rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Monday, January 30, 2012

தமிழ் சினிமா இருக்கும் வரை...


60, 70 பாட்டு, 10 நிமிசம் கதைனு இருந்த பாகவதர் காலத்தில் இருந்து இன்று 10 பைட்டு, ஹைடெக் வாழ்க்கை கதை வரை காதல் இன்றி படம் நகர்வதில்லை.. அந்த அளவுக்கு காதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாகவதர் காலத்திலிருந்து பசபுகழ் ( நண்பன் விஜய்) வரைக்கும் காதல் எப்பிடி பூந்து விளையாடி இருக்குனு பாப்பம்.. அந்த அந்த காலகட்டத்தில் வந்த முக்கிய படங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது..
 1930 களில் கூடுதலாக (முழுவதும் என்றே சொல்லலாம்) தெய்வீகபடங்களாக காணப்பட்டன. புராண கதைகளை படமாக எடுத்தனர். அதிலும் காதலனும் காதலியும் கிட்டத்தட்ட 10 மீட்டர் தள்ளி தள்ளி நிண்டு கொண்டு கண்ணாலயே காதல் சொல்லுவீனம்.. அதில கிட்டத்தட்ட 50 பாட்டுக்கு மேல இருக்கும். அதுவும் சங்கீத இராகங்களில் காணப்படுவதால் வயது போன கிழடுகள் இன்றும் சில சங்கீத இராகங்களினை ஞாபகத்தில் வைத்திருந்து பாடுவார்கள்.. சில படங்கள் முழுவதும் பாட்டாகவே இருக்கும். இக்காலத்தில் அந்த படங்களை பார்த்தால் கட்டாயம் சட்டைய கிழிச்சு போட்டுட்டு ரோட்டில சுத்துவம்.. மெண்டல் ஆக்கிடும்.

1940, 1950 களில் வந்தவை முன்னையதை விட ஓரளவு பரவாயில்லை. கொஞ்சம் முன்னேறினார்கள் காதலர்கள். முன்னேறுவது என்றது இடையே இருந்த இடைவெளி 10 மீட்டரில் இருந்து 9 மீட்டர் ஆனது.. ஹிஹி.. ஆனால் இதிலும் சங்கீத வாடை குறையவில்லை.. சில படங்களில் கட்டிப்பிடி காட்சிகளும் காணப்பட்டன.. சினிமாவில கட்டிப்பிடிச்சாக்கள் கூடுதலாக கணவன் மனைவியாகவே ஆகியது வேறுகதை.. சில நடிகைகள் வீட்டில் கணவனிடம் குத்துக்கடி வாங்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன் சினிமாவில் கட்டிப்பிடித்ததற்காக..

1960 களில் பயங்கரமுன்னேற்றம். மிகநெருக்கமான காட்சிகள் அமைந்தன. 
பிற்காலத்தை பற்றி சொல்லத்தேவை இல்லை.. மிகமிக நெருக்கமாக காட்சிகள் அமைந்தன. லவ்வர்ஸ் படுத்திருப்பதை கூட காட்டினார்கள், காட்டுகிறார்கள்..

இனி படங்களை பற்றி பாப்பம்.
முன்னைய காலத்தில் வில்லன் ஹீரோயின கடத்தி கொண்டு கார்லி போவார்.. அதுவும் மலைப்பாதையில் ஹீரோ குதிரைல கலைச்சுக்கொண்டு போய் ஹீரோயின காப்பதாத்திவிட்டு குதிரையால கார முட்டி பள்ளத்தில விழுத்துவார்.. வில்லனும் காரும் வெடிச்சு பறப்பார்கள்.. சிலவேளை சொல்லிவைத்தாற்போல் ஹீரோவில் நண்பன் பொலிஸை அழைத்துவருவான். அவர்களும் ஹீரோக்கு நன்றி சொல்லி வில்லனை அழைத்து செல்வார்கள். (யாரும் கம்பிளைண்ட் குடும்காமல் அரெஸ்ட் பண்ணமுடியாதுனு டைரக்டருக்கு தெரியாது போல..) அடுத்த nஷhட் ஹீரோயின வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவார் ஹீரோ.. அங்க ஒரு கிழடு இதுக்காகவே காத்திருந்து அட ராஜாவும் ராணியும் வந்திட்டாங்க.. சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டிட வேண்டியது தான் என்று கூற எல்லோரும் சிரிப்பார்கள்.. மேல இருந்து வணக்கம் அல்லது சுபம் என்ற போர்ட் விழ படம் முடியும்... இது முறை 1970 வரைக்கும் காணப்பட்டது..
1980 களில் கம்பியூட்டர் தொழில்நுட்பம் வளர தொடங்கியதும் டிசைன் டிசைனா படம் காட்டி ஃபிளாஸ்பாக்கில் காதல் கதை கூறினார்கள். அதுக்கு பிறகு பாத்துகாதல் பாக்காமல் காதல், பேசாமல் காதல், ரயில் காதல், பேருந்துகாதல், எண்டு கொஞ்சகாலம் ஓடிச்சுது.. இவ்வளவும் ஓரளவு பணம் உள்ளவர்களுக்pடையேயான காதல்கதைகளாக வந்திச்சுது.. 

