rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Monday, December 17, 2012

உலக அழிவு உண்மை தானா???


உண்மையில் இந்த கேள்வி உண்மைதானா என்பது இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும் ஆனால் இந்த கேள்வி எழுவதற்கு பல காரணங்கள் உள்ளன..
அவற்றை சொல்லுகிறேன் கேளுங்கள்...
 1. திடீர் காலநிலை மாற்றம்... இது இப்பொழுது இலங்கையின் நிலவரம்.. 
 2. திடீர் மழை,(மார்கழி மாசம் மழை அடிக்காமல் என்ன பேயா அடிக்கும்..??ஹிஹி)
 3.  அம்பாறையில் சிறிய அளவு நிலநடுக்க உணர்ச்சி, 
 4. கடல் கொந்தளிப்பு... 
 5. இதற்கிடையே இலங்கையில் சிலாபம், அம்பாந்தேபட்டை பகுதியில் வானில் திடீர் ஒளிகள் தோன்றுவதாக செய்தி,
 6.  அடிக்கடி விழும் விண்கல்.. 
ஒரு மனுசன் எத்தின பிரச்சினைய தான் சமாளிக்கிறது...


சரி இந்தளவையும் சமாளிக்கிறதோட இன்னொரு பிரச்சினை...

இந்த செய்தி எனக்கு நம்பகமான ஆனால் செவிவழியாக வந்த செய்தி...
வவுனியா, யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அந்தந்த பிரதேச செயலகங்களால் (இதற்கும் பிரதேச செயலகங்களுக்கும் தொடர்பில்லை என்றால் என்னை மன்னிக்கவும்..) 3 நாட்கள் தொடர்ந்து இருளாக இருக்கும்.. தேவையான அளவு உலர் உணவுகள், மெழுகுதிரி, தீப்பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.. 

ஏற்கனவே மக்கள் பயந்து போய் இருக்கும் போது மீண்டும் இவ்வாறு இருள், அது, இது னு பயப்படுத்துவது நியாயமா? 
.
.
சரி ஏதோ செய்யுங்க... எல்லாம் நல்லதா நடந்தா சரி.. ஆனால் இப்பதிவின் எதிர் பதிவு (மறுப்பு பதிவை) 22ம் திகதி வெளியிடுவேன்... ஹிஹி..


.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, December 12, 2012

World End- யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குறும்படம்இன்று 12.12.2012. 12:12 மணிக்கு யாழ்ப்பாண இளைஞர்களது உருவாக்கத்தில் உருவாகிய 'World End' என்ற குறும்படத்தின் இணைப்பு முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டது..
உலக அழிவு தொடர்பாக காமடியாகவும் முடிவில் ஒரு உண்மையையும் ( உலக அழிவை தடுக்க) சேர்த்து இப்படம் வந்துள்ளது..

இப்படத்தின் யூரியூப் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது... படத்திற்கான கருத்துரைகளை யூரியூப்பின் கருத்துரை பெட்டியில் வழங்கிச்செல்லவும்...


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

காதலி-யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குறும்படம்


இன்று 12.12.2012. 12:12 மணிக்கு யாழ்ப்பாண இளைஞர்களது உருவாக்கத்தில் உருவாகிய 'காதலி' என்ற குறும்படத்தின் இணைப்பு முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டது..
பேஸ்புக் மூலமாக ஏற்படும் காதல்கதையில் சில திருப்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது..
தெல்லிப்பளை, கசூரினா பீச், அளவெட்டியில்  சில பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டன..
இப்படத்தின் யூரியூப் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது... படத்திற்கான கருத்துரைகளை யூரியூப்பின் கருத்துரை பெட்டியில் வழங்கிச்செல்லவும்...


.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

போதை-யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குறும்படம்

இன்று 12.12.2012. 12:12 மணிக்கு யாழ்ப்பாண இளைஞர்களது உருவாக்கத்தில் உருவாகிய 'போதை' என்ற குறும்படத்தின் இணைப்பு முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டது..


