rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, February 3, 2012

காதல்- காதலிக்காதவர்களுக்கு மட்டும்..

காதல். இந்த வார்த்தை மிக பெரிய அர்த்தத்தை கொண்டது என நினைக்கிறேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அற்புதமான உறவே காதல். உங்களில் பலர் பல காதல்களை சந்தித்திருப்பீர்கள், காதலர்களை சந்தித்திருப்பீர்கள். சிலர் காதல் தோல்விகளையும் சந்தித்திருப்பீர்கள். இன்னும் சிலர் எதுக்குப்பா இந்த தேவையில்லாத வேலை என்றும் நினைப்பார்கள்..(என்னை மாதிரி..ஹிஹி) இந்த பதிவு இவர்கள் எல்லோருக்கும் பொருத்தமானது.. முழுசா வாசியுங்கள்..

லவ்வேர்ஸ் டேக்கு காதலி கிடைக்காதவர்கள் முக்கியமா இத படியுங்கள்..

ஒரு ஆண் தன் காதலியை பார்த்தவுடன்..(காதலி ஆக முதல்) லைட்டா சிரிக்கணும்.. அந்தளவும் தான் அதுக்கு மேல ஓவர் ஆக்சன் பண்ணப்படாது.. அப்புறம் காதல் கப்பல் கவிழ்ந்துவிடும்.. சிரிச்சுட்டு போயிடுங்க..
பிறகு மீண்டும் காணும் போது ஹாய்.. அதோட நிப்பாட்டுங்க.. பதில் வந்திச்சிதுண்டா ஓகே.. இல்லாட்டாலும் பறவாயில்லை.. கூடுதலா ஹாய் என்றதற்கு பதில் வரும்.. அவாவும் ஹாய் சொல்லுவாங்க.. அப்பாடா கிறீன் சிக்னல் விழுந்துட்டுதுண்டு ஓவரா போனா ஆக்சிடன்ட் ஆகிடும்.. அதால பொறுமையா How are you? என்று கேளுங்கள்.. (தயவு செய்து தமிழில் தாங்கள் எப்படி நலமாக இருக்கிறீர்களா?? என்று கேட்டீர்களானால் அந்த காதலை மறக்கவேண்டியதுதான்.. so be careful..) Fineஎன்று பதில் வரும்.. அதோட நிப்பாட்டீட்டு போயிடுங்க.. (இந்தளவும் நடக்குறதுக்கு கொஞ்சம் Smart ஆ இருக்கணும்.. சினிமா ஹீரோ வாறமாதிரி ArmCut பெனியனும், ஜம்பரும் போட்டுக்கிட்டு ஹாய் சொன்னா செருப்படிதான்..) அதால கொஞ்சம்  Smart ஆ போங்க..
பிறகு 10 நாள் கழிச்சு சந்திச்சாலும் அந்த பொண்ணு உங்கள மறக்க மாட்டாள்.. அந்தளவுக்கு நச்சுனு நங்கூரம் விழுந்துடும்.. நங்கூரம் தான் விழுந்திடுச்சே இனி சரளமா கதைப்பம் என்று கிழம்பக்கூடாது.. அமைதியா ஆரம்பிக்கணும்.. 

2010 வரைக்குமே உங்கட போன் நம்பர் என்ன? என்று கேட்கும் பழக்கம் இருந்தது.. இன்று 2012.. அதால போன் நம்பர் கேட்காமல் அவாவின் மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் ஐடி.. போன்றவற்றை கேளுங்கள்.. இப்பவும் போன் நம்பர் கேட்டா கொஞ்சம் வித்தியாசமா பார்க்கக்கூடும்.. 
வாங்கிய பிறகு பேஸ்புக், மின்னஞ்சலில் மெசேஜ் அனுப்பி முதலில் நட்பாக பழகுங்கள்.. 
நட்பு பலமானதும் இந்த டயலாக்க சொல்லுங்க..
"எனக்கு இவ்வளவு காலமும் யார் கிட்டயும் இப்பிடி கசநந யா பேசினதில்லை.. உன் கூட மட்டும் தான் இப்பிடி கதைக்கமுடியுது.. இது என் வாழ்க்கை முழுக்க தொடரணும்னு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிறாய்?? "
(அவா பேசுவதற்கு இடம்கொடுக்க வேண்டும்.. அவாவும் அதே பாதைல வந்தா ஓகே.. 
இல்லாட்டா அப்பிடியே ரூட்ட மாத்தணும்.. பிறகு வேற ஒரு நாள் இதே மாதிரி கொஞ்ச் பீல் பண்ணவேண்டும்.. ஆனால் எப்படியாவது அவாவின் மனசில் இடம்பிடித்து விடலாம்..

