rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 11, 2012

நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)

இது ஒரு அனுபவப்பகிர்வே..
ஞாயிற்றுக்கிழமை. 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து __ செல்லும் பஸ்ஸில் ஏறினேன். என்ர ராசிக்கு பின்சீட் தான் ஃப்ரீயா இருந்திச்சுது.. சரி வேற வழியில்லைனு பின்சீட்லயே இருந்தேன்.. யன்னல் கரையில் என்ன மாதிரி ஒரு யூத்தும் மற்ற பக்கம் ஒரு வயோதிபரும் இருந்தனர். பறவாயில்லை நிம்மதியாய் இருக்கலாம் என நினைக்கும் போது அதில் ஒரு குண்டு விழுந்தது. சொறி குண்டு (குண்டு பொண்ணு) ஏறியது.. நடத்துனரும் அந்த நேரம் பார்த்து பின்சீட்டில் இடம் இருக்கு அங்;க போய் இருங்க எண்டு சொன்னார்..(ரைமிங் சூப்பர்..) சரி குண்டுக்கும் இடம் குடுப்பம் எண்டு தள்ளி இருந்தன். 
அப்பதான் இந்த படத்தோட ஹீரோயின் உள்ள என்டர் ஆனாங்க.. (எப்பவும் ஹீரோ தானே முதல்ல என்டர் ஆனவேணும்..) ஹீரோயின் கூட அவங்க அம்மாவும் வந்தாங்க.. அதுக்கு பிறகுதான் தெரிஞ்சுது ஹீரோ பஸ்ஸிக்குள்ளயே இருந்திருக்கிறார் என்று.. 
இனி வர்ணனை.. முதல்ல ஹீரோவ பற்றி சொல்லுறன். ஆதவன் சூர்யா கெட்டப்பில் தலைமுடியை கொம்பு போல் வைத்திருந்ததுடன் விருமாண்டி தாடி நல்ல வெள்ளை நிற பையன். ஹீரோவுக்கு ஈடுகொடுக்ககூடிய ஹீரோயின் இப்பதான் யாழ் வந்திருக்கீனம் போல நவீனத்துவத்தின் முழு அடையாளத்துடன் வந்திருந்தாள். ஹீரோ நான் இருந்த சீட்டுக்கு முன் சீட்டில் இருந்திருந்தார். ஹீரோயின் பஸ்ஸில் ஏற்றப்படும் சனத்தின் நெரிசலில் சிக்காமல் இருக்க பின்நோக்கி நகர்ந்து ஹீரோக்கு அருகில் வந்துவிட்டார். ஹீரோவின் கண்ணோட்டம் முழுமையாக ஹீரோயின் மேலேயே நின்றது. பஸ் வெளிக்கிட்டு 5 நிமிடம் கழிந்ததும் ஹீரோ சொனிஎரிக்சன் W8  போனை எடுத்தார். போனை கையில் எடுத்த அடுத்த கணமே காதில வச்சு கதைக்க ஆரம்பிச்சிட்டான். 25 நிமிடம் ஆங்கிலத்தில வெளுத்துவாங்கினான். கதைத்து கொண்டே ஹீரோயினை பார்த்து லுக்கு விட்டார்... (இதை விபரிப்பதானால் சென்சார் A கிடைக்கும்..)
நல்லகாலமாக அந்த பையன் சுன்னாகத்துடன் இறங்கிவிட்டான். இல்லாவிட்டால் நான் வீடு போய் சேரும் வரை இதே காட்சிகளை பார்த்துகொண்டு இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்.. பையன் எழும்பியதும் அந்த இடத்தில் ஹீரோயின் அமர்ந்து மீதி பயணத்தை தொடர்ந்தள். கடைசியில் நான் இறங்கும் இடத்திற்கு முன் நிறுத்தத்தில் ஹீரோயின் இறங்கினாள். (ஹிஹி)

இவ்வளவு நடந்ததில் தவறு யார் பக்கம்..
 என்னை பொறுத்தவரை 3 பேரில் தவறு உள்ளது.. 

முதலாவது பெண்ணின் தாய்.
நாகரீகம் தேவைதான் அதற்காக அவ்வாறு உடை உடுத்தி யாழ்ப்பாணத்தில் நடமாடவிடுவது பொருத்தமில்லை.. இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை (கேவலமாக) யாழ்ப்பாணம்..

இரண்டாவது பெண் மீது..
தன்னுணர்வு வேண்டும். உடை உடுத்துவது அவரவர் விருப்பம். ஆனாலும் மற்றவர்களுக்கு அதனால் ஏற்படும் நிலையையும் யோசிக்கவேண்டும்..

மூன்றாவது அந்த பையன் மீது...
பொது இடத்தில் பெண்களை எப்படி பாவிக்கவேண்டும்.. பார்க்கவேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டமை...

நீங்கள் சொல்வது புரிகிறது.. நான்காவது தவறு என் மீது....
மற்றவர்களின் உரிமையில் தலையிட்டு அதை பதிவாக எழுதுவது.. இது எனக்கு பதிவு மட்டும் இல்லை... எம் கட்டுப்பாட்டை நாம் இழக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு பயன்படுத்தும் ஊடகமாக ஃபிளாக்கை நினைப்பதால் இதில் தெரிவிக்கிறேன்...

.
    
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

K.s.s.Rajh said...

ஹி.ஹி.ஹி.ஹி என்ன கொடுமை சரவணன்

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

சமூகமாற்றம் கொடுமையானதுதான் பாஸ்

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

சமூகமாற்றம் கொடுமையானதுதான் பாஸ்