1990, 2000 தில் வந்தவற்றில் முக்கால்வாசி கதைகள் பொண்ணு வெளிநாட்டில இருந்து அரைகுறை உடுப்போட இந்தியா வந்ததும் அங்க இருக்கிற மைனர் அவள கடத்துறதும் அத எங்கயோ 100 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிற ஹீரோ உடன பஸ்ஸேறியோ பறந்தோ வந்து மைனர் மேல் விழுந்து அடிச்சு தூள் கிளப்ப ஹீரோயினுக்கு ஹுரோ மேல காதல் வந்துடும் ஆனா ஹீரோக்கு அத்தை மகளோ, மாமன் மகளோ இருப்பாள். ஹீரோ அவள ரவுசு விடுறதும் அது தெரிஞ்சு எல்லோருக்கிடையிலும் சண்டை சமாதானமாகி ஹீரோயின் வெளிநாட்டுக்கு போயிடுவா ஹீரோ அத்தை மகளோடயோ மாமன் மகளோடயோ டூயட் பாடிக்கிட்டு இருப்பார்.
பெரிய பெரிய சோக வசனங்களும் பேசப்படும்

2000 க்கு பிறகு பயங்கர ரெரர் மாற்றங்கள் ஏற்பட்டன. வித்தியாசமான கதைகளும், சின்ன சின்ன கைக்குட்டையளவு உடைகளும் அறிமுகமாயின. எல்லா கதைகளிலும் ஹீரோயின் பக்கா ஜென்டில்மான் குடும்பம், ஹீரோ எங்கயாச்சும் குப்பத்தில குப்பை பொறுக்கி திரியுற ஆளு.. (எப்பிடி எல்லாம் சிந்திக்குறாங்க..) எவ்வளவு மாற்றம் வந்தாலும் ஹீரோயினுக்கு ஆபத்து ஏற்படும் போது காப்பாற்றும் ஹீரோவும், அவ்வாறு காப்பாற்றியதால் ஏற்படும் காதலும் மாறவில்லை.. ஹீரோயினின் அப்பா, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி  ஹீரோவின் குப்பத்து நண்பர்கள் ஹீரோயினை கடத்துவதும் அவர்களை சேர்ப்பதற்காக உயிர்துறப்பதுமாக கதை சென்றது. இது 2000 இன் ஆரம்பத்தில்..

அதன் பின் கல்லூரியில் காதல் என்ற கருவில் படங்கள் வெளியாகின.. கல்லூரிக்காதல் முடிஞ்ச பிறகு ஹீரோ பெரிய ரவுடி.. அவன பாத்து ஹீரோயின் லவ் பண்ணுறா.. பிறகு காதலுக்காக அவன் திருந்துறான் என்று வந்திச்சுது.. அதுவும் ஓடாமல் விட்ட பிறகு சோகமா படத்த முடிச்சா நல்லாயிருக்கும் என்று டைரக்கடர்களின் நினைப்பால் 'காணாப்புணமாக்கிடு பருத்திவீரா' என்றும் ஹீரோ அல்லது ஹீரோயின் புற்றுநோயோ அல்லது வேறு நோயோ வந்து இறப்பதானவும் அதன் பின் மற்றவர் ரோட்டு ரோட்டா சட்டைய கிழிச்சுப்போட்டு நடக்கிற மாதிரியும் வந்திச்சுது..(லவ் பண்ண முதலும் ஹீரோ சட்டைய கிழிச்சிட்டுதான் நடந்தாரு முடியும் போதும் அப்பிடிதான் நடக்கிறாரு..) 

