rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, January 16, 2012

நண்பன்- வித்தியாசமான விமர்சனம்..

சங்கரின் படம் என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் வந்த சங்கர் படம்.. 
3 இடியட்ஸ் என்று ஹிந்தியில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்ச படத்தை வாங்கி தமிழில் தேவையான மாற்றங்களோடு ஹிட் அடித்து கொண்டிருக்கும் நண்பன்.. இதன் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. 
விஜயை தேடி ஸ்ரீகாந்தும் ஜீவாவும் நட்பு நோக்கத்தில் தேட அத்துடன் சத்யன் தன் விரோதத்தை தீர்ப்பதற்காக தேடும் போது இடையே தோன்றும் ஃபிளாஸ்பாக் தான் கதை..

இந்த படத்தில எல்லாரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.. ஆனால் என்னை பொறுத்தவரை விஜய் அந்த மீசை இல்லாமல் நடித்திருந்தால் அப்பாவியான நடிப்பு இன்னும் நன்றாக வெளிப்பட்டிருக்கும்.. காவலனில் பார்த்த அதே கெட்டப் உறுத்துகிறது. 

தியேட்டரில் ஜீவாவின் பெயருக்கு விழும் கைதட்டை விட ஸ்ரீகாந்துக்கு அதிக கைதட்டு விழுகிறது.. 
சத்தியராஜ்சை இந்த படத்தில் மட்டுமே எனக்கு பிடித்திருக்கிறது.. 
இலியானா பஞ்சத்திலிருந்து தப்பிவந்தவர் போல இருக்கிறார்.. ஆனால் தமிழில் இன்னும் பல ரவுண்டு வருவார்.. எதிர்காலம் நல்லாயிருக்கு.. 
சத்யன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்கவைக்கிறார்.. 
பல இடங்களில் கண்கலங்கவைக்கும் கதையம்சம் தமிழிற்கு புதுசு..  

தண்ணீர் தொட்டியில் நிற்கும் காட்சி, ஊட்டி செல்லும் 12 கொண்டைஊசி வளைவு, விஜயை தேடி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அபாரம்.. கமரா ஆங்கிள் நன்றாக உள்ளது.. 
ஆனால் பெரும்பாலும் 3 இடியட்ஸ்ஸில் பாவிக்கப்பட்ட காட்சி அமைப்புகளை பாவித்தது பொருந்தவில்லை..

ராகேஸின் பணம் பற்றிய பேச்சை புரிய வைக்கிறன் என்று செய்யும் அட்டகாசம் சிரிப்பு வெடி.. 

மேலும் ஜீவாவின் அப்பாவை ஸ்கூட்டியில் வைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் காட்சி, ஜீவா ஆஸ்பத்திரியில் இருக்கும் போது ஜீவாவின் தங்கையை ஸ்ரீகாந்த் திருமணம் செய்யபோகிறான் என்பதும், ஜீவாவின் தந்தை ஸ்கூட்டியை ஓடும் காட்சியும் வயிற்றை வலிக்கவைக்கிறது (சிரித்து சிரித்து).

இறுதிகாட்சி (விஜயுடன் சேரும் காட்சி) இந்தியாவில் எடுத்தது போல் தெரியவில்லை.. வேறு எங்கோ எடுத்தது போல் தெரிகிறது..

தமிழர்கள் யாரும் இதுவரை வெளிப்படையாக கக்கூஸ், சிறுநீர் அபிஷேகம், போன்ற வார்த்தைகளை பாவிப்பதில்லை.. (இந்தியாவில் எப்படியோ தெரியவில்லை.. இலங்கையில் பாவிப்பதில்லை.. ஒன்றுக்கு, இரண்டுக்கு என்றுதான் பொதுவில் பேசுவார்கள்.. இதுவரை வந்த படங்களிலும் இவ்வார்த்தைகள் மறைமுகமாகவே பாவிக்கப்பட்டுள்ளன. பொதுவில் பாவிக்கப்படவில்லை..) சங்கர் ஏன் அதை கவனிக்கவில்லை??

காலேஜ் ராகிங் என்பதற்காக உள்ளாடைகளுடன் நிற்பதாகவும், சாதாரண இடங்களிலும் ஜீன்ஸை கழற்றி திரும்பி காட்டுவதும், ஜீவாக்கு வேலை கிடைத்ததற்காக அங்கேயே வைத்து ஜீன்ஸை கழற்றி திரும்பி காட்டுவதும், உறுத்துகிறது..

'சங்கர் பட கிராபிக்ஸ் வேலைகளில் தான் பட்டாம்பூச்சி பறப்பதும், நட்சத்திரங்கள் நிலாவாக மாறும், சட்டையெல்லாம் பூ பூக்கும்' என்று இலியானா கூறிவதும், 
அஸ்கா லஸ்கா பாடலில் சங்கர் டைரக்ட் செய்வது போன்று தோன்றுவதும் செயற்கைத்தனமாக உள்ளது.. 
ஆனால் அஸ்கா லஸ்காவில் விஜய் நடிக்கும் படம் என்று முன்பு கூறப்பட்ட 'காதல்-காவல்' பட ரைட்டில் காணப்படும் கிளாப் பாவிக்கப்ட்டதும், குத்து சாங், வெளிநாட்டு பாட்டு போன்ற வார்த்தைகள் கிளாப்பில் எழுதியிருந்ததும் வித்தியாசத்தன்மை.. சங்கரின் சிந்தனை..

ஹிந்தி படத்தின் கதை தான் அதற்காக பாடல் காட்சிகளில் மிககுறைந்த செலவில் உடுப்பு போட்ட வெளிநாட்டு கலைஞர்கள் தேவையா?? எவ்வளவோ செலவு பண்ணுறீங்க.. உடுப்பு வாங்குறதுக்கு செலவு பண்ணக்கூடாதா?? 

சங்கர் எங்க இருந்துதான் ஜீரோ சைஸ் இடையழகிகளை பிடிக்கிறாரோ தெரியவில்லை.. சந்திரமுகியில் நயன்தாரா, சிவாஜியில் ஸ்ரேயா, எந்திரனில் ஐஸ்வர்யாராய், இப்பொஐது நண்பனில் இலியானா.. எப்பிடியோ தமிழ்சினிமாக்கு பெரிய உபகாரம் செய்திட்டார்.. தமிழ் தெரியாத நடிகையை அறிமுகப்படுத்தி..ஹிஹி.. 

சங்கருடைய அடுத்த படத்திற்கு என்னுடைய ஹீரோயின் பரிந்துரை ஸ்ருதிஹாசன்.. ஜீரோ சைஸ்க்காக.. ( அடுத்த படம் ரஜனியோட சங்கர் செய்தால் ரஜனி - ஸ்ருதிஹாசன் நடிக்கும் என்று போட்டால் எப்படி இருக்கும்..)

ஆகமொத்தம் நண்பன் - வம்புள்ள விண்ணன்..
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

கலைநிலா said...

பகிர்வுக்கு நன்றி .தொடருங்கள் உங்கள் விமர்சனத்தை...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

Thanks..

எழிலருவி said...

//சங்கர் எங்க இருந்துதான் ஜீரோ சைஸ் இடையழகிகளை பிடிக்கிறாரோ தெரியவில்லை.. சந்திரமுகியில் நயன்தாரா// ha.ha..