நடிகர்கள்:- சங்கீர்த்தன், வசீகன், லஜிதன், வாரணன்
இசை, படத்தொகுப்பு:- ஹரிசங்கர்..
உதவி இயக்குனர்:- வாரணன்..
இயக்குனர்:-ஸ்ரீஹர்ஷன் 


அளவெட்டியின் சில பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டன..
இப்படத்தின் யூரியூப் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது... படத்திற்கான கருத்துரைகளை யூரியூப்பின் கருத்துரை பெட்டியில் வழங்கிச்செல்லவும்...


.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, December 7, 2012

உலக அழிவு 2012 சில கடமைகள்


21ம் திகதி உலகம் அழியப்போகுதுனு சொல்லுறாங்க.. நாமளும் அழியுமா அழியாதா னு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கிறம்.. சரி உலகம் அழியப்போகுதுனே வச்சுக்குங்க அதுக்கு முதல்ல செஞ்சு முடிக்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருக்குதே அதுகள எப்ப செய்யப் போறீங்க??
இல்லைனா விவேக்ட ஜோக்ல வாற மாதிரி சாகப்போற நேரத்தில 'என்ன எப்பிடியாவது காப்பாத்துங்க.. எனக்கொரு கடமை பாக்கியிருக்கு' னு சொல்லப் போறீங்களா??

உலகம் அழியுதோ இல்லையோ கடமைகளை முடிச்சுடுவமே... 
 1. தினமும் காலையில் இயற்கை கடனை முதல்ல முடியுங்க.. இல்லைனா நாறிடும்.. கவனம்...
 2. தேவையில்லாமல் அலட்டுறத விட்டுடுங்க.. (டேய் யார்ரா அவன் என்ர பெயரை சொல்லுறது!!!)
 3. மூஞ்சை புத்தக அக்கவுண்ட குளோஸ் பண்ணுங்க... ஹிஹி... (நான் குளோஸ் பண்ணிட்டன்...)
 4. விட்டுப் போன உறவுகளை புதுப்பியுங்க... 
 5. ஜாலியா ஊர் சுத்துங்க... (நான் தினமும் இந்த கடமையை ஒழுங்கா செய்திடுவன்..ஹிஹி)
 6. நட்பு வட்டத்தை சந்தோசப்படுத்துங்க... (அந்த மாதிரி இல்லை... நல்ல மாதிரி... ஓகேயா??)
 7. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல.. அதால நல்லது செய்யுங்க...
 8. இருக்கிற வரைக்கும் நாலு விசயத்தை மேலதிகமா தெரிஞ்சு கொள்ளுறது நல்லது தானே... அதால நல்லா படியுங்க..


இவ்வளவையும் ஒழுங்கா செய்யுறீங்களா??? அப்ப உலகம் அழியாது... ஏனெண்டா கடவுள் தான் உலகத்தை அழிக்கப்போறர் எண்டு சொல்லுறீங்களே.. அந்த கடவுள் வந்து பாத்திட்டு இவ்வளவு நல்லவங்கள் இருக்குற உலகத்தை அழிச்சா தனக்கு தான் பழி னு சொல்லிட்டு விட்டுட்டு போயிடுவார்... ஓகேயா??

சரி எனக்கும் ஒரு கடமை பாக்கியிருக்கு... 22ம் திகதி காலைல எனக்கு கிளாஸ் இருக்கு.. நேரத்துக்கு எழும்புறதுக்கு அலார்ம் வைக்கணும்... சரியா...

............
வணக்கம் நண்பர்களே... சும்மா போன போக்கில எழுதினான்... 
இவ்வளவும் ஏன் சொன்னன் எண்டா... எனக்கு தெரிஞ்ச அக்காக்கு உலகம் அழியப் போகுது எண்டு பயங்கர பயம்... அதிலயும் தங்கள விட பாவம் சின்ன பிள்ளைகளும் இறக்க நேரிடுமே என்று இன்னும் பயம்... அவாக்கு உலகம் அழியாது என்று விளங்கப்படுத்துறதுக்குள்ள 'உலகம் அழிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்' என்றே நினைக்க தோன்றுகிறது... அதவிட இன்னொரு அண்ணா என்னவெண்டா... அடடா அவசரப்பட்டு பிள்ளைய பள்ளிக்கூடத்தில சேர்க்க காசு கட்டிட்டனே 21 உலகம் அழியுமிண்டா அடுத்தவருசம் 1ம் திகதியே வராதே பள்ளிக்கூடமும் தொடங்கதே... காசு அநியாயமே எண்டு கவலைப்படுறார்... அத என்ன சொல்லுறது...
.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Saturday, November 24, 2012

உலகஅழிவின் ஆரம்பம்..2012


முதல்ல எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். உங்களுக்கு 40 வயது. கல்யாணமாகி 4 பிள்ளைகள். அப்பிடியிருக்க உங்க கிட்ட ஒரு ஆளு வந்து இந்த டிசம்பர் 21 உலகம் அழியப்போகுதுனு சொன்னா உங்களுக்கு எப்பிடி இருக்கும். அட போப்பா!! வாழுறதவிட சாகுறதே மேல்னு சொல்ல தோணுமா (கல்யாணமாகி 4 பிள்ளைகள்.) ?? இல்ல ஐயோ ஐயோ நான் இன்னும் ஒண்ணையுமே அனுபவிக்கலையேனு அழுவீங்களா?? ( !! அடிங்கொய்யால)
இதையே 20 வயசு.. என்ன மாதிரி ஒரு யூத்து கிட்ட வந்து இதையே சொன்னீங்கனா எப்பிடி இருக்கும்..அவன் தலைல கல்ல போட்டு கொல்லணும் போல இருக்குமா??? இருக்கும்.. அந்த நிலைல தான் நான் இருக்கிறன்... 
அவன் அவன் ஆராய்ச்சி அது இதுனு பண்ணி இன்னும் 450 கோடி வருசம் பூமி இருக்கும். ஒரு பிரச்சினையும் இல்லைனு சொல்லி இருக்கிறான்.. அந்த ஆராய்ச்சிக்கு எத்தின மில்லியன் டொலர் செலவழிச்சிருப்பாங்க.. அந்த காசு எல்லாம் என்ன வீணா?? 


எத்தினயோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களில் சிலர் 1650 காலப்பகுதியில் பெரிய தொழில்நுட்பவசதிகள் காணப்படாத காலத்திலேயே பல உண்மைகளை கூறியுள்ளார்கள். அதை விட இன்று பல தொழில்நுட்பங்களுடன் பல விஞ்ஞானிகள் பல ஆராய்சிகள் செய்ததன் விளைவாக ஒரு பிரச்சினையும் பூமிக்கு வராது என கூறியுள்ளார்கள். ஆஊனா மாயன் காலண்டரில போட்டிருக்குனு சொல்லுறாங்க... ஆனா அவங்களின் குறிப்பு படி அத்துடன் சூரியனின் தூரப்பிரமாணம் மாற்றமடைகிறது. மாயன்களின் 20ற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தொல்லியல் துறையினர் 2 கல்வெட்களையே ஆராய்ச்சி செய்துள்ளார்கள். 2வது கல்வெட்டிலேயே 21.12.2012 உடன் திகதி முடிவதாகவும் கூறப்படுகிறது. சூரியனின் தூரமாறுபாட்டை கொண்ட அடுத்த காலண்டர் மற்றைய கல்வெட்டுகளில் காணப்பட்டால் என்ன செய்வார்கள்.?? மேலும் அவர்களுடைய மொழி, குறியீட்டு விளக்கங்கள் புரிந்துகொள்ள கடினமானது என பல தொல்லியல்துறையினர் கூறுகின்றனர். அவ்வாறிருக்க எப்படி சரியான முறையில் மொழிபெயர்த்து கூறினார்கள்..

