rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, March 14, 2012

அரவான்- நல்ல சினிமா

வசந்தபாலன் வித்தியாசமான கதைகளுக்காகவே பிறந்தவராக உள்ளார். அரவான் கதை இவரது இல்லையாயினும் மேலதிக கதைகளை இணைத்து வித்தியாசமான படமாக தந்துள்ளார். 
திருடரான பசுபதி திருட்டுக்கு செல்வதுடன் ஆரம்பிக்கும் படம் இறுதி வரை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது. பசுபதியின் ஊரை சொல்லி திருடுபனை (ஆதி) கண்டுபிடிக்க புறப்படும் பசுபதி இறுதியில் ஆதியுடனேயே சேர்ந்து திருடுவதும் பழைய பாணி என்றாலும் ஓகே..

ஆதியின் திறமைகளை பார்த்து அவனை தன்னுடனேயே அழைத்துவந்து திருடுகிறான் பசுபதி. இடையே ஆதி வேறு ஊரில் பலி கொடுக்கப்படவேண்டியவன் என்றும் தப்பி வந்தவன் என்றும் தெரிய ஃபிளாஸ்பாக்கில் ஆதியின் கதை செல்கிறது. ஆதி காவல் தொழில் செய்பவன். அவனது ஊரில் அவர்களது எதிரி(பரத்) ஒருவன் கொலை செய்யப்படுகிறான். கொன்றவன் பிடிபடாவிட்டால் அவ்வுரில் காவலுக்கு இருந்த ஐவரில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பலி கொடுக்கப்படுவது வழக்கம். அப்படி தெரிவு செய்யப்பட்டவன் ஆதி. பலி கொடுக்கும் நாளுக்கு முதல் நாள் பரத்தை கொலை செய்தது அரசர் தான் என்று தெரியவர அரசனை கூட்டிவர செல்கிறான். அங்கு அரசன் இறக்க ஆதிக்கு காயம் ஏற்பட்டு பலிக்களத்துக்கு வரமுடியவில்லை. மிஞ்சிய நான்கு காவலாளிகளில் மீண்டும் ஒருவரை தெரிவு செய்து பலி கொடுக்கப்படுகிறது.

அத்துடன் பலி கொடுக்கப்பட்டவனின் குடும்பத்தவர் ஆதியை கண்டால் பலி கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆதி தப்பி திருட்டுகள் செய்து பின் பசுபதியிடம் சேர்வதுடன் ஃபிளாஸ்பாக் முடிகிறது. 
பின் பசுபதியுடன் இருக்கும் ஆதியை அவனது எதிரிகள் பார்த்து ஊராரிடம் சொல்லிக்கொடுத்ததால் ஆதியை பலி கொடுப்பதற்கு அழைத்து சென்று பலி கொடுக்கிறார்கள். 

அதற்கு முன் ஆதி பசுபதியிடம் திருட்டு தொழிலை விட்டு காவல் தொழில் செய்யுமாறு கேட்டுக்கொள்ள அதற்கேற்ப பசுபதியும் கூட்டத்தாரும் காவல் தொழில் செய்கிறார்கள்..
இறுதியில் மரணதண்டனையை ஒழிப்போம் என்ற அறிவுரையுடன் படம் முடிகிறது..
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

hari said...

sontha story ilai.. but good screenplay..

varanan said...

historical best film da

varaku said...

vasanthabalan eppavum good film than eduppar da

pirasanth said...

i like karthik's music.. good composition..