இனி எழுதுவது எவ்வித காழ்ப்புணர்ச்சிக்காகவும் அல்ல.. உண்மையை விளக்குவதற்காக..
பிறகு 2010, 2011 களில் தொழில்நுட்பவளர்ச்சியால் எந்திரன் போன்ற ரோபாட் படங்களையும் 7ம் அறிவு போன்ற பொய்யான படங்களையும் தந்தார்கள்.. எந்திரனில் ரோபாட்டிற்கு உணர்ச்சிகளை ஏற்படுத்த அது லவ் பண்ணுது என்று கொண்டு சென்றார்கள்.. உண்மையில் அது சாத்தியமா என்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது என்பதால் அதை விடலாம். ஆனால் 7ம் அறிவு போன்ற உண்மையற்ற கதையை எதற்காக முருகதாஸ் எடுத்தார்.. போதிதர்மர் என்ற தமிழர் பற்றி 20 நிமிடம் சொல்வதற்காக முழு படத்தையும் தூக்கி வைத்து கொண்டாட முடியாது தானே.. ஒருவருடைய டீஎன்ஏ வை வைத்து அவரையே மீள கொண்டுவரமுடியாது என்ற முதல்படிநிலை ஆராய்ச்சி கூட செய்யாமல் பல ஆராய்ச்சிக்கு பிறகே படம் எடுத்தோம் என்று முருகதாஸ் கூறுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.. அதுவும் போதிதர்மரது சிக்ஸ்பாக் தொடக்கம் வர்மகலை வரை கொண்டுவருவது என்பது மிகபெரிய காதில் பூ சுற்றும் விடயம்... இவ்வாறு சொன்னதற்காக பலர் கோபிப்பது எனக்கு தெரிகிறது.. ஆனாலும் உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.. 

இத்துடன் நிறுத்துகிறேன் பதிவு நீண்டுவிட்டது.. மீண்டும் சந்திப்போம்...
.
.


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Sunday, January 29, 2012

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்

' இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
 ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
  
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.'
 இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
 எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நன்றி:  Exibs & L R Sreenivasen Mylapore  & "*~இந்து நெறி~*" in Facebook

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, January 27, 2012

நம்மாளு கெட்டிக்கார குட்டிக்குரங்கல்லே..

புகைப்படங்கள் போல் கதை சொல்லக்கூடிய ஊடகம் எதுவுமில்லை... அதில் செய்த முயற்சிகள்...
என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்...

அதிகாரிங்க செஞ்சா தப்பில்லை... நோ பார்க்கிங்கில் அரசவாகனம்..

உழைப்புக்கு வயதில்லை...

கம்பியூட்டர்னா என்னனு இவர கேட்டா சொல்லுவாரு... கம்பியூட்டர் கடைக்கு முன்னால் பிச்சைக்காரர்...

ZOOM பண்ணி பாருங்க..

This Only For Dear -- ஆஹா.. அருமை

நட்பு

நண்பன் ரிலீஸ்...

உழைப்பிற்கு ஊனம் தடையல்ல... கையிழந்த பின்னும் எண்ணெய் விற்கும் கிழவி... (i proud of u patti...)

இது தான் தமிழன் என்பதை நிருபிக்க சிறந்த வழி... நம்மாளு கெட்டிக்கார குட்டிக்குரங்கல்லே...
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்...


பாடசாலை வாழ்க்கை தொடக்கம் பாடையில் போகும் வரை பல நண்பர்கள் எமக்கு அறிமுகவார்கள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று அலசி ஆராயாமல் அவர்களை நம்புவது மிகவும் ஆபத்தானது. சும்மா ஃப்ரெண்டுதானே எண்டு பல ரகசிய விடயங்களை பகிர்ந்து பின் பல சிக்கலில் மாட்டுவோரும் உண்டு. அதை பற்றி இப்பொழுது பேசல.. 
இப்பொழுது நட்பு பற்றி பேசத்தான் வந்தன்..

இருவர் இடையே ஏற்படும் புரிதலே நட்பு என்று இலகுவாக விளக்கலாம். இது வயது, மொழி, மதம், எல்லாவற்றையும் கடந்தது. காதலுக்கு மட்டுமே மொழி இல்லை மதம் இல்லை என்பர்.. காதலுக்கு முன்னரே ஏற்படுவது நட்பு.. உண்மையான நட்பு இன்பத்தில் திளைக்கவும் துன்பத்தில் தோள் கொடுக்கவும் வரவேண்டும். அவ்வாறு இல்லாதது நட்பு இல்லை.. 

ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் நட்பு சாதாரணமாக தோன்றக்கூடியது. ஆனால் ஆண்-பெண் நட்பு பல புரிதல்களுக்கிடையேயே உருவாகின்றது.. ரொம்ப கஸ்டமான காரியம் இதுதான். ஆனால் இந்நட்பு தோன்றினால் பிரிவது குதிரைக்கொம்புதான். 

நட்பு
நெஞ்சூடு துன்பமிருந்தாலும் அதை கண்ணூடு கண்டு களைபவனே நண்பன்..


இவ்வளவும் குறும்படம் பற்றி யோசிக்கும் போது தோன்றியவையே.. 2 நண்பர்களை பற்றிய கதையே குறும்படமாக உருவாகிறது.. விரைவில் இணையத்தில்...
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

போராளி - என் பார்வையில்


ஆரம்பத்தில் இருகுதிரையில் கால் வைத்து வருவது போல் கனவு கண்டு எழுந்த சசிகுமார் நண்பனையும் அழைத்துக்கொண்டு ஓடுகிறான். வேறொருவன் துரத்துகிறான். அவனை அடித்து போட்டுவிட்டு பஸ்ஸேறி செல்கிறார்கள். சாப்பிட நிற்கும்போது ஆரம்பகுத்துப்பாட்டு... நல்ல ஆரம்பத்துடன் ஆரம்பிக்கிறது படம்...

