rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, March 23, 2012

நானும் பவர்ஸ்டாரும்.

தலைப்ப பாத்துட்டு நான் பவர்ஸ்டாருக்கு ஃப்ரெண்டு எண்டு நினைச்சிடாதீங்க.. எனக்கும் பவர்ஸ்டாருக்கும் இடையிலான காணாநட்பை (ஏன் சார் காணாக்காதல் தான் இருக்கணுமா? நட்பு இருக்கப்படாதா?) பற்றி சொல்லப்போறன். 
இது பவர்ஸ்டார் பேட்டி மாதிரி முழுநீள சிரிப்பாகவும் இருக்காது. ராமராஜன் பேட்டி மாதிரி சீரியசாவும் இருக்காது. டீ.ஆர் பேட்டி மாதிரி சிரிப்பாவும் இருக்கும் சீரியஸாவும் இருக்கும். 

பவர்ஸ்டாருக்கு பெரிய அறிமுகத்தை சாரி மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது லத்திகா.. 
அந்த காலப்பகுதியில் பேஸ்புக் மூலம் பவர்ஸ்டாரின் சாதாரண புகைப்படத்தை பார்த்தேன். படத்தில மொட்டை பாஸ் கெட்டப்பில சொட்டையா நிண்ணாரு. அப்பவே முடிவு பண்ணினன் அவரின் தோற்றத்திற்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இருக்காது என்று.நம்மளுக்கு தான் ஒரு போட்டோ கிடைச்சாலே அத வச்சு ஒரு மாசம் பதிவு எழுதிடுவமே. கூகிளுக்கு போய் பவர்ஸ்டார் படங்கள் என அடித்து தேடிப்பிடித்து சில நல்ல படங்களை ஃபிளாக்கில் பதிவிட்டேன்.. ஸ்ப்பா அப்ப தான் சூப்பர்ஸ்டார் என்ற பெயருக்கு இருக்கும் மார்க்கெட் பவர்ஸ்டாருக்கும் இருக்குது எண்ட விசயம் தெரிஞ்சுது. ஆகா நம்மளுக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என்ற பீலிங்கில் அவர வச்சே சில காலம் ஃபிளாக் நடத்தினான்.

அதுவரைக்கும் பவர்ஸ்டார ஒரு டம்மி பீஸ் எண்டுதான் நினைச்சன். ஆனால் அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய திறமையை லத்திகா டிரெயிலரில் பார்த்தேன். எந்திரன் படத்துக்கான டிரெயிலர் எவ்வளவு ஆர்வத்தை கிளப்பி விட்டதோ அதே அளவு ஏன் அதை விட அதிகமாகவே படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை லத்திகா டிரெயிலர் கிளப்பி விட்டது.
அந்த அளவு கச்சிதமான டிரெயிலராக தோன்றியது. பாத்த உடனயே படம் கட்டாயம் 500 நாள் ஓடும் என்றும் நினைத்தேன். ஆனா பவர்ஸ்டாருக்கு என்ன பிரச்சினையோ தெரியல 1 தியேட்டரில மட்டுமே படத்த ரிலீஸ் பண்ணி ஒரு வருசம் ஓட்டியதாக கேள்விப்பட்டேன். பேசாமல் பவர்ஸ்டார் இலங்கையில ஒரு 5 தியேட்டரில ரிலீஸ் பண்ணியிருந்தா படம் கட்டாயம் 1000 நாள் ஓடியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு ரசிகர்கள் இருப்பதை நான் அறிந்துள்ளேன். 
சரி இந்தளவும் பறவாயில்லை எண்டு பாத்தா பவர்ஸ்டார பேட்டி எடுத்து பிரபல தொலைக்காட்சி யூரியூப்பில் வெளிவிட தமிழர்கள் அனைவரும் ஏன் சில ஆங்கிலேயர்கள் கூட பவர்ஸ்டாரின் ரசிகர் ஆகினார்கள். அதைவிட பிரபல தமிழ் புத்தகத்திலும் (குமுதம் என்று நினைக்கிறேன்.) பேட்டிபோட்டு கலக்கிட்டாங்க..

அந்த பேட்டிய வாசிச்சு சிரிக்காத யாராச்சும் இருந்தீங்கன்டா என்னோடு தொடர்பு கொள்ளுங்க 1000 ரூபா பரிசு தாறன். இது சத்தியம். அந்த அளவுக்கு நகைச்சுவை பேட்டியாக காணப்பட்டது. 

அந்த அளவுக்கு நகைச்சுவையுடனும் சீரியசுடனும் இதுவரை யாரும் பேசி நான் பார்க்கவில்லை. சரி அத விடுங்க.
முதல்ல சொன்ன மாதிரி சில பவர்ஸ்டார் பற்றிய பதிவுகளை போட்டு கொஞ்சம் பிரபலமாக(!!) தொடங்கினேன். அடடா இப்பிடியே பவர்ஸ்டார் பற்றியே போட்டுக்கிட்டருந்தா தமிழ்மணம் முதலான அனைத்து ராங்கிங் தளங்களிலும் முதலிடம் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையும் வந்தது.. 


பவர்ஸ்டார் பற்றி இட்ட பதிவுகள் சில:-


இவ்வளவு பதிவு போட்டிருக்கிறியே ஆனா ஏன் லத்திகா படத்தின் விமர்சனம் மட்டும் போடவில்லை என்று சிலர் கேட்பது தெரிகிறது. முடிவில் காரணம் சொல்கிறேன்.

பவர்ஸ்டாரில் எனக்கு பிடித்த இரு விடயங்கள்..

  • தன்னம்பிக்கை.. தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் நடித்து ஒரு படத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இனி அவர் நடித்தாலென்ன நடிக்காவிட்டாலென்ன பவர்ஸ்டார் என்ற ஒருவர் தமிழ் சினிமாவில் படித்து பல சாதனைகள் செய்தவர் என்று வரலாறு சொல்லும்..

  • நகைச்சுவை.. நன் படங்களை பற்றி தானே நக்கல் அடிக்கவும், தன்னைப்பற்றி நகைச்சுவை பேட்டி கொடுக்கவும் யார் இணங்குவார்கள். ஆனால் தன்னைப்பற்றியும் தன் படங்களை பற்றியும் இவர் கொடுக்கும் பேட்டிகள் இருக்கின்றனவே.. கடவுளே.. இதை விட ட்வீட்டரில் இவர் மிகவும் பிரபலமாகி வரும் ஒருவராகவும் காணப்படுகிறார்.
லத்திகா படம் பற்றி எழுதாததற்கு காரணம் படம் இன்னும் சீடியில் கூட இலங்கைப் பக்கம் வரவில்லை.. வந்தால் சொல்லுங்கள் விமர்சனம் எழுத காத்திருக்கிறேன்.
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

6 comments:

Anonymous said...

அட மக்கா.. ஆரம்பிச்சிட்டியா?? பவர் பாவம்டா.. ஆனா சூப்பரா இருக்குது..

sangee said...

aa.. nan 2nd aa?? ok.. good post

mokkaichami said...

power paavam...but no jokes here..

pirasanth said...

நம்ம பாஸோட தன்னம்பிக்கைதான் எனக்கு பிடிச்சது..

mathanalogan said...

காத்திருக்கிறேன் லத்திகா சீடிக்காக.. i also machi..

musiczlover said...

வடிவேலு, சந்தானத்தின்ர காமடிய விட இவற்ற காமடிதான் பெஸ்ட்டு..