rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, February 8, 2012

காதலர்களுக்கு மட்டும்.. சில ஐடியாக்கள்...

முதலில் காதலர்களுக்கான சில ஐடியாக்களை . என்று பார்த்தோம்...

இப்பொழுது காதலிப்பவர்கள் செய்யவேண்டிதையும், செய்யக்கூடாததையும் பார்ப்போம்.. முதலில் செய்யக்கூடாதவற்றை பார்ப்போம்..

எப்பவும் பொண்ணுங்களை பாத்ததும் ஸ்டைலா நிற்கப்பார்ப்பார்கள் நம்ம பயலுகள்.. ஆனால் அதெல்லாம் இப்ப சரி வராது.. சிலருக்கு (அதாவது உண்மையாவே நல்ல கலரான பையன்களுக்கு) அது தான் சரி.. ஆனா நாங்க கறுப்பர்கள் ஓவரா ஸ்டைல் காட்டப்படாது.. இது மிக முக்கியமானது.. கவனமாயிருங்கள்.. ஓவரா ஸ்டைல் காட்டினால் வித்தியாசமாக தெரியும்.. கூடியவரையில் சரிவராது..
அடுத்து எல்லோரும் பிழையிடும் விசயம் இதுதான்.. பெண்களை கண்டதும் தங்களிடம் நல்ல விலை கூடிய போன் இருந்தால் அதை எடுத்து ஆங்கிலத்தில் பீற்றிக்கொள்வது.. எதிலயும் அளவா இருக்கவேணும்.. ஓவரா ஆடக்கூடாது.. இப்பிடி ஓவர் பில்டப் பண்ணி கரக்ட் பண்ணுவது சில சமயங்களில் சொதப்பிவிடும்..

ரொம்பநல்லபிள்ளையாக நடிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கதைப்பது போன்றவை லவ்வுறதுக்கு சரிப்படாது.. அது உங்கள் மீது மதிப்பு வைக்க வழி செய்யுமே தவிர லவ் ஏற்படுத்த சரிவராது..
சில பெண்களிடம் நேரடியாக போய் நான் உங்கள காதலிக்கிறன்.. என்று சொல்வது சரிப்படும்.. அதையும் செய்யலாம்.. ஆனால் அதற்கு அந்த பெண்ணின் குணம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அந்த பெண் சகஜமாக எல்லோருடனும் பழகக்கூடியவராயிருந்தால் நேரடியாக சொன்னாலும் ஏற்கவோ, ஏற்காமல் விடவோ செய்வாள்.. ஆனால் எப்பொழுதும் மொனமாக இருக்கும் சில பெண்களிடம் அவ்வாறு சொல்வது பிரச்சினையை ஏற்படுத்தும்.. தற்கொலை நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதால் அதில் கவனமாயிருக்கவும்..

சரி இவ்வளவு நேரமும் என்ன செய்யக்கூடாது என்று பார்த்தோம். இனி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்..

லவ்வர் கிடைக்கவேண்டுமானால் அவாவின் மனசில் இடம்பெறவேண்டும்..
அதற்கு பல வழிகள் இருந்தாலும் சில வழிகள் மட்டுமே காதல் வல்லுனர்களால் (என்னை மாதிரி..ஹிஹி) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..
சிறந்த வழி::-- நேரடியாக லவ்வை சொல்லுவது.. சில பெண்கள் மட்டுமே இதனை ஏற்றுக்கொண்டாலும் இதுவே சிறந்த வழி.. லவ்வை தைதியமாக சொல்லும் திறனே அவர்களை வீழ்த்திவிடும்.. ஆனால் இப்படி சொல்லமுன்னர் அவாவின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.. பயந்தசுபாவமi அல்லது கொஞ்சம் தைதியமானவளா என யோசித்து செயற்படுங்கள்.. இல்லாவிட்டால் தற்கொலை அது இதுனு கோர்ட்கு அலையவேண்டி வரலாம். கவனம்..

அடுத்தது இம்பிரஸ் பண்ணவேண்டும்.. ஏதாவது தினங்களுக்கு வாழ்த்து அனுப்புதல், பிறந்தநாளுக்கு பரிசு அனுப்புதல் என அவாவின் கவனத்தை ஈர்க்கவேண்டும். அவாவின் மனக்குறைகளை களைதல், பிரச்சினைகளை தீர்த்தல் என அக்கறை காட்டவேண்டும். இதனால் அவளின் மனதில் ஆகா என் மீது அக்கறை எடுக்கிறானே.. என்று ஒடு சின்ன அன்பு தோன்றினால் போதும் லவ் சக்சஸ் என்று நம்பலாம்.. அவளின் பார்வையில் அது நட்பாக இல்லாதவரைக்கும் ஓகே..

மேலே மற்றவர்களுக்கு உதவுவதாக காட்டவேண்டாம் என்றேன் அல்லவா.. அதை இப்பொழுது மாற்றுகிறேன்.. அவள் நிற்பதை பார்த்துவிட்டு மட்டும் உதவுவதாக காட்டுவது நீங்கள் நடிக்கிறீர்கள் என்பதை காட்டிவிடும்.. உண்மையாகவே சில உதவிகளை செய்து அந்நிகழ்வு முடிந்தபின் அவளுக்கு தெரிந்தால் அவளின் மனதில் சில நல்லஎண்ணங்களை தோற்றுவிக்கும்.. அவளின் முன் மட்டும் நடிக்கவேண்டாம்.. பிறகு உதவி உபத்திரவமாக மாறிவிடும்..

இதை விட சில ஐடியாக்கள் இருக்கின்றன.. அவை ரகசியமானது... மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டுமே.. அதன் வரவேற்பை பார்த்து பதிவாக இடலாமா என தீர்மானிக்கிறேன்... மின்னஞ்சல் முகவரி:- sriharshan01@gmail.com

.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

5 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

குருவே ... பின்றீங்களே? சூப்பர் பதிவு. தொடர்ந்து கலக்குங்க.

ஹாலிவுட்ரசிகன் said...

// சிறந்த வழி::-- நேரடியாக லவ்வை சொல்லுவது.. சில பெண்கள் மட்டுமே இதனை ஏற்றுக்கொண்டாலும் இதுவே சிறந்த வழி.. //

வாசிக்க ஈஸியா இருந்தாலும் நேருல போய் சொல்ல முன் அடிவயிறு கலங்குதே? ஏன் பாஸ்? நல்லாப் பழகுற அந்தப் பொண்ணு தப்பா நினைத்து விட்டு இனிப் பழகாமல் விட்டு விட்டால் என நினைக்கும் போதே சொல்லும் தைரியம் முழுதும் போய்விடுகிறது. அவ்வ்வ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...

// இதை விட சில ஐடியாக்கள் இருக்கின்றன.. அவை ரகசியமானது... மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டுமே.. அதன் வரவேற்பை பார்த்து பதிவாக இடலாமா என தீர்மானிக்கிறேன்... //

பாஸ் ... என் வரவேற்பு இந்தப் பதிவுக்கு நிச்சயம் உண்டு. எழுதுங்கள்.

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

லவ் ரொம்ப ஈசியும் இல்லை.. கஸ்டமும் இல்லை... எல்லாம் அவரவர் நடவடிக்கையை பொறுத்தது..

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

லவ் இல்லாத லைஃப் இல்லை.. பொண்ணின் குணத்தை தெரிந்துகொண்ட பின்னரே லவ்வ சொல்லணும்..