குடும்பத்திடையே நடக்கும் சிறு சண்டைகளை கொண்டதான சாந்தி அவள் கணவன், சிறு பிள்ளை குடும்பத்தில் ஆரம்பிக்கும் சென்னை காட்சி.. ஆரம்பத்திலேயே நல்ல படமாயிருக்கும் என்ற நினைப்பை ஏற்படுத்துகிறது. அதற்கிடையே பச்சிலேர்ஸ்க்கு வீடு கொடுக்கப்பட மாட்டாது என்ற கருத்தும் பதிக்கப்படுகிறது. சென்னையில் கஞ்சாகருப்பை தேடி வீட்டுக்கு செல்லும் காட்சி சூப்பர்... கதவை உடைக்கும் போது கதவு திறக்கப்பட கிழவிக்கு கிஸ் கொடுக்க செல்லும்போது சசிக்குமாரை நண்பன் பிடித்திழுக்கும் காட்சி அமோகம்.. 

புலிவேசம் போட்டதற்காக புலி உறுமுது பாடல் போடுவது ஏன்??.. தன்வாடகை வீட்டுக்கு ஜன்னலை கழட்டி உள் நுழைவது சிரிப்பு... 

பச்சிலர்களின் ஒழுக்கத்துக்கு கலாம், அண்ணாஹசாரே, காமராசரை உதாரணமாக காட்டுவது பச்சிலர்களின் சிறப்பு... 

5 நிமிசம் சண்டை போட்டு காலணியை திரும்பி பாக்கவைத்துவிட்டு 5 நிமிசத்திலயே இவ்வளவுனா ஆயுசு முடியுறதுக்குள்ள எவ்வளவு செய்வம் என்பது ரசிக்கமுடிகிறது..
பெற்லோல் பங்கில் வேலைக்கு சேரும் சசியும் நண்பனும் சிந்தித்து செயற்பட்டு பங்கில் வேலை முடிந்த பின் பிள்iயார் கட்டணசேவை என்றசேவையை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார்கள்... சசியின் நண்பன் கவிதை சொல்லிவிட்டு 3 புள்ளி ஒரு ஆச்சரியகுறி என்று சொல்வது எப்பொழுதும் சிரிக்கவைக்கிறது.
அதற்கிடையே அவர்கள் மெண்டல் பேசண்ட்ஸ் என்று ஊரில் இருந்து உறவினர்கள் வருகிறார்கள்.. உண்மையில் சசிகுமார் மெண்டலா அல்லது சொத்துக்காக அவ்வாறு கூறுகிறார்களா என்ற மிக சுவாரசியமாக கதைக்களத்துடன் செல்கிறது 

போராளி... குடும்பத்தோடு சந்தோசமாக பார்க்கவேண்டிய படம்.. 
இறுதியில் சசி தன் பிரச்சினைகளை முடித்தபின் அவனது நண்பனை தேடி அவன் உறவினர்கள் ஆந்திராவில் இருந்து வருவதுடன் படம் முடிவடைகிறது.. ஆக இதன் 2ம் பாகம் வரும்போல.. 
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, January 25, 2012

ஆசை நிறைவேறுகின்றது..


எல்லோருக்கும் பல பல ஆசைகள் வந்து செல்வதுண்டு. பலருக்கு அவ் ஆசைகள் நிறைவேறுவதில்லை.என் ஆசை குறும்படம் எடுப்பதுதான். ஆனால் எனக்கு வந்த இவ்ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல கதைகள் எழுதியாச்சு. 6 மாதமாக எடுப்பம் எடுப்பம் என்று பிற்போட்டுக்கொண்டு வந்தேன். ஆனால் இப்பொழுது அவ் ஆசைகளை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டதால் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முதலில் நகைச்சுவைப்படம் எடுப்பம் என நினைத்தேன் ஆனால் எழுத ஆரம்பித்தபின்னர் தான் அது சரிவராது என நினைத்து விட்டுவிட்டேன். இப்பொழுது சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக குறும்படம் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தவயசிலயே கருத்து சொல்லுறியா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இக்கருத்துகள் இளையோர்களுக்கானது. இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றியது. ஏன் சமூக கருத்து படம் எடுக்கிறேன் என்றால் சும்மா ஒரு கதை எடுத்து செய்தால் ஒன்று ரெண்டு நாள் திங் பண்ணி பார்த்துவிட்டு மறந்துவிடுவார்கள். ஆனால் சமூகப்படம் என்றும் நிலைத்திருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு இது முதல் படம். உங்களால் முடிந்த அறிவுரைகள், வழிப்படுத்தல்களை வேண்டிநிற்கிறேன். முடிந்தால் சொல்லுங்கள். வாசித்ததற்கு நன்றி...