மாயன்கள்--
தென்னமெரிக்காவில் வாழ்ந்த அதிசயிக்கத்தக்க நாகரீக வளர்ச்சியை கொண்டவர்கள் மாயன்கள். தமக்கென உருவ குறியீடுகள், எழுத்துருக்களை கொண்ட மக்கள். தமிழர்களின் நாகரீக வளர்ச்சியை சமப்படுத்தும் அளவுக்கு பல அறிவியல் உண்மைகளையும் மாயன் கலண்டரையும் உருவாக்கியவர்கள். மாயன்கள் வாழ்ந்த பகுதிக்கு அண்மையில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும் பலநூறு மீட்டர் நீளமான சிலந்தி, தேள், போன்ற உருவங்களும், பல வடிவங்களும் வேற்றுக்கிரக வாசிகளால் உருவாக்கப்பட்ட சின்னங்கள் என நம்பிக்கை நிலவுகின்றது. அவ்வேற்றுக்கிரகவாசிகளால் மாயன் நாகரீகத்தவர்கள் விண்ணியல் உண்மைகளையும், நாட்காட்டி தயாரிப்பு முறையையும் அறிந்ததாக கொள்ளலாம். இதனோடு ஒப்பிடும் போது தமிழர்கள் புத்திசாலிகள் என கொள்ளலாம். பண்டைய தமிழர்களே நாட்காட்டி, பௌர்ணமி, அமாவாசை மாற்றம், நட்சத்திரங்களின் மாற்றம் என்பவற்றை தாமாகவே கண்டறிந்தனர். (சிலவேளை தமிழர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளின் உதவி கிடைத்திருக்கலாம். அது தெரியாமல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.)

மாயன்களின் கல்வெட்டு உண்மைகள் பற்றி 21.12.2012 தான் தெரியவரும்.. அது உண்மையானால் மாயன்களின் கண்டுபிடிப்பை போற்ற மனிதர்கள் இருக்கமாட்டார்கள்... அதாவது நாம் எல்லோரும் இறந்துவிடுவோம்.. ஆனால் அப்பிடி எதுவும் நடக்காது என நம்பி இப்பதிவை முடிக்கிறேன்...
.
. இது ஒரு மீள்பதிப்பு...
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Monday, November 19, 2012

துப்பாக்கி- விஜயின் வெற்றிப்பாதை...


இவ்வளவு காலமும் விஜயின் படங்களில் உருப்படியான கதையை எதிர்பார்க்க முடியாது என்றிருந்த பேச்சை துரத்தி துரத்தி போட்டுத்தள்ளியிருக்கிறது துப்பாக்கியின் வெற்றி... 
யாரும் எதிர்பார்க்க முடியாத கதை நகர்வு, நேரம் போவது தெரியாமல் ரசிகனை கட்டிப்போட்டுவைக்கும் ரசனை, இடையிடையே விஜயின் காமடி, ஆக்சன் என்று சகல தரப்பிலும் புகுந்துவிளையாடி இருக்கிறது துப்பாக்கி..

ராணுவத்திலிருந்து லீவில் ஊருக்குவரும் விஜயை ராணுவ உடையுடனேயே பொண்ணுபார்க்க அழைத்து போவது.. அங்கே காஜலை பார்த்து பிடிக்கவில்லை என்பது பிறகு காஜலின் குணத்தை !!!! பார்த்து பிடிப்பது என்று மாறி மாறி சில காமடிகள் வந்து பிறகு சீரியஸ் ட்ராக்கில் பயணிக்கிறது..
பஸ்ஸில் குண்டு வைக்கும் தீவிரவாதியை பிடிப்பதும், அவன் பொலிஸிலிருந்து தப்ப மீண்டும் விஜய் பிடிப்பது, அவனிடம் இருந்து பெற்ற சில தகவல்களை வைத்து தீவிரவாத குழுவை முற்றாக ஒழிக்க பாடுபடுவது என ராணுவவீரனின் பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார் தளபதி விஜய்.. (ஆனா அந்த குறுந்தாடி மட்டும் உறுத்துதே.. எப்பிடி ஆர்மி கொமாண்டர் தாடி வளர்க்கலாம்.. !! டவுட்டு தான்.. ஆனா சில வாதங்களின் பின் தாடி வளர்ந்திருக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறது... காஸ்மீர்லயோ, டெல்லியிலயோ இருந்து ரயில்ல சென்னைக்கு வாறதுக்கு 2 நாளாவது தேவைப்படும் அதுக்குள்ள லைட்டா தாடி வளர்ந்திருக்கும்.. அதிலயும் ரயில் வழியில பிரேக்டவுண் வேற ஆகியிருக்குதே..ஹிஹி..)

