rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 18, 2012

நண்பன்-ஹிட்-சங்கர்-விஜய்

மாஸ் ஹீரோவான விஜயை கூலான கெட்டப்பில் பார்த்த சந்தோசத்தில் நண்பன் விமர்சனம் எழுதினேன். இப்பொழுது நண்பனுக்கும் 3 இடியட்ஸ்ஸிற்கும் இடையே உள்ள மாற்றங்கள், ஏமாற்றங்களை பார்ப்போம்..அமீர்கான், சர்மான் ஜோசி, மாதவன், போமன் ஹிரானி, ஒமி வைத்யா, கரீனா கபூரின் அசத்தல் நடிப்பில் வெளிவந்து பாரிய வெற்றியை குவித்த 3 இடியட்ஸ் கதையின் தமிழ் உரிமையை வாங்கி நண்பன் என்ற பெயரில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. நண்பனில் யார் யார் என்ன என்ன வேடங்களில் அசத்தினார்கள் என்று பார்ப்போம்.

அமீர்கான் - விஜய்
சர்மான் ஜோசி - ஜீவா
மாதவன் - ஸ்ரீகாந்த்
போமன் ஹிரானி - சத்தியராஜ் 
ஒமி வைத்யா - சத்யன்
கரீனா கபூர் - இலியானா

அமீர்கானின் மொழுக் மொழுக் முகத்தில் காமடியான நடிப்பை இலகுவாக வெளிப்படுத்த முடியும். ஆனால் நண்பனில் விஜய்யால் அவ்வளவாக செய்யமுடியவில்லை.. மீசை வைத்திருந்ததால் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் தமிழில் மாஸ் ஹீரோ இடத்தை பிடித்திருந்த விஜஜை இந்த அப்பாவி வேடத்தில் பார்த்ததுமே சிரிப்பு பற்றிக்கொள்கிறது. மல்ட்டிஹீரோ கலாசாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்ததற்காக விஜய்க்கும் சங்கருக்கும் நன்றி..

சர்மான் ஜோசி போன்ற தோற்றத்தை கொண்ட ஜீவா ஜோசியின் நடிப்பையும் காட்டுகின்றார். எல்லா நேரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ஸ்ரீகாந்த் சதுரங்கம் படம் சமீபத்தில் வெளியானாலும் அதன் மூலம் பெறாத நற்பெயரை இதன் மூலம் பெற்றுள்ளார். ஏனைய முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக அடுத்த இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். ஆனாலும் மாதவன் செய்த நடிப்பை காணமுடியவில்லை..

சத்தியராஜ் இதுவரை எனக்கு பிடிக்காத நடிகராகவே இருந்துவந்ததார். ஆனால் நண்பன் மூலம் ராஜ்ஜின் ரசிகன் ஆகியுள்ளேன். ஹிரானியின் நடிப்பை சமப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். ஆனால் தாடி வளராதபோதும் சேவ் செய்வது ரொம்ப ஓவர்.. மீசை பறிபோனபின் செய்த எக்பிரசன்ஸ் சூப்பர்..

ஒமி வைத்யாவின் நடிப்பை சத்யனால் செய்யமுடியாது என்ற எண்ணத்தை சிதறடித்துள்ளார். ஏனென்றால் இதுவரை காமடி ட்ராக்கில் மட்டும் கொஞ்சநேரம் வந்து போனதால் அவ்வளவாக நடிப்பை வெளிப்படுத்தமுடியாமல் போயிருந்தது. நண்பனில் முழு நேரமாக இருப்பதால் அனைத்துவித நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். அதிலும் ஆசிரியர்தினத்தில் மேடையில் பேசும் பேச்சு சிரிக்கவைக்கிறது. ஆனால் ஆபாசம் பயங்கரமாக இருந்ததால் பெண்களை நெளியவைத்தது. 
ஹிந்தியில் இருந்ததை அப்படியே டப் பண்ணுவதால் ஏற்பட்ட பிரச்சினை என்பதால் நடிகனை எதுவும் கூறமுடியாது. கதையே அப்படி..

இலியானாவும் தன்னால் முடிந்த நடிப்பை தருகிறார். ஆனால் நிலைப்பது கடினம். ஹன்சிகா, தப்சி போன்ற நடிகைகளும் தமன்னா, கார்த்திகா போன்றோருமே தமிழ்ரசிகர்களின் இதயத்தை பிடிக்கும் இக்காலத்தில் எம் இதயத்தில் நிலைக்க கொஞ்சம் கொழுப்பை உடம்பில் ஏற்றுங்கள்.. தயவுசெய்து தலையில் ஏற்றாதீர்கள்..

சங்கர் ஒரு பாட்டுக்கு வந்துபோய் தானும் இப்படத்தில் இருப்பதை காட்டுகிறார். மற்றபடி சங்கருக்கு இப்படத்தில் வேலையில்லை.. ஆனாலும் பாடல்களில் தன் இருப்பை காட்டுகிறார்.

நல்லகதை, சுறுசுறுப்பான திரைக்கதை, சில மாற்றங்களுடன் தமிழுக்கு வந்த ஹிந்திப்படம்.. அவ்வளவு தான் நண்பன்..

ஆனாலும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. சங்கர் ஒரு இடத்தில் பயங்கர கஸ்டப்பட்டிருக்கிறார். அது நடிகர்களுக்கு பெயர் வைக்கும் இடம்..

விஜய் - பஞ்சவன் பாரிவேந்தன்
ஜீவா - சேவல்கொடி செந்தில்
ஸ்ரீகாந்துக்கு - மறந்துவிட்டது ஞாபகப்படுத்தவும்.
சத்யராஜ் - விருமாண்டி சந்தானம்.

இப்பெயர்கள் ரொம்பவும் பொருந்தவில்லை..
அதைவிட விஜயின் உண்மைப்பெயர் பசப்புகழ் ஆம்.. என்ன கொடுமைசாமி இது..இத விட ஹிந்தி பெயர்களையே வைத்திருக்கலாம் 

அமீர்கானுக்கு குங்புக் வாங்குடு.. பசப்புகழைவிட இது பறவாயில்லை..

எப்படியோ நல்ல படம் பார்த்த திருப்தி ஓரளவுக்கு இருக்கிறது..
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: