rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, January 20, 2012

ரஜினி ரசிகன்

தலைப்பை பாத்துட்டு ரஜனி சம்பந்தப்பட்டது என்று ஏமார்ந்தால் நான் பொறுப்பில்லை.. மலையாளமே, தெலுங்கே என்ன மொழி என்று தெரியவில்லை. தமிழாக்கத்தில் கிடைத்தது பார்த்தேன். விமர்சனம் எழுதுகிறேன். பாடகர் மனோ வழங்கும் குமரன் ரஜனி ரசிகன். இதுதான் படத்தின் தலைப்பு. பிரபாஸ், திரிஷா உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆணும் பெண்ணுமாக இரு சிறுவர்கள் நல்ல நண்பர்கள். பக்கத்துபக்கத்து வீடு. ஹீரோயின் சிட்டு. ஹீரோ குமரன். சின்னப்பிள்ளைங்கதான். சிட்டு சொல்லுறத குமரன் செய்வான். ஏதோ ஒரு பிரச்சினைக்காக 2 பேரும் சண்டை போட்டு பிரிகின்றனர். அதுக்காக 12 வருசம் தன்னோட பேசவேண்டாம் என்று கூறுகிறாள் சிட்டு. அதுக்கு என்ன தருவாய் என்று குமரன் கேட்டதற்கு தான் உன்னை கல்யாணம் செய்வதாக கூறுகிறாள்.(11 வயசில கல்யாணக்கதை கதைக்குதுகள்.. டைரக்டருக்கு ஏதாவது மனப்பிரச்சினை இருக்கா??) அவள் பிரிவால் சென்னைக்கு குமரன் ஓடுகிறான். 

இது நடந்தது 1996. மிச்சம் 2008ல. 
சென்னைல குமரன் மிகப்பெரிய ரஜனி ரசிகன்..(எல்லாரும் தான்).. சிட்டை தேடி தன் ஊருக்கு செல்கிறான். செல்லும் வழியில் நண்பனால் ஜெயிலுக்கு செல்கிறான். அங்கே 2 வில்லனை சந்திக்கிறான். அவர்கள் இவனை ஒரு கொலை செய்யும் படியும் அதற்கு 1 கோடி தருவதானவும் கூறுகிறனர். குமரன் ஜெயிலிலிருந்து தப்பி சிட்டை தேடி ஊருக்கு செல்கிறான். சிட்டு குடும்பத்தோடு வேறு ஊர் சென்றுவிட்டதான அறிந்து அவர்களை தேடி சென்னை செல்கிறான். அங்கே தான் கொலை செய்யவேண்டிய ஆளும் இருக்கிறான். கொலை செய்யவேண்டியவன் சிட்டின் அண்ணன் என்று பின்னர் தெரியவருகிறது. சிட்டின் அண்ணன் என்பதால் கொல்லமுடியாமல் தவிக்க அதேநேரம் பணம் கொடுத்தவன் கொலை செய்ய சொல்லி மிரட்ட என்ன செய்தான் குமரன் என்பதுதான் கதை.. 

சவசவ என்று இழுக்காமல் சுறுசுறுப்பாக கதை நகர்வதும் சகிக்கக்கூடிய நடிப்பும் படத்தை முழுமையாக பார்க்க வைக்கிறது. ஆனால் விசர்த்தனமான பேச்சு எரிச்சலை கிளப்புகிறது. ஏதோ பாக்கலாம்..
பாடல்கள் சகிக்கலாம்..
நடிப்பு நல்லது..
கதை பறவாயில்லை..

என்னத்துக்கு இந்த படத்துக்கு ரஜனிரசிகன் என்று பெயர் வைத்தார்கள் என்பது இயக்குனருக்கு மட்டுமே புரிந்த ரகசியம்..

.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: