rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, December 21, 2011

போதிதர்மரின் முழுமையான வரலாறு...

போதிதருமர் மகாயான பௌத்தத்தை சேர்ந்தவர். பௌத்தபிரிவின் யோகாசாரக் குழுவிலிருந்து உருவான பிறிதொரு குழுவான தியான மார்க்கத்தின் ஸ்தாபகர் ஆவார். சீனத்து பனுவல்களில் (நூல், பாடல்கள்) இருந்து போதிதருமர் பற்றிய பல தகவல்கள் கிடைக்கின்றன. அத்தகவல்களின் படி போதிதருமர் பல்லவ அரசகுடும்பத்தை சேர்ந்த இளவரசனாதலால் பெரும்பாலும் காஞ்சிபுரத்திலேயே பிறந்திருக்கக்கூடும். கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுகளின் படி பல்லவர்கள் பிறப்பால் பிராமணர்களாகவும் தொழில் முறையால் சத்திரியர்களாகவும் இருந்தமையால் போதிதருமரும் பிரமசத்திரியராய் இருந்திருக்கவேண்டும்.

இவர் மகாயானபௌத்தத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக சாதாரண வெள்ளை நிற ஆடை அணியாது கறுப்பு நிற ஆடையை அணிந்தாரெனவும் பிறநாடுகளில் குறிப்பாக சீனாவில் மகாயான பௌத்த போதனைகளை பரப்புவதற்காக அங்கு சென்றதாகவும் அங்கு சென் (Zen) என அழைக்கப்படும் பௌத்தமார்க்கத்தை போதித்தார் எனவும் சீன பௌத்தநூல்கள் குறிப்பிடுகின்றன.

போதிதருமரை துதிக்கும் சீன செய்யுளின் தமிழ் வடிவம்.
கடலினூடாகத் தீபம் ஒன்று இந்த நாட்டிற்கு வந்தது.
போதிதருமர் இங்கு முதற் தந்தையானார்.
அவரது ஒளிவட்டம் நாமனைவரும் அறிந்தவாறு
ஆறு தந்தையரைச் சென்றடைந்தது
அவர்களிலிருந்து பல உள்ளங்கள் ஒளிபெற்றன.


எனப் போற்றிக் குறிப்பிடுகிறது. லங்காவதார சூத்திரம் என்ற யோகாசார பனுவலானது மகாயான பௌத்த சூத்திரங்களுள் ஒன்று. பயில்வதற்கு சிரமமானது. அதன் அடிப்படைப் போதனை உள்ளொளி பெறுதல் பற்றியது. இங்கு மொழி பயனற்று விடுகின்றது. போதிதருமர் தியானத்தால் உள்ளொளி காட்சியையும் அதன் மூலம் மெய்யறிவையும் பெறலாம் என போதித்தார். அத்துடன் அவர் தமிழ்நாட்டு மூலிகை மருத்துவத்தையும், வர்மசூத்திரத்தையும் சீனாவில் அறிமுகப்படுத்தியதானவும் அதுவே அக்குபஞ்சர், சீனமருத்துவம் என பரிணமித்ததாகவும் Permalink இணைய செய்தி குறிப்பிடுகிறது.


மூலம் ,நன்றி- நினைவுரு (பேராசிரியர். சோ. கிருஷ்ணராஜா யாழ் பல்கலைக்கழக ஞாபகார்த்த வெளியீடு)

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

6 comments:

varanan said...

எங்கயிருந்து தேடி பிடித்தாயடா... ஆமா 9 போதிதர்மர் இருப்பதாக சொன்னாயே.. ஆனால் அத பற்றி சொல்ல இல்லையே....

Kabil said...

உனக்கு உண்மையாவே வேற வேலை இல்லையா மச்சி...

Karthika Supramanijan said...

நன்று... தகவல் புதிது... எப்படி சீன மொழி பாடலை மொழிபெயாத்தீர்கள்...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Varanan -- 9 பேர் இருக்கீனம் மச்சி... அத நான்தான் சீனாக்கு போய் கண்டுபிடிக்கப்போறன்

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

எல்லாம் நாளை வரை தாண்டா... நாளைக்கு AL Result வருகுது... அதோட ஆள் அவுட்....

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Karthika -- சீன மொழி மட்டுமில்லை... எனக்கு உலகத்தில் உள்ள அனைத்து அழிந்த... அழியப்போகிற... இருக்கின்ற அனைத்து மொழிகளும் அத்துபடி..