இவரு தான் ஹீரோவு...

இப்பிடி ஓவரா பில்டப் பண்ணுறவர் தானுங்கோ.. பேரு சங்கீர்த்தனன்.
..
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

யாழுக்கு இரு இமயங்களின் வருமை...


கலாம் யாழ் இந்துக்கல்லூரிக்கு வந்தபோது..

கலாம் வந்தபோது அவர சுத்தி 40மீட்டருக்கு யாராலும் நுழையமுடியவில்லை.. ஆனால் மாணவர்களை சந்திக்க வந்ததாக பில்டப்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சரத் கொட்டகம யாழ் இந்துக்கல்லூரிக்கு வந்தபோது..


இலங்கையின் பொது பறவைகள் என்ற தமிழ் நூலை வெளியிட்டபோது..
 
சரத் கொட்டகம உரையாற்றும்போது..
 கொட்டகம எம்மை விட்டு விலகவே இல்லை... தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Monday, January 23, 2012

கலாம் வந்தார் கவிதை சொன்னார்...


முன்னாள் இந்திய ஜனாதிபதி (குடியரசுத்தலைவர்) மேதகு அப்துல் கலாம் யாழ்ப்பாணம் வாறார் எண்டதும் பல எதிர்பார்ப்புகள், ஆர்வம் அதிகமானது. பாடசாலையின் இயற்கை அவதானிப்புக்கழக நிறுவுனர் என்ற வகையில் எனக்கும் பாடசாலை மூலம் அழைப்பு கிடைத்தது. சரி போவம் என்று யாழ் இந்துக்கல்லூரிக்கு 1.30 சென்றடைந்தோம். பலத்த பாதுகாப்பு. பொலிசாரின் தடவல் சோதனைகளை கடந்து உள்ளே சென்றால் ஏன்ரா போனோம் என்ற எண்ணம் வந்ததுதான் உண்மை. ஏனென்றால் அந்தளவுக்கு யாழ் இந்து மாணவர்கள் இடம்பிடித்து வைத்திருந்தார்கள். எமக்கு சொல்லப்பட்டது ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 5 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் வரவேண்டும் என்பதே. அதிலும் இயற்கை அவதானிப்பு கழகத்திற்கு ஸ்பெசல் பேர்மிசன் வேறு. அப்படி இருக்க இவ்வளவு கூட்டம் வந்திருக்கதேவையில்லையே என்ற ஆதங்கத்துடன் உட்சென்றதும் பின்னால போ பின்னால போ என்று ஆசிரியரின் விரட்டலால் பின்னோக்கி சென்றோம். (கலாம் எல்லோரும் முன்னேற வேண்டும் என்றார். இவர் பின்னுக்கு போ என்றார்.. ரொம்ப வித்தியாசம் தான்..) கடைசி வரிசையில் கடைசி கதிரைல ஒக்காந்திருந்தது நான் தான். பிறகு நம்ம குள்ளநரி புத்தி வேலை செய்து நடுவில் இடம்பிடித்தது வேறு கதை. சரி 2.55 க்கு விழா தொடங்கும் என்றார்கள். 3.35 க்கு கலாம் உள்ளே வந்தார். 

சரி சும்மா பாராட்டினா போதும் தானே. ஒரு தமிழன் முன்னுக்கு வந்து நல்லுதாரணமாய் இருந்தது பெருமைதான். ஆனால் அதுக்காக இவ்வளவு புகழ்ச்சி கூடாது. ( இந்தியா மக்களே இந்த புகழ்ச்சியை கண்ணெதிரே காட்டுவதானால் கருணாநிதிக்கு நிகழ்ந்த பாராட்டு விழாக்களை பார்த்தீர்களானால் தெரியும். அதே போல் இங்கும் புகழ்ந்து தள்ளினார்கள். ) இந்தளவும் மங்கல விளக்கேற்றும் முன். சரி போனா போகட்டும் என்று பார்த்தால் மேடையேறி எல்லோரும் அமர்ந்த பின்னும் மீண்டும் ஆரம்பித்தார்கள்.. என்ன கொடுமையோ இப்பிடி மாட்டீட்டன் என்று நொந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமான பாராட்டு, கௌரவிப்பு முடிந்து கலாம் பேச ஆரம்பித்தார். விவேகானந்தர் சகோதர சகோதரிகளே என்று பேச ஆரம்பிப்பது போல் கலாம் நண்பர்களே என்று ஆரம்பித்தது நல்ல தொடக்கம். (அப்ப பெண்களை விட்டுவிட்டீர்களா கலாம் சார்.?? நண்பிகளே என்றும் சொல்லியிருக் கலாம். அட இங்கயும் கலாம் தானா??)