12 இடங்களில் குண்டு வெடிக்கப்போவது தெரிந்ததும் வெடிக்கப்போகும் நாளன்றும் கூலாக திருமணவிழாவில் கலந்துகொண்டு அங்கிருந்த ஆர்மி நண்பர்கள் 11 பேருடன் சேர்ந்து ஒரு நேரத்தில் 12 தீவிரவாதிகளையும் போட்டுத்தள்ளுவது ஸ்மார்ட்...

ஆனா முருகதாஸிக்கு சைனிஸ் வில்லன்களை தான் பிடிக்கும் போல.. 7ம் அறிவில டொங்குலி.. இங்க அதே மாதிரி இன்னொரு வில்லன்... ஆனா இந்த வில்லன் வெரிஸ்மார்ட்.. ரொம்ப அழகா இருக்கிறான்..

கல்யாண வீட்டிலதான் கோட் போடுவாங்க என்று கண்டுபிடிப்பதும், ஆர்மியின் தங்கைகளை கடத்தி யார் யார் என்று அறிவதும் கொஞ்சம் திரில்.. ஆனால் பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது கொடுமை... 

ஆக மொத்தம் தீபாவளி சரவெடியை துப்பாக்கி பெரிதாக வெடித்துள்ளது... கலெக்சன் அள்ளுதாம்ல.. 

(ஒரு முக்கிய விடயம்.... துப்பாக்கியின் குவாலிட்டி குறைந்த டீவீடீ தீபாவளிக்கு அடுத்தநாளே வெளிவந்தது... அதேபோல உயர்தர குவாலிட்டி டீவீடீ அடுத்த 3ம் நாளே வந்துவிட்டது.. துப்பாக்கி கலெக்சன் இதனாலும் பாதிக்கப்படும்... )
.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Tuesday, October 9, 2012

கிரிக்கெட் காமடி பீஸ்..T20

கிரிக்கெட் காமடி பீஸ்..T20..சில கிரிக்கெட்டருகளுக்கு அறுவை..No Comments.. bye Mahela..

.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Tuesday, October 2, 2012

யாழ்ப்பாணத்திலிருந்து 'காதலி' குறும்படம்-முன்னோட்டம்.


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர இருக்கும் 'காதலி' குறும்படத்தின் முன்னோட்டகாட்சியையும், போஸ்டரையும் இன்று பகிர்ந்துள்ளேன்..
ஏற்கனவே போதை எனும் குறும்படத்தின் முன்னோட்ட காட்சியையும் பகிர்ந்துள்ளேன்..
இவ் இரு படங்களும் மிகவிரைவில் வெளியிடப்பட இருக்கின்றன..

காதலி:-
நடிகர்கள்:- ஜதீசன், ஹரிதாயன், சங்கீர்த்தன்..
இசை, படத்தொகுப்பு:- ஹரிசங்கர்..
உதவி இயக்குனர்:- வாரணன்..
இயக்குனர்:-ஸ்ரீஹர்ஷன் (நான் தான்..)


...........

