rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, March 14, 2012

தோனி- விமர்சனம்

பிரகாஸ்ராஜ்ஜின் இயக்கத்தில் வெளிவந்த தோனி நல்ல கதையம்சமான படமாக ஜொலிக்கிறது. விளையாட்டும் வாழ்க்கைக்கு தேவைதான். அதனாலும் ஜெயிக்கலாம் என்ற கதையுடன் வந்த தோனியில் இடையிடையே கிரிக்கெட் வீரர்களை ஏசுவதாய் அமைந்தாலும் பெரும்பாலும் உண்மையானதாகவே உள்ளது. டோனி, டென்டுல்கரை எல்லாம் பாண்ட் செய்து நாடுகடத்த வேண்டும் என்பதும், செலவு வைக்க வேண்டும் என்றால் பெண் பிள்ளைக்கு பூணூல் கூட போடுவார்கள் என்பதும் சராசரி நடுத்தர மக்களின் ஆதங்கம் தான். 

பிரகாஸ்ராஜ் நடிப்பு என்னமா இருக்குதுப்பா என்று வியக்கும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார். தொலைக்காட்சி பேட்டியில் குமுறுவதும், சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி ஊறுகாய் விற்பதும் என வெளுத்து வாங்கியிருக்கிறார். மகனாக நடித்த பையனும் தன் பங்கிற்கு நடித்துள்ளார்.
இடையிடையே பல கிளைக்கதைகளை கொண்டுவந்து இணைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் பிரகாஸ்ராஜ். உடலை விற்கும் பெண்ணின் கதையை கேட்டபின் அவருடன் பழகுவதும், வட்டிக்கு பணம் கொடுப்பவர் இறுதியில் உதவுவதையும் இயல்பாக இணைத்துள்ளமை பாராட்டத்தக்கது. 

பிரபுதேவாவின் நட்பு கெடாமல் இருக்கு அவருக்கு ஒரு பாடலையும் கொடுத்துள்ளார்.. இளையராஜாவின் இசை பக்கபலமாக உதவியுள்ளது..
எல்லா வகையிலும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய நல்ல படம்- தோனி..
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

5 comments:

mathanalogan said...

good film.. i love pirakashraj

musiczlover said...

songs are great.. ilaijaraja rockz..

harris said...

dhoni, sachin i kevalapadutheeddanga machi.. ithu good film aa?

jagan k said...

dai appidi sollatha.. pirakash raj sonnathu sari than/.. bcoz avangalukku cricket vilaijadina money.. but namakku enna kedaikkum?

varanan said...

oru kuthu paddu illai.. oru padamam..