rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, January 5, 2012

2012 மரணத்தை எதிர்கொள்ள தயாரா??

முதல்ல எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். ஒங்களுக்கு 40 வயது. கல்யாணமாகி 4 பிள்ளைகள். அப்பிடியிருக்க உங்க கிட்ட ஒரு ஆளு வந்து 2012 உலகம் அழியப்போகுதுனு சொன்னா உங்களுக்கு எப்பிடி இருக்கும். அட போப்பா!! வாழுறதவிட சாகுறதே மேல்னு சொல்ல தோணுமா (கல்யாணமாகி 4 பிள்ளைகள்.) ?? இல்ல ஐயோ ஐயோ நான் இன்னும் ஒண்ணையுமே அனுபவிக்கலையேனு அழுவீங்களா?? ( !! அடிங்கொய்யால)
இதையே 18 வயசு.. என்ன மாதிரி ஒரு யூத்து கிட்ட வந்து இதையே சொன்னீங்கனா எப்பிடி இருக்கும்..அவன் தலைல கல்ல போட்டு கொல்லணும் போல இருக்குமா??? இருக்கும்.. அந்த நிலைல தான் நான் இருக்கிறன்... 
அவன் அவன் ஆராய்ச்சி அது இதுனு பண்ணி இன்னும் 450 கோடி வருசம் பூமி இருக்கும். ஒரு பிரச்சினையும் இல்லைனு சொல்லி இருக்கிறான்.. அந்த ஆராய்ச்சிக்கு எத்தின மில்லியன் டொலர் செலவழிச்சிருப்பாங்க.. அந்த காசு எல்லாம் என்ன வீணா?? 

எத்தினயோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களில் சிலர் 1650 காலப்பகுதியில் பெரிய தொழில்நுட்பவசதிகள் காணப்படாத காலத்திலேயே பல உண்மைகளை கூறியுள்ளார்கள். அதை விட இன்று பல தொழில்நுட்பங்களுடன் பல விஞ்ஞானிகள் பல ஆராய்சிகள் செய்ததன் விளைவாக ஒரு பிரச்சினையும் பூமிக்கு வராது என கூறியுள்ளார்கள். ஆஊனா மாயன் காலண்டரில போட்டிருக்குனு சொல்லுறாங்க... ஆனா அவங்களின் குறிப்பு படி அத்துடன் சூரியனின் தூரப்பிரமாணம் மாற்றமடைகிறது. மாயன்களின் 20ற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தொல்லியல் துறையினர் 2 கல்வெட்களையே ஆராய்ச்சி செய்துள்ளார்கள். 2வது கல்வெட்டிலேயே 21.12.2012 உடன் திகதி முடிவதாகவும் கூறப்படுகிறது. சூரியனின் தூரமாறுபாட்டை கொண்ட அடுத்த காலண்டர் மற்றைய கல்வெட்டுகளில் காணப்பட்டால் என்ன செய்வார்கள்.?? மேலும் அவர்களுடைய மொழி, குறியீட்டு விளக்கங்கள் புரிந்துகொள்ள கடினமானது என பல தொல்லியல்துறையினர் கூறுகின்றனர். அவ்வாறிருக்க எப்படி சரியான முறையில் மொழிபெயர்த்து கூறினார்கள்..

மாயன்கள்--
தென்னமெரிக்காவில் வாழ்ந்த அதிசயிக்கத்தக்க நாகரீக வளர்ச்சியை கொண்டவர்கள் மாயன்கள். தமக்கென உருவ குறியீடுகள், எழுத்துருக்களை கொண்ட மக்கள். தமிழர்களின் நாகரீக வளர்ச்சியை சமப்படுத்தும் அளவுக்கு பல அறிவியல் உண்மைகளையும் மாயன் கலண்டரையும் உருவாக்கியவர்கள். மாயன்கள் வாழ்ந்த பகுதிக்கு அண்மையில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும் பலநூறு மீட்டர் நீளமான சிலந்தி, தேள், போன்ற உருவங்களும், பல வடிவங்களும் வேற்றுக்கிரக வாசிகளால் உருவாக்கப்பட்ட சின்னங்கள் என நம்பிக்கை நிலவுகின்றது. அவ்வேற்றுக்கிரகவாசிகளால் மாயன் நாகரீகத்தவர்கள் விண்ணியல் உண்மைகளையும், நாட்காட்டி தயாரிப்பு முறையையும் அறிந்ததாக கொள்ளலாம். இதனோடு ஒப்பிடும் போது தமிழர்கள் புத்திசாலிகள் என கொள்ளலாம். பண்டைய தமிழர்களே நாட்காட்டி, பௌர்ணமி,அமாவாசை மாற்றம், நட்சத்திரங்களின் மாற்றம் என்பவற்றை தாமாகவே கண்டறிந்தனர். (சிலவேளை தமிழர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளின் உதவி கிடைத்திருக்கலாம். அது தெரியாமல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.)


மாயன்களின் கல்வெட்டு உண்மைகள் பற்றி 21.12.2012 தான் தெரியவரும்.. அது உண்மையானால் மாயன்களின் கண்டுபிடிப்பை போற்ற மனிதர்கள் இருக்கமாட்டார்கள்... அதாவது நாம் எல்லோரும் இறந்துவிடுவோம்.. ஆனால் அப்பிடி எதுவும் நடக்காது என நம்பி இப்பதிவை முடிக்கிறேன்...
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

அப்படி எல்லாம் நடக்காது பாஸ். அடுத்த வருஷமும் நீங்க எழுதுவீங்க. நம்பிக்கை வைங்க.

harshan said...

அத தானேப்பா நானும் சொன்னான்...

//ஆனால் அப்பிடி எதுவும் நடக்காது என நம்பி இப்பதிவை முடிக்கிறேன்..//

R.Puratchimani said...

nice post. thanks for your invitation

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

you are welcome sir