rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, January 30, 2012

தமிழ் சினிமா இருக்கும் வரை...


60, 70 பாட்டு, 10 நிமிசம் கதைனு இருந்த பாகவதர் காலத்தில் இருந்து இன்று 10 பைட்டு, ஹைடெக் வாழ்க்கை கதை வரை காதல் இன்றி படம் நகர்வதில்லை.. அந்த அளவுக்கு காதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாகவதர் காலத்திலிருந்து பசபுகழ் ( நண்பன் விஜய்) வரைக்கும் காதல் எப்பிடி பூந்து விளையாடி இருக்குனு பாப்பம்.. அந்த அந்த காலகட்டத்தில் வந்த முக்கிய படங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது..
 1930 களில் கூடுதலாக (முழுவதும் என்றே சொல்லலாம்) தெய்வீகபடங்களாக காணப்பட்டன. புராண கதைகளை படமாக எடுத்தனர். அதிலும் காதலனும் காதலியும் கிட்டத்தட்ட 10 மீட்டர் தள்ளி தள்ளி நிண்டு கொண்டு கண்ணாலயே காதல் சொல்லுவீனம்.. அதில கிட்டத்தட்ட 50 பாட்டுக்கு மேல இருக்கும். அதுவும் சங்கீத இராகங்களில் காணப்படுவதால் வயது போன கிழடுகள் இன்றும் சில சங்கீத இராகங்களினை ஞாபகத்தில் வைத்திருந்து பாடுவார்கள்.. சில படங்கள் முழுவதும் பாட்டாகவே இருக்கும். இக்காலத்தில் அந்த படங்களை பார்த்தால் கட்டாயம் சட்டைய கிழிச்சு போட்டுட்டு ரோட்டில சுத்துவம்.. மெண்டல் ஆக்கிடும்.

1940, 1950 களில் வந்தவை முன்னையதை விட ஓரளவு பரவாயில்லை. கொஞ்சம் முன்னேறினார்கள் காதலர்கள். முன்னேறுவது என்றது இடையே இருந்த இடைவெளி 10 மீட்டரில் இருந்து 9 மீட்டர் ஆனது.. ஹிஹி.. ஆனால் இதிலும் சங்கீத வாடை குறையவில்லை.. சில படங்களில் கட்டிப்பிடி காட்சிகளும் காணப்பட்டன.. சினிமாவில கட்டிப்பிடிச்சாக்கள் கூடுதலாக கணவன் மனைவியாகவே ஆகியது வேறுகதை.. சில நடிகைகள் வீட்டில் கணவனிடம் குத்துக்கடி வாங்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன் சினிமாவில் கட்டிப்பிடித்ததற்காக..

1960 களில் பயங்கரமுன்னேற்றம். மிகநெருக்கமான காட்சிகள் அமைந்தன. 
பிற்காலத்தை பற்றி சொல்லத்தேவை இல்லை.. மிகமிக நெருக்கமாக காட்சிகள் அமைந்தன. லவ்வர்ஸ் படுத்திருப்பதை கூட காட்டினார்கள், காட்டுகிறார்கள்..

இனி படங்களை பற்றி பாப்பம்.
முன்னைய காலத்தில் வில்லன் ஹீரோயின கடத்தி கொண்டு கார்லி போவார்.. அதுவும் மலைப்பாதையில் ஹீரோ குதிரைல கலைச்சுக்கொண்டு போய் ஹீரோயின காப்பதாத்திவிட்டு குதிரையால கார முட்டி பள்ளத்தில விழுத்துவார்.. வில்லனும் காரும் வெடிச்சு பறப்பார்கள்.. சிலவேளை சொல்லிவைத்தாற்போல் ஹீரோவில் நண்பன் பொலிஸை அழைத்துவருவான். அவர்களும் ஹீரோக்கு நன்றி சொல்லி வில்லனை அழைத்து செல்வார்கள். (யாரும் கம்பிளைண்ட் குடும்காமல் அரெஸ்ட் பண்ணமுடியாதுனு டைரக்டருக்கு தெரியாது போல..) அடுத்த nஷhட் ஹீரோயின வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவார் ஹீரோ.. அங்க ஒரு கிழடு இதுக்காகவே காத்திருந்து அட ராஜாவும் ராணியும் வந்திட்டாங்க.. சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டிட வேண்டியது தான் என்று கூற எல்லோரும் சிரிப்பார்கள்.. மேல இருந்து வணக்கம் அல்லது சுபம் என்ற போர்ட் விழ படம் முடியும்... இது முறை 1970 வரைக்கும் காணப்பட்டது..
1980 களில் கம்பியூட்டர் தொழில்நுட்பம் வளர தொடங்கியதும் டிசைன் டிசைனா படம் காட்டி ஃபிளாஸ்பாக்கில் காதல் கதை கூறினார்கள். அதுக்கு பிறகு பாத்துகாதல் பாக்காமல் காதல், பேசாமல் காதல், ரயில் காதல், பேருந்துகாதல், எண்டு கொஞ்சகாலம் ஓடிச்சுது.. இவ்வளவும் ஓரளவு பணம் உள்ளவர்களுக்pடையேயான காதல்கதைகளாக வந்திச்சுது.. 