எது எப்படியோ.. நல்ல பேச்சு.. கனவு காணுங்கள், வாழ்க்கையில் வெற்றி பெற போன்ற விடயங்களை பற்றி சொன்னார். அதில் 5 கவிதைகள் படித்தார். அதோடு எம்மையும் சேர்ந்து படிக்க சொன்னார். மேலும் மாணவர்களில் 6 பேரை அழைத்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் கூறினார். 4.30 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.

எல்லாம் சரி. கலாம் வந்ததன் உண்மையான நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Sunday, January 22, 2012

ட்வீட்டுகள் மொக்கைஸ்

ட்வீட்டரில் தொடர-- @iamharshan

என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது # தத்துவம்.
--
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது. # பேய் க்கெல்லாம் சர்டிபிகட் தரமாட்டாங்க
--
மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும். # வாழ்க்கையே ஒரு நாடகமேடை.
--
முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா? # நசிஞ்சிரும்.. கவனம்..
--
ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் 'ஹட்ச்'ன்னுதான் வரும். # சுட்டது.
--
நீ சிரித்தால் எனக்கு Ringing Tone  .. நீ கோபப்பட்டால் Vibration  உன் கண்கள் கலங்கினால் Battery Low  நீ என்னை மறந்தால் என் இதயம் Switch Off #LOVE
--
SMS னா என்ன? S-சிங்கம் அனுப்பி M-மங்கி படிக்கும் S-Small File ...# தமிழண்டா..
--

ஒரு பொண்ணு போட்டோவில தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரித்தான் இருப்பா..##  இதுதாண்டா வாழ்க்கை
--
எல்லா பொண்ணுங்களுக்கும் சூர்யாவ பிடிக்குமிண்டா நம்ம கதி?? ## அதோ கதிதானா??
--
வேட்டை பாத்தநேரத்துக்கு சுறா பாத்திருக்கலாம்..# Kolaiveri
--
நான் காலை 9.00 மணி வரை தூங்குவேன். அப்பதானே கனவு காணலாம். # ஏனென்றால் கனவு காணுங்கள்..by அப்துல்கலாம்.. ## பெரியவங்க சொன்னத கேக்கணும்..
--
கொழுப்ப உடம்பில ஏத்துங்க ரசிகர் சந்தோசப்படுவாங்க.. # தலையில ஏத்தாதீங்க தயாரிப்பாளர் கடுப்பாகிடுவாரு.. ## இலியானா
--
@ActorPOWERSTAR பவர்ஸ்டார் படங்களை காலண்டரில் போட்டு வெளியிட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம்..# சத்தியமாக..
--
ஸ்பைடர் கடிச்சதால ஸ்பைடர்மான் வந்தாரு.. அப்ப Dog கடிச்சா Dog man வருவாரா?? # டவுட்டு
--
-ஆனந்ததொல்லை- வரலனு என் -நண்பன் - என்னை -கொள்ளைக்காரன் - போல் -வேட்டை- யாடுகிறான்.. 4 பட பேரையும் சேத்தாச்சு..
--
நயன்.. ஸ்ரேயா.. ஐஸ்வர்யாராய்... இப்ப இலியானா... எல்லாமே ஒல்லி இடையழகிகள்... அப்ப அடுத்தது ஸ்ருதிஹாசன் தானே.. @இயக்குனர் சங்கர்
--
இனி வாற மச்சில சேவாக்குக்கு பதிலா பவர்ஸ்டாரையும் டிராவிட்டுக்கு பதிலா கேப்டனையும் இறக்கிவிட்டாதான் சரியா இருக்கும்..

..
எல்லாம் கம்பூட்டர் முன்னால ஒக்காந்து யோசிச்சவை.. சுட்டுப்புடாதீங்க... போடுறதிண்டா என்ட ட்வீட்டர் ஐடி யும் சேத்து போடுங்க....


ஏற்கனவே இவை பதிவிடப்பட்டவையே.. சில கணனிகளில் அந்த பதிவை பார்க்கமுடியவில்லை என்பதாலும். எனது டாஸ்மோட்டில் அந்த பதிவை அழிக்கமுடியவில்லை என்பதாலும் அதை மீள்பதிவிட்டுள்ளேன்.. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

பேஸ்புக் டைம்லைன் நல்லதா? கெட்டதா?..

