rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 17, 2011

வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...

வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதற்கு பலர் பல தகவல்களை தர்க்கங்களை முன்வைத்துள்ளார்கள். நானும் அதே வழியில் செல்கிறேன். இதுவும் ஒரு தர்க்கவாதம் தான்.

பிரபஞ்சம்- இது பல்வேறு வகைப்பட்ட அண்டங்கள், நட்சத்திரங்கள், பால்வீதிகளை கொண்டு காணப்படுகின்றது. இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பால்வீதி எனப்படும் அண்டத்தில் சூரியன் போன்ற பலகோடிக்கணக்கான நட்சத்திரதொகுதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சூரியனும் ஒன்று. அச்சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் பூமியும் ஒன்று. 
இப்பொழுது பிரபஞ்சத்தை எண்ணிப்பாருங்கள். அதில் எத்தனை கோடிக்கணக்கான பால்வீதிகள் காணப்படும். அப்பால்வீதிகளில் எத்தனை ஆயிரம் நட்சத்திரங்கள் காணப்படும். 
அவற்றின் எண்ணிக்கை 999999999999999999999999999999 ஐ தாண்டிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.
அவ்வளவு நட்சத்திரங்ககையும் எத்தனைகோள்கள் சுற்றிவரும். அவற்றின் எண்ணிக்கை அவற்றில் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே காணப்படும். 

பூமியை எடுத்துக்கொண்டால் - பெருவைடிப்பின் பின் பூமி தோன்றி பலகோடி வருடங்களின் வெடிப்பால் ஏற்பட்ட புகைமண்டலம் குளிர்ந்து மழையாக பொழிவுற்று நீர் உருவானது. வளி உருவானது. அதன் பின் நீரில் காணப்பட்ட ஒருகல அங்கி வளர்ச்சியடைந்து (கூர்ப்படைந்து) பல்கல அங்கியாகி சூழலுக்கேற்ப கூர்ப்படைந்து விலங்குகளாகி விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது வரலாறு ( எழுதப்படாத விதி).

இனி மீண்டும் பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்களை எடுத்துக்கொள்வோம். அக்கோள்களும் பெருவெடிப்பு அல்லது அதுபோன்ற வேறு காரணங்களாலேயே தோன்றியிருக்கவேண்டும். வேறு வழியில்லை. அங்கும் பூமியில் தோன்றியது போன்று ஒருகல அங்கியோ பல்கல அங்கியோ தோன்றியிருக்கும். அங்கு வளிமண்டலம், நீர், உணவு இல்லாவிட்டால் அச்சூழலிலுக்கேற்ப கூர்ப்படைந்து தம்மை தாமே மாற்றிக்கொண்டு இருந்திருக்கும். ( டார்வினின் கொள்கைப்படி.. சூழலுக்கேற்ப தம்மை தாமே மாற்றிக்கொண்டிருக்கும். உதாரணம்- பாலைவன ஒட்டகத்திற்கு நீர் தேக்கக்கூடிய உடல்அமைப்பு போன்றவை) அச்சூழலிலே வாழப்பழகியிருக்கும். வாழ்ந்து கொண்டிருக்கும். 

பூமியில் மனிதன் தான் அறிவு மிக்கவன், ஆற்றல் உள்ளவன் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றும் எம்மால் சூரிய குடும்பத்தில் உள்ள கடைசி கோளான நெப்ரியூனை (சூரியனிலிருந்து 4497மில்லியன் கிலோமீட்டர்) கூட அடையமுடியவில்லை. நிலவின் சிறு பகுதியில் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைவிட நாம் வாழும் பூமியின் உட்பாகத்தில் 20 கிலோமீட்டர் ஆழத்தைக் கூட இன்னும் எம்மால் அடையமுடியவில்லை.. (பூமியின் விட்டம் 12757 மேற்கு கிழக்காக.) இப்படியிருக்கும் மனிதர்களான எமக்கு பிரபஞ்சம் பற்றிய எவ்வளவோ கனவுகள் கற்பனைகள் இருக்கும். 

எமக்கிருக்கும் ஆசைகள் போல வேறுகிரகங்களில் வசிக்கும் உயிரினங்களுக்கும் அவ்வாறான ஆசை தோன்றியிருக்காதா? தோன்றும் தானே.. அவ்வாறு தோன்றியதன் காரணமாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மனிதனுக்கு முன்னரே வானத்தில் வேகமாக பறக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து பூமியின் பக்கம் வந்திருக்கலாம் தானே. 

இவை நடந்த காலப்பகுதி எகிப்தில் பிரமிட் கட்டப்பட்ட காலப்பகுதியாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் பல மில்லியன் தொன் எடையுள்ள கற்களை எவ்வாறு 45 பாகை சாய்வில் உயரத்திற்கு ஏற்றியிருக்க முடியும். சரி அவ்வேலைகளை பூமியில் உள்ளவர்கள் தான் செய்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இன்று ஏன் அவ்வாறு செய்யமுடியவில்லை?  தொழில்நுட்பம் வளரவில்லை?.. 

இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கும் போது நிச்சயம் வேற்றுக்கிரகவாசிகள் உண்மை. அவர்கள் ஏற்கனவே பூமிக்கு வந்துள்ளார்கள்.. மனிதர்களோடு பழகியுள்ளார்கள்.. உதவிகள் செய்துள்ளார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது..

இவை அனைத்தும் பெரும்பாலும் தர்க்கரீதியானவையே... ஆதாரங்கள் இருந்தால் கண்டுபிடியுங்கள்... உலகுக்கு அறிவியுங்கள்...


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

6 comments:

varanan said...

என்னடா ஆராச்சி செய்யுறியா?? நல்லது நான் ஒரு ரொக்கட் அனுப்பபோறன்... நீயும் போறியா?? எங்க தெரியுமா... இங்க இருந்து 100000000 மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற கிரகத்துக்கு... ஓகேவா???

Kabil said...

என்னடா நான் சொன்னதும் பதிவு போட்டுட்டியா??

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

நான் போறதுக்கு தயார் மச்சி.. நீ சொல்லுற அந்த கிரகத்தை கண்டுபிடிச்சதே நான் தானே... ஹிஹிஹி...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

கபில்... நான் ஏற்கனவே எழுத யோசிச்சத தான் உனக்கு சொன்னான்...

Karuthu Kandasamy said...

அருமையான அலசல்...
Chariots of the Gods? என்னும் வீடியோவில் இதே போல் பல கேள்விகளை எழுப்பியிருப்பார்கள்..
எனக்கென்னவோ நாம் வேற்று கிரக வாசிகளைத்தான் கடவுள் என வணங்குகிறோமோ என்று தோன்றுகிறது.

Karthika Supramanijan said...

உங்களுக்கு வேற வேலையே இல்லையா???