்பகுதிக்கு பெருமாக்கடவை என பெயர் வர பெருமாலியன் என்ற அரக்கனின் கொட்டத்தை விநாயகர் அடக்கி அழித்ததாகவும் பெருமாலியன் ஆவி கடந்த இடம் என்பதால் பெருமாக்கடவை என பெயர் வந்ததாகவும், அக்கால ஆட்சியாளர்களால் பெரும் குதிரைகள் அடக்கப்பட்டு அடைக்கப்பட்ட இடம் என்பதால் பெருமாக்கடவை என பெயர் வந்ததாகவும் கூறுவர். இவற்றை விட உயர்குடியை சேர்ந்த பெருமக்கள் வாழ்ந்த பகுதியாகையால் பெருமக்கள் கடவை என அழைக்கப்பட்டு பெருமாக்கடவை என மருவியதாகவும் கூறுவர்.

குருக்கள் கிணற்றடி விநாயகர் கோயில்
அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதி கணேஸ்வரம் என்று பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் இற்றைக்கு அண்ணளவாக 650 வருட பாரம்பரியம் கொண்ட ஆலயமாகும். சம்பந்தஞானியார் என்ற மகானது சமாதி அமைந்த இப்பகுதியில் ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று மரங்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. இதுவே ஆலய தலவிருட்சமாகவும் காணப்படுகிறது. போர்த்துக்கேயர் ஆட்சியில் ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அதன் பிற்பட்ட காலத்தில் ஒரு அந்தணர் வீட்டில் கிணறு தோண்டியபோது ஒரு விநாயகர் சிலை கிடைக்கப்பெற்றது.
அச்சிலையை சம்பந்தஞானியார் சமாதிக்கருகே அமைந்த கிணற்றடியில் வைத்து வழிபட்டனர். அதன் காரணமாக குருக்கள் கிணற்றடி பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது.

தவளக்கிரி முத்துமாரியம்மன் கோயில்
ஊருக்கு ஊர் பக்தி மார்க்கமாக கோயில்கள் அமைத்து வழிபடுத்து வழிபடுவது நம் மரபு. அவ்வகையில் அளவெட்டியில் முத்துமாரியம்மனின் அருள் பரப்ப அமைக்கப்பட்டது தவளக்கிரி முத்துமாரியம்மன் கோயில். நெடுங்காலத்துக்கு முன் சுழிபுரத்தில் கடலில் இருந்து பெறப்பட்ட இச்சிலையை வீட்டில் வைத்து பூசித்து வந்தனர். அப்பொழுது அச்சிலையிலிருந்து முணுமுணுப்பு சத்தம் கேட்டதனால் பயந்தனர். அக்காலத்தில் அளவெட்டியை சேர்ந்த ஆசார சீலர்கள் அங்கு சென்று வருவதுண்டு. சுழிபுரமக்கள் அளவெட்டி மக்களிடம் அச்சிலையை வழங்கி பூசிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அளவெட்டியில் கோயில் கட்டி அச்சிலை வைக்கப்பட்ட போதும் சுழிபுர மக்கள் இன்னமும் இவ்வாலயத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாலயத்தில் 1924, 1925 ம் ஆண்டு காலப்பகுதி வரை பலியிடல் இடம்பெற்று வந்ததாகவும், அதன் பின் பலியிடலை நிறுத்தி மகோற்சவம் செய்ய தொடங்கினார்கள். இவ் அம்மன் பல அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

நாகவரத நாராயணர் கோயில்
அளவெட்டி மக்களது பக்தி மேன்மையையும், வைணவ சமயத்தின் சிறப்புக்களையும் கொண்டதாக நாராயணர் கோயில் அளவெட்டியில் அமைந்துள்ளது. அருட்கவியரசு கலாநிதி சீ.விநாசித்தம்பிப்புலவரால் அமைக்கப்பட்ட இவ்வாலயம் முன்பு பற்றைக்காடாக காணப்பட்டதாகவும் அவ்விடத்தை துப்புரவாக்கி கொட்டிலமைத்து பூசித்து வந்தார். வைணவ ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று தேர் திருவிழா இடம்பெறும். இவ்வாலயத்தில் அருட்கவி அவர்கள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி இன்றும் ஊர்மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார்.

பழம்பதி பிள்ளையார் தேவஸ்தானம், மல்லாகம்
சுமார் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டு பின் மீள எழுப்பப்பட்டுள்ளது. ஆவணி திங்களன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவேறும் வகையில் திருவிழா இடம்பெறுகிறது.

கீரிமலை, நகுலேஸ்வரம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று வகையிலும் சிறந்து விளங்கும் இவ்வாலயம் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். கீரி முகம் கொண்ட ரிஷp தவம் செய்து கீரி முகம் நீங்கப்பெற்றமையால் கீரிமலை என பெயர் பெற்றது. இக்கீரிமலை வடமொழியிலி நகுலகிரி எனவும் அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தின் மறுநாள் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்வாலய திருவிழா 15 நாட்களுக்கு இடம்பெறும்.

இவற்றை விட வலி வடக்கு பகுதியில் பிரபல்யமான ஆலயங்களாக ஆனைவிழுந்தான் விக்கினேஸ்வரர் ஆலயம், வரத்தலை கற்பக விநாயகர் ஆலயம், ஞானவைரவர் கோயில், தோதரை அம்மன் கோயில், வீரகத்திப்பிள்ளையார் கோயில் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உட்பட பல ஆலயங்கள் காணப்படுகின்றன.

 .
. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......