பேஸ்புக்ல டைம்லைன் அறிமுகப்படுத்தி சிலவாரங்களாகி விட்டன. ஆனால் பலர் அதன் வசதிகளை அறியாமல், செயற்படுத்தாமல் இருக்கிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். இவ்வளவு காலமும் காணப்பட்ட சாதாரணதோற்றம் பல வசதியீனங்களை கொண்டிருந்தது. முக்கியமாக இவ்வளவு காலமும் செய்யப்பட்ட செயற்பாடுகளின் தொடர்ச்சி தன்மை குறைவு. வேறுபடுத்தல் இன்றி அடுத்ததுத்து காணப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் செய்த செயற்பாடுகளை அறிய ஒவ்வொன்றாக தேடிப்பார்த்துதான் அறியமுடியும். ஆனால் டைம்லைன் மூலம் அந்த பிரச்சினை தீர்கிறது. ஒவ்வொரு ஆண்டுவாரியாகவும் அந்த அந்த ஆண்டில் மாதவாரியாகவும் பிரிக்கப்பட்டிருப்பதால் சுலபமாக காலரீதியான தேடலை மேற்கொள்ளமுடியும். மேலும் அட்டவணை வடிவில் காணப்படுவது நல்ல வடிவம். அத்துடன் Apps, Status Updates போன்ற வேறுபாடுகளும் காணப்படுவதால் மிக இலகுவாக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் தீமையும் இருக்கும் என்பதற்கேற்ப மற்றவர்கள் எமது பேஸ்புக் செயற்பாடுகளை காலவாரியாக இலகுவாக அறிய வாய்ப்பு இதன்மூலம் ஏற்படுத்தப்படுவது தீமையே. மற்றபடி டைம்லைன் நல்லது..

டைம்லைனை ஐ பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்.

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

ட்வீட்டுகள் சில


எல்லாம் என் ட்வீட்ஸ்.. தொடர்வதற்கு... @iamharshan


என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது # தத்துவம்.
~~~~~~~~~~~~~~~~
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது. # பேய் க்கெல்லாம் சர்டிபிகட் தரமாட்டாங்க
~~~~~~~~~~~~~~~~
மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும். # வாழ்க்கையே ஒரு நாடகமேடை.
~~~~~~~~~~~~~~~~
முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா? # நசிஞ்சிரும்.. கவனம்..
~~~~~~~~~~~~~~~~
ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும். #சுட்டது.
~~~~~~~~~~~~~~~~
நீ சிரித்தால் எனக்கு Ringing Tone நீ கோபப்பட்டால் Vibration உன் கண்கள் கலங்கினால் Battery Low நீ என்னை மறந்தால் என் இதயம் Switch Off 
~~~~~~~~~~~~~~~~
SMS னா என்ன? S-சிங்கம் அனுப்பி M-மங்கி படிக்கும் S-Small File.......#தமிழண்டா..
~~~~~~~~~~~~~~~~
ஒரு பொண்ணு போட்டோவில தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரித்தான் இருப்பா..## இதுதாண்டா வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~
எல்லா பொண்ணுங்களுக்கும் சூர்யாவ பிடிக்குமிண்டா நம்ம கதி?? ## அதோ கதிதானா??
~~~~~~~~~~~~~~~~
வேட்டை பாத்தநேரத்துக்கு சுறா பாத்திருக்கலாம்..# Kolaiveri
~~~~~~~~~~~~~~~~
நான் காலை 9.00 மணி வரை தூங்குவேன். அப்பதானே கனவு காணலாம். # ஏனென்றால் கனவு காணுங்கள்..by அப்துல்கலாம்.. ## பெரியவங்க சொன்னத கேக்கணும்..
~~~~~~~~~~~~~~~~
ஹிப்நோட்டிசம் என்பது ஹிப்பை (HIP) நோட் (NOTE) பண்ணுவது என்கிறான் நண்பன்.. # டவுட்டு
~~~~~~~~~~~~~~~~
கொழுப்ப உடம்பில ஏத்துங்க ரசிகர் சந்தோசப்படுவாங்க.. # தலையில ஏத்தாதீங்க தயாரிப்பாளர் கடுப்பாகிடுவாரு.. ## இலியானா
~~~~~~~~~~~~~~~~
ஸ்பைடர் கடிச்சதால ஸ்பைடர்மான் வந்தாரு.. அப்ப Dog கடிச்சா Dog man வருவாரா?? # டவுட்டு
~~~~~~~~~~~~~~~~
ஆனந்ததொல்லை வரலனு என் நண்பன் என்னை கொள்ளைக்காரன் போல் வேட்டையாடுகிறான்...
~~~~~~~~~~~~~~~~
நயன்.. ஸ்ரேயா.. ஐஸ்வர்யாராய்... இப்ப இலியானா... எல்லாமே ஒல்லி இடையழகிகள்... அப்ப அடுத்தது ஸ்ருதிஹாசன் தானே.. @இயக்குனர் சங்கர்
~~~~~~~~~~~~~~~~
இனி வாற மச்சில சேவாக்குக்கு பதிலா பவர்ஸ்டாரையும் டிராவிட்டுக்கு பதிலா கேப்டனையும் இறக்கிவிட்டாதான் சரியா இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~
பேச்சுலர் பொடியன்களின் வாழ்க்கை சிறு கடதாசிகளில் உள்ளது...#சமையல் குறிப்புகளாக.
~~~~~~~~~~~~~~~~
இதுவரை சமையல்குறிப்பு போனில் தான் சொல்லப்பட்டது சொந்தங்களுக்கு. இப்போ டெக்னோலஜி வளந்துட்டுது. லயும் சொல்ல ஆரம்பிச்சாச்சு.
~~~~~~~~~~~~~~~~
ரோட்டில போகும் போது பொண்ணுங்களோட வாய அவதானிச்சீங்கனா தெரியும்... எப்பவும் அஸ்டகோணலாவே இருக்கும்.. அது ஏன்? # Doubt tu
~~~~~~~~~~~~~~~~
மாயன்களின் கல்வெட்டு உண்மையானால் மாயன்களின் கண்டுபிடிப்பை போற்ற மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அன்று நாம் எல்லோரும் இறந்துவிடுவோம். # he he

