rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, March 12, 2012

காதலில் சொதப்புவது எப்படி?? எப்படிங்கோ!!

காதலர்களுக்கிடையே ஏற்படும் ஊடல்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் காதலில் சொதப்புவது எப்படி... குறும்படமாக பார்க்கும் போது வேகமானதாகவும், ஆர்வம் குறையாமலும் இருந்த கதையை இரண்டரை மணி நேரத்துக்கு மாற்றியதால் பயங்கர ஜவ்வாக இழுக்கப்பட்டு எரிச்சலை மூட்டுகிறது..

சித்தார்த்துக்கும் அமலாபாலுக்கும் இடையேயான ஊடலும் சரியான காரணங்களுக்கானதாக அமையாதது பெரும் குறையே.. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோவித்துக்கொண்டு செல்வது ரொம்ப பைத்தியகாரத்தனமான இருக்கிறது.. அதுக்கிடையில சித்தார்த் கமராவ பாத்து சில டயலாக் சொல்வது ரொம்ப பைத்தியகாரத்தனம்.. சகிக்கல..
அமலாவில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான புரிந்துணர்வின்மையை தீர்க்கும் காட்சி மட்டுமே மனதில் ஒட்டுகிறது..
ஆரம்பத்தில் லவ் பண்ண ஆரம்பிக்கும் காட்சிகளும், சில இடைப்பட்ட காட்சிகளும் மட்டுமே நன்றாக இருந்தது மிச்சம் ரொம்ப கஸ்டம்..
கதை தான் அப்பிடினு பாத்தா தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகளை தாங்களே தீர்ப்பதை விட்டுவிட்டு நண்பனையும், வேறு ஒரு பெண்ணையும் கேட்டு தீர்ப்பது பொருந்தாத கதையம்சம். அதிலயும் நண்பன் ஒருவனின் திருமணத்துக்கு செல்ல திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் முன்னைநாள் காதலனுடன் செல்வதும் பிறகு அவர்களுக்கிடையிலான சண்டையை நீண்டநேரம் காட்டுவதும் படத்தின் நேரத்தை இரண்டரை மணிநேரமாக்க செய்த முயற்சியாக தெரிகிறது. தேவையற்ற காட்சிகள் அவை.. வலிந்து திணிக்கப்பட்டமை அப்பட்டமாக தெரிகிறது..

பேசாமல் குறும்படத்தின் நேரத்தை கூட்டி ஆங்கில படங்கள் போன்று ஒரு மணிநேரத்திலிருந்து ஒண்றரை மணிநேரமாக மாற்றியிருந்தால் நன்றாயிருக்கும்.. எது எப்படியோ படம் எடுத்து சொதப்புவது எப்படி என்று தெரிந்து கொண்டேன்..சாரி கோவிச்சுக்காதீங்க..
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

sangee said...

mokkai padam da..

varaku said...

short film aa nalla irunthichu.. but sothappidduthu..

harris said...

athu than padam eduthu sothappuvathu...

harris said...

lover's ku nalla padam da.. nalla than irukkuthu..