1990, 2000 தில் வந்தவற்றில் முக்கால்வாசி கதைகள் பொண்ணு வெளிநாட்டில இருந்து அரைகுறை உடுப்போட இந்தியா வந்ததும் அங்க இருக்கிற மைனர் அவள கடத்துறதும் அத எங்கயோ 100 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிற ஹீரோ உடன பஸ்ஸேறியோ பறந்தோ வந்து மைனர் மேல் விழுந்து அடிச்சு தூள் கிளப்ப ஹீரோயினுக்கு ஹுரோ மேல காதல் வந்துடும் ஆனா ஹீரோக்கு அத்தை மகளோ, மாமன் மகளோ இருப்பாள். ஹீரோ அவள ரவுசு விடுறதும் அது தெரிஞ்சு எல்லோருக்கிடையிலும் சண்டை சமாதானமாகி ஹீரோயின் வெளிநாட்டுக்கு போயிடுவா ஹீரோ அத்தை மகளோடயோ மாமன் மகளோடயோ டூயட் பாடிக்கிட்டு இருப்பார்.
பெரிய பெரிய சோக வசனங்களும் பேசப்படும்

2000 க்கு பிறகு பயங்கர ரெரர் மாற்றங்கள் ஏற்பட்டன. வித்தியாசமான கதைகளும், சின்ன சின்ன கைக்குட்டையளவு உடைகளும் அறிமுகமாயின. எல்லா கதைகளிலும் ஹீரோயின் பக்கா ஜென்டில்மான் குடும்பம், ஹீரோ எங்கயாச்சும் குப்பத்தில குப்பை பொறுக்கி திரியுற ஆளு.. (எப்பிடி எல்லாம் சிந்திக்குறாங்க..) எவ்வளவு மாற்றம் வந்தாலும் ஹீரோயினுக்கு ஆபத்து ஏற்படும் போது காப்பாற்றும் ஹீரோவும், அவ்வாறு காப்பாற்றியதால் ஏற்படும் காதலும் மாறவில்லை.. ஹீரோயினின் அப்பா, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி  ஹீரோவின் குப்பத்து நண்பர்கள் ஹீரோயினை கடத்துவதும் அவர்களை சேர்ப்பதற்காக உயிர்துறப்பதுமாக கதை சென்றது. இது 2000 இன் ஆரம்பத்தில்..

அதன் பின் கல்லூரியில் காதல் என்ற கருவில் படங்கள் வெளியாகின.. கல்லூரிக்காதல் முடிஞ்ச பிறகு ஹீரோ பெரிய ரவுடி.. அவன பாத்து ஹீரோயின் லவ் பண்ணுறா.. பிறகு காதலுக்காக அவன் திருந்துறான் என்று வந்திச்சுது.. அதுவும் ஓடாமல் விட்ட பிறகு சோகமா படத்த முடிச்சா நல்லாயிருக்கும் என்று டைரக்கடர்களின் நினைப்பால் 'காணாப்புணமாக்கிடு பருத்திவீரா' என்றும் ஹீரோ அல்லது ஹீரோயின் புற்றுநோயோ அல்லது வேறு நோயோ வந்து இறப்பதானவும் அதன் பின் மற்றவர் ரோட்டு ரோட்டா சட்டைய கிழிச்சுப்போட்டு நடக்கிற மாதிரியும் வந்திச்சுது..(லவ் பண்ண முதலும் ஹீரோ சட்டைய கிழிச்சிட்டுதான் நடந்தாரு முடியும் போதும் அப்பிடிதான் நடக்கிறாரு..) 

இனி எழுதுவது எவ்வித காழ்ப்புணர்ச்சிக்காகவும் அல்ல.. உண்மையை விளக்குவதற்காக..
பிறகு 2010, 2011 களில் தொழில்நுட்பவளர்ச்சியால் எந்திரன் போன்ற ரோபாட் படங்களையும் 7ம் அறிவு போன்ற பொய்யான படங்களையும் தந்தார்கள்.. எந்திரனில் ரோபாட்டிற்கு உணர்ச்சிகளை ஏற்படுத்த அது லவ் பண்ணுது என்று கொண்டு சென்றார்கள்.. உண்மையில் அது சாத்தியமா என்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது என்பதால் அதை விடலாம். ஆனால் 7ம் அறிவு போன்ற உண்மையற்ற கதையை எதற்காக முருகதாஸ் எடுத்தார்.. போதிதர்மர் என்ற தமிழர் பற்றி 20 நிமிடம் சொல்வதற்காக முழு படத்தையும் தூக்கி வைத்து கொண்டாட முடியாது தானே.. ஒருவருடைய டீஎன்ஏ வை வைத்து அவரையே மீள கொண்டுவரமுடியாது என்ற முதல்படிநிலை ஆராய்ச்சி கூட செய்யாமல் பல ஆராய்ச்சிக்கு பிறகே படம் எடுத்தோம் என்று முருகதாஸ் கூறுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.. அதுவும் போதிதர்மரது சிக்ஸ்பாக் தொடக்கம் வர்மகலை வரை கொண்டுவருவது என்பது மிகபெரிய காதில் பூ சுற்றும் விடயம்... இவ்வாறு சொன்னதற்காக பலர் கோபிப்பது எனக்கு தெரிகிறது.. ஆனாலும் உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.. 

இத்துடன் நிறுத்துகிறேன் பதிவு நீண்டுவிட்டது.. மீண்டும் சந்திப்போம்...
.
.


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

Kumaran said...

இவ்வளவு காமெடியா கலாச்சிட்டு, ஒரு நல்ல சினிமா அலசலா உங்களால மட்டும்தான் கொடுக்க முடியும்..அமர்க்களமா எழுதிட்டீங்க.நன்றி.மேலும் எழுதுங்கோ.

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

மிக்க நன்றி நண்பரே... கருத்துக்கும் பாராட்டுக்கும்..