rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, February 1, 2012

நீ தமிழனா??


செம்மொழியான தமிழ்மொழியாம் என்று பாட்டெழுதி உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற இசையமைப்பாளரின் இசையில் குடும்பஅலைவரிசையில் தினமும் ஒலிபரப்பப்பட்டது எல்லோரும் அறிந்ததே.. தமிழர்களுக்கு பெருமையே. ஆனால் இன்று அந்நிலை மாறிவருகிறது. ஆளாளுக்கு தமிழ்மொழி விழா எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் அங்கு கொலுபொம்மையாக வீற்றிருக்கிறதே தவிர வேறெங்கும் இல்லை.. ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று வீராப்பாக பேசக்கொள்ளமட்டும் செய்கிறார்கள்.
 21ம் நூற்றாண்டு-ஆங்கிலம் இன்றி அணுவும் அசையாது.. அணுவளவும் அசையாது என்று மாறிவருகிறது என்று தமிழ் ஆசிரியர்களே கூறிவரும் நிலை தொடர்கிறது. இப்படி இருந்தால் எப்படி ஐயா தமிழ் வாழும்..

தமிழின் நிலையை ஒவ்வொரு துறைரீதியாக பார்ப்போம்..
கல்லூரிகளில் இன்று பெரும்பாலான பாடங்கள் ஆங்கில மொழி மூலத்தில் இடம்பெறுகிறது.. படிப்புக்கு அது தேவைதான் என்றாலும் தமிழ் எங்கள் தாய்மொழி என்ற நினைப்பில்லாமல் தமிழ் தவிர்ந்த அனைத்து பாடங்களிலும் திறமை செலுத்துகின்றனர் தமிழ் கோட்டை விடுகிறன்றனர். அட நம்ப மாணவர்கள் ஆங்கிலம், யப்பானிஸ், சைனிஸ், ஃபிரெஞ்ச், இலங்கையில் சிங்கள வகுப்பிற்கு கூட செல்லுகிறன்றார்கள். ஆனால் தமிழ் வகுப்புக்கு செல்லும் மாணவர்களை கண்டுள்ளீர்களா?? இல்லை என்ற பதிலையே அனைவரும் கூறுவீர்கள்.. அந்தளவு இளக்காரமா நம் தமிழ் மீது??

வீதியில் இறங்கி கடைகளின் பேனர்களை பாருங்கள் புரியும் நம் தமிழின் நிலை. சிறிய சைக்கிள் திருத்தகம், முடிதிருத்தகம் (சலூன்), முதலாகி பெரிய பெரிய நகைக்கடை வரை அனைத்திலும் ஆங்கிலமோகம் கொடிகட்டி பறக்கும். கிராமப்புறத்திலாவது சில தமிழ் பேனர் கடைகளை காணலாம். ஆனால் நகரப்பகுதிகளில் மருந்துக்கும் தமிழ் பேனர்களை காணமுடியாது. ஏன் இந்த ஆங்கில மோகம். பல பாமரமக்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் கடைகளுக்கு செல்லமுடியாமல் அவதிப்படும் நிலை நகர்ப்பகுதியில் காணக்கூடியதாக இருக்கிறது. சில கடைகளில் தமிழ் காணப்பட்டாலும் அது ஒரு மூலையில் சிறிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.. ஏன்??

சினிமாவில் எங்கே தமிழ் ஒழுங்காக பேசத்தெரிந்த நடிகைகள் உள்ளார்கள்? நடிகர்கள் ஓரளவுக்காவது பேசுகிறார்கள்.. நடிகைகளை பொறுத்தவரை தமிங்கிலிசில் (தமிழும் ஆங்கிலமும் சேர்ந்த கலவை.) பேசுவார்கள்.. சரி ஆங்கிலத்தில் பேசுறதானால் பேசுங்கள்.. அதுக்கிடையில தமிழை சேர்த்து கலந்து குழப்பி பார்க்கும் ரசிகனுக்கு 'இவா என்ன பேசுறா??' என்ற கேள்வி கேட்க வைக்கிறார்கள்.. அதுக்குள்ள கொச்சைத்தமிழ் வேறு

உதாரணமாக:- எனகு சென்ன ரொம்ப பிடிகும். நா சென்னைகு வண்டு வண்டு போறன். எனகு டமிழ் ஃபேன்ஸ் ரொம்ப இருகாக...

இதில சொன்னதில ஏதாவது விழங்கிச்சுதா?? இது அண்மையில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி என பீற்றிக்கொள்ளும் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கேட்ட வசனம். 
இதில சொல்ல வந்தது என்னண்டா..:- எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும்.. நான் சென்னைக்கு வந்து வந்து போறனான். எனக்கு தமிழ் ஃபான்ஸ் ரொம்ப இருக்காங்க..

எவ்வளவு வித்தியாசம் ரெண்டு தமிழுக்கும்... ஒழுங்காக தமிழ் என்று சொல்லமுடியாத இவர்கள் தான் இன்று தமிழில் முன்னணி நட்சத்திரங்களாம்.. என்ன கொடுமைபா..

ஒரு மொழி வாழவேண்டுமானால் அம்மொழியை தலைமையாக கொண்ட ஒரு நாடு இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அம்மொழியும் அழிவடையும், நாடும் அழிவடையும்.. இதுவரை அழிவடைந்த மொழிகளை எடுத்து நோக்கினால் இவ் உண்மையை கண்டுகொள்வீர்கள். 
தமிழ்மொழிக்கென்று ஒரு நாடு இல்லை.. தமிழ்நாடு இந்தியாவில் மாநிலமாக இருந்தாலும் (தனிநாடு போல் ஓரளவு ஆட்சி புரிந்தாலும்) அங்கும் தமிழ் அழிவடைகிறது என்பதே நிதர்சனமான உண்மை..

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றான். ஆனால் இன்று தமிழே அழிகிறது..

நம் மொழி
அது தமிழ் மொழி
உலகு போற்றும் செம்மொழி..
அதை வாழ வைப்பதே என் பணி 
என சபதம் பூணுங்கள்..

நன்றி..

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: