rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 25, 2012

ஆசை நிறைவேறுகின்றது..


எல்லோருக்கும் பல பல ஆசைகள் வந்து செல்வதுண்டு. பலருக்கு அவ் ஆசைகள் நிறைவேறுவதில்லை.என் ஆசை குறும்படம் எடுப்பதுதான். ஆனால் எனக்கு வந்த இவ்ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல கதைகள் எழுதியாச்சு. 6 மாதமாக எடுப்பம் எடுப்பம் என்று பிற்போட்டுக்கொண்டு வந்தேன். ஆனால் இப்பொழுது அவ் ஆசைகளை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டதால் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முதலில் நகைச்சுவைப்படம் எடுப்பம் என நினைத்தேன் ஆனால் எழுத ஆரம்பித்தபின்னர் தான் அது சரிவராது என நினைத்து விட்டுவிட்டேன். இப்பொழுது சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக குறும்படம் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தவயசிலயே கருத்து சொல்லுறியா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இக்கருத்துகள் இளையோர்களுக்கானது. இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றியது. ஏன் சமூக கருத்து படம் எடுக்கிறேன் என்றால் சும்மா ஒரு கதை எடுத்து செய்தால் ஒன்று ரெண்டு நாள் திங் பண்ணி பார்த்துவிட்டு மறந்துவிடுவார்கள். ஆனால் சமூகப்படம் என்றும் நிலைத்திருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு இது முதல் படம். உங்களால் முடிந்த அறிவுரைகள், வழிப்படுத்தல்களை வேண்டிநிற்கிறேன். முடிந்தால் சொல்லுங்கள். வாசித்ததற்கு நன்றி...

இவரு தான் ஹீரோவு...

இப்பிடி ஓவரா பில்டப் பண்ணுறவர் தானுங்கோ.. பேரு சங்கீர்த்தனன்.
..
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

கோவை நேரம் said...

குறும்படம் வெற்றி யடைய வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

குறும்படம் வெற்றி யடைய வாழ்த்துக்கள்

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

நன்றி... வருகைக்கும் கருத்துக்கும்..

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.மெல்ல மெல்ல நமது ஊர்களிலும் சினிமா உயிர்பெருகின்றது.பாராட்ட படவேண்டிய விடயம்.