rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, February 7, 2012

சகுனி பட கதை + ட்ரெயிலர்


கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கார்த்தி  ப்ரீனிதா இணைந்து நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நாயகன் சந்தானம் நாசர் மும்தாஜ் ராதிகா கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

சங்கர் தயாள் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கார்த்தி அரசியலில் இறங்குகிறார்.
அதை பற்றிய கதை என்று தெரிகிறது..

 அதற்கு மேல் தெரியவில்லையா??
கிராமத்திலிருந்து வரும் கார்த்தி சில அரசியலாளர்களை சந்தித்து அவர்களிடையே பல சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஓடம் கட்டி தான் மிக பெரிய அரசியல்வாதியாக திட்டமிடுகிறார். அதற்கான செயல்களிலும் இறங்குகிறார். எவ்வாறு அச்சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை ஒதுக்குகிறார் என்பதுதான் கதையாக இருக்கும்.. 

இந்தளவும் ட்ரெயிலரை பார்த்ததால் புரிந்த கதை.. உண்மைக்கதை வேறுபட்டால் நான் பொறுப்பில்லை..


குரு படத்தின் சாயல் தெரியும் போல் தோன்றுகிறது.. அதற்கிடையே சந்தானத்திற்கு ரஜினி என்றும் கார்த்திக்கு கமல் என்றும் ஹீரோயினுக்கு ஸ்ரீதேவி என பெயர்வைத்திருக்கிறார்கள்.. அது ஏன் என்றுதான் தெரியவில்லை... இப்போதுள்ள தமிழக அரசியல் தலைவர்களை உருவகிக்கும் பாத்திரங்கள் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. கடைசியில கார்த்தி எம்.ஜீ.ஆர் போலவும் ப்ரணிதா ஜெ போலவும் மாறினால்.. என்னாகும் என்று யோசியுங்கள்...
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

படம் மொக்கையா இருந்தாக் கூட பரவாயில்லை. சந்தானம்-கார்த்தி காமெடி நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்.

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

உங்கள மாதிரி ஆக்கள் இருந்தா போதும் எல்லா படமும் ஓடும்.. சிறுத்தை ஓடின மாதிரி..