rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, January 16, 2012

ரொம்ப தொல்லையா போச்சு..

பேஸ்புக் சட் பொக்ஸ் ஓப்பின் பண்ணி பாத்தன். ஒருவர் ஹாய் என அனுப்பினார்.. பதில் அனுப்பினேன்.. 

என் ரசிகர் -- வணக்கம் நீங்க என்னைத்தேடி ஸ்ரீ என்று ஃபிளாக் வைச்சிருக்கும் ஹர்ஷன் தானே.. 

நான் -- ஆம். நீங்கள்??

என் ரசிகர் -- நான் உங்கள் தீவிர ரசிகர்.. உங்க ஃபிளாக்ல போடுற எல்லா விசயத்தையும் படிச்சிடுவன்..முக்கியமா (கொஞ்சம் இடைவெளி விட்டு) ஒருக்கா உங்க போன் நம்பர் தாங்களன் என்றார்.. 

சரி என்று என் போன் நம்பர் கொடுத்தேன்..(இதுக்காகவே ஒரு சிம் வாங்கின்னான்.. அம்புட்டு பேமஸ்ல நாங்க..)

பிறகு ஒரு மெசேஜிம் வரவில்லை..
ஒரு சில நிமிடத்தில் போன் ரிங் பண்ணிச்சு.. என் ரசிகர் தான் கதைத்தார்..

என் ரசிகர் -- சொறி.. மெசேஜ்ல எல்லாத்தயும் அனுப்ப ஏலாது.. போன்ல எண்டா கனக்கா கதைக்கலாம்..

நான் -- சரி.. சொல்லுங்க..

என் ரசிகர் --  உங்க பதிவு எண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லா பதிவயும் படிச்சிட்டன்..முக்கியமா.. (5 செக்கன் கழித்து) நீங்க போடுற கிரிக்கெட் மொக்கைஸ் ரொம்ப பிடிக்கும்.. எப்பிடி இப்பிடி மொக்க போடுறீங்க.. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகீட்டுது.. 

நான் -- உண்மையாவா.. அவ்வளவு நல்லாவா இருக்கு..??
 ( என்ர ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் மொக்கைஸ பாத்திட்டு தயவு செய்து இப்பிடி எழுதாத சிரிப்பு வரஇல்லை எண்டு திட்டினவங்கள்..)

என் ரசிகர் --  பின்ன என்ன சார்.. எவ்வளவு நல்லா எழுதியிருக்கிறீங்க..

நான் -- ஆஆ..

என் ரசிகர் --  அதவிட போதிதர்மர்ர வரலாறு நல்லாயிருக்கு.. நீங்க ஆராய்ச்சியாளரா??

நான் -- இல்ல.. அது வேற ஒருவர் எழுதிய கட்டுரையை போட்டனான். கீழ எழுதியிருக்கிறன். பாக்க இல்லையா..??

என் ரசிகர் --  பொறுங்க சார். இப்பதான் பாத்துக்கொண்டிருக்கிறன்..

நான் -- முந்தியே படிச்சதா சொன்னீங்களே..

என் ரசிகர் --  அது முந்தி.. இது இப்ப..

நான் -- நீங்க உண்மையாவே பாராட்ட வந்தீங்களா இல்லையா??

என் ரசிகர் --  (மௌனம்)

நான் -- கேக்கிறன் எல்லே.. சொல்லுங்களன்..

என் ரசிகர் --  சொரி சார்.. போதிதர்மர் தாய்நாட்ட விட்டு ஓடினவர் தானே.. அவர பற்றி ஏன் படிப்பான் எண்டு விட்டுட்டன்.. அத இப்பதான் படிக்கிறன்..

நான் -- ஆஆ.. சரி.. நான் தெரியாமல் பேசீற்றன்..

என் ரசிகர் -- அது பரவாயில்ல சார்.. நீங்க ஏன் இன்னும் நண்பன் விமர்சனம் எழுத இல்லை.. விஜயை பிடிக்காதா??

நான் --  எழுதலாம் எழுதலாம்.. இப்ப என்ன அவசரம்..

என் ரசிகர் -- வேளைக்கு எழுதினா ஹிட் கூடும் தானே.. அதுதான் கேட்டன்..

நான் -- அண்ணே ஹிட் குடுக்க கனக்கா வழி இருக்கு.. நான் இப்ப நண்பனுக்கு போனா உயிரோட திரும்பேலாது.. ரிக்கட் கிடைக்க அடிபட வேண்டியிருக்கும்.. 

என் ரசிகர் -- ஓஓ.. சரி எனக்கு ஒரு உதவி செய்வீங்களா??

நான் --  என்ன.. உதவியா.. (காசு தாறத விட என்னண்டாலும் கேளு)

என் ரசிகர் -- நீங்க கட்டாயம் செய்வன் எண்டு சொல்லுங்க அப்ப சொல்லுறன்..

நான் -- பாப்பம்..

என் ரசிகர் -- தயவு செய்து இனிமேல் எழுதாதீங்கண்ணா..

நான் -- (அடிங்கொய்யால).. எழுதவேணாமா... யாருப்பா நீயு..??

என் ரசிகர் -- எல்லாம் உங்களுக்கு வேண்டியாக்கள் தான்.. 

நான் -- ம்ம்

என் ரசிகர் -- அட மக்கா... என்ன தெரியலயா?? 

நான் -- இல்ல..

என் ரசிகர் -- நான்தாண்டா அம்பலத்தார்.. (பதிவர் அம்பலத்தார் இல்லை... இது நம்மாளு..) என்ன பற்றின அம்பலத்தாரும் கந்தையாண்ணையும் பாட்ட வில்லுப்பாட்டா போட்டிருக்கிறியே. மறந்திட்டியா??

நான் -- அட நம்ம அம்பலத்தார்..

மிகுதி நம் குடும்ப கதை.. அதால கடைய இதோட மூடுறன்..
என்னையும் அம்பலத்தாரையும் சேர்த்த பேஸ்புக்குக்கு நன்றி..
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: