rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 18, 2012

வேட்டை- பெரிய ஓட்டை- விமர்சனம்


பையா ஹிட், சிறந்த சுறுசுறுப்பான கதை தந்த லிங்குசாமியின் படம் என்பதால் வேட்டை பார்க்க போய் ஏமார்ந்ததுதான் மிச்சம். பையாவில் இருந்த வேகம் சுறுசுறுப்பு மிஸ்ஸிங்.. 
சவசவ என்று இழுத்தடிக்கும் கதை மிகபெரிய கொடுமை ரசிகர்களுக்கு.. 

ஆர்யாவும் மாதவனும் தம்பி, அண்ணன். மாதவன் பயந்தாங்கொள்ளி. ஆர்யா வீரமுள்ளவன். இவர்களின் தந்தை பொலிஸ். அவர் இறக்க அந்த பதவி மாதவனுக்கு கிடைக்கிறது. ரவுடிகளின் ஊரில் பயந்தாங்கொள்ளியான மாதவன் எப்படி முன்னேறுகிறார். ஆர்யா என்ன உதவி செய்தார் என்பது கதை. 

பாக்கியராஜ்ஜின் ஏதோ ஒரு படத்தில் அனுமான் பாக்கியராஜ் வேடத்தில் ரவுடிகளை ஒளிக்க பயந்தாங்கொள்ளி பாக்கியராஜ் பாராட்டுபெறுகிறார். 

அதுபோலவே ஆர்யா ரவுடிகளை துவம்சம் செய்ய அதன் மூலம் மாதவன் பெயர் வாங்குகிறார். பொலிஸ் உயரதிகாரியாக வந்து மாதவனை பாராட்டும் நாசர் ஓவரா கலாய்க்கிறார். அந்த இடத்திற்கு நாசரின் காரக்டர் தேவையா.?? தேவையில்லாமல் நாசரை உள்நுழைத்து இன்னும் கடுப்பேத்துகிறார்.

சமீரா இனி அம்மா வேடத்துக்குதான் பெருந்துவார் போல் இருக்கிறது. அவ்வளவுக்கு முதிர்ந்த முகஅமைப்பு. இந்த படத்தில் அக்கா வேடம் என்பதால் பரவாயில்லை. அமலா அள்ளுகிறார்..

ஆர்யா தான் வீரமுள்ளவன். மாதவன் பயந்தாங்கொள்ளி என்பது தெரிந்து ரவுடிகள் மாதவனை அடிப்பதும், பின் ரவுடிகளை அழிக்க ஆர்யா மாதவனை தயார் செய்யும் காட்சியும் நல்லது பாடல்களும் கேட்ககூடிதாய் இருக்கிறது. 
அமலாவை திருமணம் செய்யவந்த மாப்பிள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு ஆர்யாவை மாப்பிள்ளையாக்கும் கட்டம் நன்றாயிருந்தது..

டவுட்டு
திருமணத்திற்கு 5 நிமிடம் முதல் தான் மாப்பிள்ளையை அழைத்துவருவார்களா?? தாலிகட்ட கொஞ்சநேரம் முதல் பொண்ணதான் அழைச்சு வருவாங்க. மாப்பிள்ளை முதல்லயே மணவறையில் இருப்பார். லாஜிக் மிஸ்ஸிங் லிங்குசார்..

லிங்குசாமியின் படம் என்று பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம். புதுமுக இயக்குனரின் படம் போல் உள்ளது.. பரவாயில்லை ரகமான படம்..

வேட்டை - பெரிய ஓட்டை
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

Kumaran said...

நல்ல விமர்சனம்.மனதில் தோன்றியவற்றை அப்படியே சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நன்றி.

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

வந்தமைக்கு நன்றி...