rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 31, 2011

2011 என்ன நடந்தது...

இன்றுடன் 2011 முடிவடைகிறது... இந்த 365 நாள்ள என்ன செஞ்சு கிழிக்கப்பட்டது என்பது பற்றிய பதிவு இது... உலக விடயங்கள் முதலில்...

 பெப்-02-- 2ஜீ ராசா கைது...


பெப்-20- பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மரணம்.


மார்ச்-11- ஜப்பான் பூகம்பத்தால் புகுசிமா அணுஉலை வெடிப்பு..


ஏப்-02- 11 வது உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 28 வருட கனவை இந்திய அணி நிறைவேற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.


ஏப் 24 சத்திய சாயி பாபாவின் மகாசமாதி..


ஏப்-29- வில்லியம்- கேட் திருமணம்.


மே-03- இலங்கைத்தமிழர் ராதிகா சிற்பேசன் கனேடிய தேர்தலில் வெற்றி பெற்றார்.


அமெரிக்க அரசின் மிகப்பெரிய சாதனை... பின்லேடனை சுட்டுக்கொல்வது... வல்லரசில் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டிய பின்லேன் என்ற சாதனையாளனை சுட்டுக்கொன்றது அமெ... ஆனால் அதிலும் புகைப்படம் கிராபிக்சில் செய்யப்பட்டது அது இது என பல பிரச்சினைகள்...


மே-13- தமிழகசட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி...


மே-28- 4வது ஐபிஎல் லில் சென்னை சுப்பர்கிங்ஸ் 2வது முறை வெற்றி..


ஜீன்-27- எந்திரன் படத்துக்கு 3 சர்வதேசதிரைப்பட விருதுகள் கிடைத்தன..


ஜீலை-9-தென்சூடான் எனும் புதிய நாடு அவதரித்தது.(சுதந்திரதினம்)..


ஓக-16- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே கைது.


செப்-11- இயக்குனர். பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் விருது..


ஒக்-5- அப்பிள் நிறுவன உருவாக்குனர் ஸ்டீவ் ஜொப்ஸ் மரணம்.


ஒக்-20- சர்வாதிகாரி கடாபி கிளர்ச்சிப்படையால் சுட்டுகொல்லப்பட்டார்.

ஒக்-31- உலகசனத்தொகை 700கோடியை எட்டியது.

டிச-8- 219 ஓட்டங்களை சேவாக் விளாசி அதிகூடிய 1நாள் போட்டியில் அதிக ஓட்டம் அடித்த வீரராக சாதனை படைத்தார்.இந்தளவும் வேற ஆக்கள் கிழிச்சது... முதல்ல நாம என்ன கிழிச்சம் எண்டுறத யோசியுங்க.. நாடு உருப்படும்...

ஓஓ நீங்க நான் என்ன கிழிச்சன் எண்டு கேக்குறீங்களா??

உள்ளதிலயே நான்தான் கனக்கா கிழிச்சனான் பாக்கபோறீங்களா??

இந்தளவு கிழிச்சது காணுமா??? he he he...

இனி நாம செய்தது...

கிழிப்பு 1 :::  இந்த வருசம் தான் நிறைய படம் பாத்தனான்..

கிழிப்பு 2 :::கஸ்ரப்பட்டு இந்த வருசம் மட்டும் 101 பதிவு எழுதியிருக்கிறன். (அவனவன் 1000 பதிவ தாண்டியிருக்கிறான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...)

கிழிப்பு 3 :::  எல்லாவேலையயும் பாத்துக்கிட்டு A/L Final எக்சாம் எழுதியது... ஆனா அதிலயும் நிறைய பிரச்சினை...((ரிசல்ட் கேக்கப்படாது..))

கிழிப்பு 4 ::: முக்கியமா பயங்கர காய்ச்சலோடும் இன்று பதிவெழுதவேண்டும் என்ற முடிவில் இந்த பதிவு எழுதுவது...(Kadavulee...)

கிழிப்பு 5 ::: எந்த கொண்டாட்டமும் இன்றி புதுவருடத்தை கழிக்க எண்ணியது...(No Money. No Money..No Honey  No Honey da..)

ஹப்பி நியூ இயர் மச்சி.. சொரி... ஒன்லி தமிழ் ya... 
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...
.


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

8 comments:

RMY பாட்சா said...

இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

Kajuran VP said...

ஆடு நடந்தது மாடு நடந்தது எண்டுறதையும் போடுடா... நல்லாயிருக்கும்...

Kabil said...

அப்பிடி சொல்லுடா என் பாரை குண்டா...

Karthika Subramanijan said...

பேப்பரில வந்தத அப்பிடியே சுட்டு போட்டிருக்கிறீங்க...

Kajuran VP said...

என்ன ரிசல்டா??? சொல்ல இல்லையே...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

ஆடு,மாடு,நீ,நான் எல்லோரும் நடந்ததுதான்.. ஆனா மதிக்கிற மாதிரி என்ன செய்தாய் என யோசி...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

கார்த்திகா: பேப்பரில வந்தத விட அதிகமா போட்டிருக்கிறன்...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

கயூரன்.:: ஏன்ரா ஃபிளாக்கில வச்சு இத கேக்கிறாய்??