எல்லாம் கம்பூட்டர் முன்னால ஒக்காந்து யோசிச்சவை.. சுட்டுப்புடாதீங்க... போடுறதிண்டா என்ட ட்வீட்டர் ஐடி யும் சேத்து போடுங்க..

.


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Saturday, January 21, 2012

நான் TR ரு.. என்ன கேக்க நீ யாரு...

நான் TR ரு.. என்னக் கேக்க நீ யாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் ஒரு தாடி யாருடா...
அந்த லலித் மோடி யாருடா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏ டோனீ
அடுத்த மச்சுக்கு நீ வேணாம் போ நீ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஏ பவரு
இந்த சென்னைக்கே நான் டவரு..
பக்கத்து வீட்டு சுவரு
அப்பால எட்டிப்பாத்தா பிகரு..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்பு நடிச்சான் வானம்..
அவன் அடுத்த படத்துக்கு வருவா பூனம்..
காத்தில பறக்குது மானம்..
உன் காலடி ல பாரு சாணம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வை திஸ் கொலவெறி கொலவெறி டீ
வாச் மை ரெரர் வெறி ரெரர் வெறி டீ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் வளக்குறது தாடி..
நீ பிடிக்குறது பீடி..
நாட்டுக்கு ஒரு மோடி..
உன்ன காதலிக்கல போடீ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமா
நீ ஒரு முனிமா..
எட்ட இருந்தா நீ ஒரு 'முனி'அம்மா..
கிட்ட வந்தா ஏ மண்டைல உழுத்தமா..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மல்லி
நா அடிப்பேன் சொல்லி..
விஜய் நடிச்சான் கில்லி..
எனக்கு எல்லாரும் பல்லி..
ஏ டண்டணக்கா ஏ டணக்குணக்கா..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல்
லாரில அடிபட்டு சாதல்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ட்வீட்டர்..
நான் வந்தா 'சபி'ட்டர்
வராட்டா கும்மாங்குத்து..
வந்திட்டா குனிஞ்சுகுத்து..

----------------------------------------------------------------------------------------------------------------------
எல்லாம் கம்பூட்டர் முன்னால ஒக்காந்து யோசிச்சவை.. சுட்டுப்புடாதீங்க... போடுறதிண்டா என்ட ஃபிளாக் ஐடி யும் சேத்து போடுங்க..

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, January 20, 2012

சினிமாக்கும் அரசியலுக்கும்..:: நிச்சயம் சிரிச்சுடுவீங்க...

சிரிப்பதற்கு மட்டுமே.. திட்டப்படாது...

 நாமல்லாம் ஒண்ணுக்க ஒண்ணு.. மாட்டினா நீ யார்??

வாடி போடி நண்பர்கள்...ஹிஹி.. அது அப்போ... இப்போ???


அப்பாவி என்ன மாட்டிவிட்டான் பெரும்பாவி..


கலைஞர்- என்ர DNA வ எனக்கு பிறகு வாற 10 வது சந்ததிக்கு குடுத்தா என்ன வரும்...??

நான்-மறுபடியும் முதல்ல இருந்தா... நான் தற்கொல பண்ணப்போறன்..


மேலிடம்..-- அடிச்சுக் கூட கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாத...

மன்மோகனார்..--அவ்வ்வ்.. எதைடா சொல்லக்கூடாது...

மேலிடம்..-- அத தான் சொல்லக்கூடாது..

மன்மோகனார்-- இன்னைக்கு நான்தான் மாட்டுப்பட்டனா??ஊதீட்டாங்களே சங்கு..


எப்பவும் இதே ரீல் தான் ஓடிக்கிட்டிருக்கும்.. லத்திகா..


அண்மைய நிகழ்வுக்கு..


என்னப்பு சிரிச்சு முடிஞ்சுதா?? ஒரு கொமண்டு போட்டுட்டு போங்கப்பு.. கொமண்ட் இல்லாம காஞ்சுபோய் கிடக்குது..

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......