அதைவிட்டுட்டு 2000 களில் இருந்த பீலிங்ஸ் காட்டகூடாது..
வாயை அஸ்ட கோணலாக்கி ஒரு ரொமாண்டிக் லுக்கு விடுறது.. ஓவரா வழியுறது.. நல்லவன் மாதிரி காட்டுவதற்கு மற்றவர்களுக்கு உதவுவது.. இதெல்லாம் இப்ப சரி வராது.. 

சரி.. இனி பொண்ணுங்களுக்கான அறிவுரை...(Sorry.. எச்சரிக்கை..)
மேல சொல்லியிருக்கிற மாதிரி யாராச்சும் ஒங்க கிட்ட வந்து ' எனக்கு இவ்வளவு காலமும் யார் கிட்டயும் இப்பிடி கசநந யா பேசினதில்லை.. உன் கூட மட்டும் தான் இப்பிடி கதைக்கமுடியுது.. இது என் வாழ்க்கை முழுக்க தொடரணும்னு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிறாய்?? ' இப்பிடி சொன்னா தயங்காமல் செருப்படி கொடுக்கவும்.. (ஹிஹி.. ஆண்களுக்கு IDEA குடுப்பதும் நானே.. அடி வாங்க வைப்பதும் நானே..) 

நல்ல பையனா தெரிஞ்ச பையனா பாத்து லவ்வுங்கம்மா.. சும்மா ரோட்டில சுத்துறவங்களை லவ்வுறது.. பிறகு அவன் ஏமாத்தீட்டான் எண்டு போட்டு குடும்பத்தோட கும்முறது.. என்ன நியாயம் இது.. அதிலயும் பாடசாலையில் படிக்கிறகாலத்திலயே வீட்ட விட்டு ஓடுறது..(17,18 வயசில..).. சரி ஓடுறதுதான் ஓடுறீங்க யாராவது வேலை பாக்கிற நல்ல பையன் கூட ஓடினாலாவது பறவாயில்லை.. அத விட்டுட்டு வெட்டியா சுத்துற, வேலையில்லாத, ஒண்ணா படிக்கிற பையனோட ஓடினா எப்பிடி?? அந்த பையனால எப்பிடி உழைக்கமுடியும், தன் பெற்றோரின் கையை நம்பி வாழும் அவனுடன் ஓடி என்ன பயன்??.. லவ்வுறதையும் நல்லா யோசிச்சு லவ்வுங்க..

எனக்கே அறிவுரை கேக்க பிடிக்காது.. இவ்வளவு நேரமும் உங்களுக்கு சொல்லுறதால ஏதாச்சும் கோபம் வந்தால் Comment ல் தெரிவியுங்கள்.. 
.
LOVE பண்ணுங்க LIFE ஐ ENJOY பண்ணுங்க.
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இத இதத்தான் தேடிட்டிருந்தேன். ரொம்ப நன்றி குருவே.

kannadhasan said...

Super machi Nalla Irukku da

semma comedy da


Love pantravanukku ethavthu thathuvam irutha Post pannu machi.

kannadhasan said...

I Like U da machi

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

தத்துவம் ஏகப்பட்டது கிடக்கு.. இனி வரும் பதிவுகளில் இடுகிறேன்..