போதை:-
நடிகர்கள்:- சங்கீர்த்தன், வசீகன், லஜிதன், வாரணன்
இசைஇ படத்தொகுப்பு:- ஹரிசங்கர்..
உதவி இயக்குனர்:- வாரணன்..
இயக்குனர்:-ஸ்ரீஹர்ஷன் ( இதுவும் நான் தான்..)


.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

தாண்டவம்-திரைவிமர்சனம்...விஐய்-விக்ரம்-அனுஸ்கா கூட்டணியில் மீண்டும்.. பலத்த எதிர்பார்ப்பு.. ம்ம்.. விக்ரம் உடைய நடிப்புக்கு சிறந்த தீனியாக இந்த படம் அமைந்துள்ளது.. ஜீ.வீ இன் 25 வது படம் என்ற எதிர்பார்ப்பு.. பாடல்கள் ஏற்கனவே ஹிட்.. நல்ல கதை.. முதலில் இழுபடும் கதை பிற்பாதியில் சூடு பிடிக்கிறது.. 
லண்டனில் நடக்கும் தொடர்கொலை.. அதை விசாரிக்கும் தமிழ் பொலிஸ் நாசர்.. கொலைகாரனை தெரியாத்தனமாக இறக்கிவிடும் டாக்சி ஓட்டுனர் சந்தானம்.. மிஸ் லண்டன் எமி ஜாக்சன்.. (சில தியேட்டர் வாசல் போஸ்டரில் அனி சாக்சன் என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள்..ம்ம்.. நடக்கட்டும்..) யார் கொலை செய்தது என தேடும் போது கிடைக்கும் தடயங்கள்.. என்று கொஞ்சம் சுவாரஸ்யமாக போகும்.. இடையே பிளாஸ்பேக்கில் விக்ரம் இந்தியாவில் மிகப்பெரிய ரோ பொலிஸ் அதிகாரி.. அவருக்கு கிராமத்தில் வாய்க்கும் அழகான.... மனைவி அனுஸ்கா.. என்று கொஞ்சம் நகைச்சுவையாகவும் கதை நகரும்.. கிராமத்து பழக்கப்படி பார்க்காமலே கல்யாணம் செய்ததால் இருவரும் முதலில் நண்பர்களாக பழகுகிறார்கள்..
பிறகு தான் எல்லாமுமாம்.. அதாவது..(காதல், மனைவி..).. அப்பிடியே கொஞ்சம் போகும் அதுக்கிடையில ஒரு குண்டுக்கான ஃப்ளோ சாட் மிஸ் ஆகிட்டுது.. அத கண்டுபிடிக்க விக்ரமோட நண்பன் நியமிக்கப்படுகிறான்.. பிறகு அது விக்ரமிட்ட வருகுது.. கண்டுபிடிச்சாரா?? அதுக்கு பிறகு என்ன ஆச்சு எண்டு கொஞ்சநேரம் அதிலயே போகும்.. 
அததேடி பிறகு லண்டன் போவாரு.. அங்க யார் யார் இதில சம்பந்தப்பட்டு இருக்கிறாங்க எண்டு அறிஞ்சு அதிர்ச்சி அடைவாரு.. அங்க பலரால ஏமாத்துப்பட்டு அனுஸ்காவை லண்டன்ல நடக்குற குண்டுவெடிப்பில இழக்குறாரு.. விக்ரம்கு கண் தெரியாமல் போகுது.. பிறகு என்ன நடந்தது.. விக்ரம் பொலிஸ்ல பிடிபட்டாரா? எமி ஜாக்சன் என்ன செய்தாரு எண்டுறத படத்த பாத்து புரிஞ்சுக்குங்க.. 

யாழ். செல்லாவில் பார்த்தேன்.. 
பலருக்கு படம் பிடிக்கவில்லை என்பது படம் முடிந்து வரும்போது புரிந்தது.. ஆனாலும் ம்ம்.. நல்ல படம்..
.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, September 14, 2012

இலங்கை சுற்றுலா-பெரதெனியா

இலங்கை சுற்றுலா-பெரதெனியா.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......