rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, December 27, 2011

அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்

நான் 7ம் வகுப்பு படிக்கும் போது அந்தநேரத்தில் புழக்கத்தில் இருந்த சில நடைமுறைகளையும் சூழ்நிலைகளையும் பற்றிய சொற்களை பயன்படுத்தி என் அப்பாவால் எழுதப்பட்டு நான் ரியூசன் ஆண்டுவிழாவில் பாடியது... (கத்தியது என்று கூட சொல்லலாம்...) இப்பவும் ஞாபகம் இருக்குது அப்ப என்ர வயசு பொடியள் எல்லாம் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாலும் அன்று அவர்களின் நாடகம் அரங்கேற இருந்ததாலும் என்னோடு சேர்ந்து வில்லுப்பாட்டாக செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை... நான் தனிமரமாக வில்லுப்பாட்டு என்று மேடை ஏறியதும் பின்னால் இருந்த சனம் வீட்ட கிளம்பிட்டுது... (என்ன கொடுமைடா...) என் பாட்டையும் அதனை கேட்கும் கொடுமையையும் சகித்துக்கொண்டு முன்வரிசைப்பல் இல்லாத சில கிழக்கட்டைகள் முன்வரிசையில் அமர்ந்திருந்த தைரியத்தில் சில பாடல்களை இழுத்துவிட்டேன்...(ஒருவேளை அந்த கிழடுகளுக்கு காது கேக்காதோ தெரியல....) அந்த வில்லுப்பாட்டு பாடலில் எனக்கு பிடித்த பாடல் தொகுதியை வாசியுங்கள்...

---------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம். எப்பிடி இருக்கிறீங்க. இப்ப ஒரு வில்லுப்பாட்டு பாடலை பார்ப்போமா?
------------------------
நல்லூர் கந்தனின் திருவிழா காலத்தில தினமும் கந்தையா கோயிலுக்கு வருவார். அண்டைக்கு தேர்த்திருவிழா. மேற்கு வீதி. அங்க ஒரு ஆள காணுறாரு. பட்டு வேட்டி. தங்கமோதிரம். கழுத்தில வைரசங்கிலி. எண்டு படு அமர்க்களம்.( இப்ப எல்லோரும் அப்படிதான். ஆனா பாட்டு எழுதப்பட்டது 2004.) அவர பாத்ததும் கந்தையா யோசிச்சாரு. திடீரென பொறி தட்டியது... அட நம்ம அம்பலத்துநாதன்... கிட்டப்போய்......

(செம்பருத்திப்பூவே செம்பரத்திபூவே பாடல் மெட்டில்)

செம்பருத்தி பூவே உண்மையான பாடல்...

அம்பலத்துநாதா அம்பலத்துநாதா
ஒன்றாய் பள்ளி போனோம் நினைவில்லையா?
என்னையறியாமல் ஜேமனுக்கு போனாய்.
போடருக்குள் நுழைந்தாய் நினைவில்லையா?
உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா?
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான்
சொல்லாமல் தவிக்கின்றேன்.... (அம்பலத்து...)

பாட்ட கேட்டதும் அம்பலத்தாருக்கும் பொறி தட்டியது..

(அதே மெட்டில்)
நீயென்ன சொல்வது நானறிவேன்.
நான் என்ன சொல்வது நீயறிவாய்.
நானென்ன சொல்லவந்தேன்.
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
இந்த கடவுள் தான் அறியும்.
ஊருக்குள் என்ன சொல்ல வந்ததெண்டு
கந்தையா உனக்கென்ன தெரியாதா?
ஓஓ...... அடியா நொருக்கா தெரியவில்லை.
பிடித்தால் சிறையா புரியவில்லை.
அதை சொல்ல தான் நினைக்கின்றேன்.
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்.

என்ன நடந்தது தெரியுமா???
அம்பலத்துநாதரும் கந்தையாவும் ஒரே வகுப்பில் படிச்சவங்க... கூட்டாளிங்க... ஒருமுறை அம்பலத்தார் பள்ளிக்கூடத்தின்ர ஓட்ட பிரிச்சு உள்ள இறங்கி பள்ளிக்கூட ரேடியோவ திருடிற்றான். அத எடுத்து கொண்டு ஓடும் போது அதிபர் கண்டுட்டார். அப்ப கந்தையா முன்னால வர அவனிட்ட ரேடியோவ குடுத்திட்டு ஓடிற்றான் அம்பலத்தார். கந்தையா ரேடியோவோட நிக்கிறத பாத்து அம்பலத்தாற்ற கூட்டாளி தானே கந்தையா என்டு அவன போட்டு அடிச்சு உதைச்சு பொலிஸ் விசாரண அது இது எண்டு விசயம் பெரிசாகிப்போச்சுது. ரேடியோவ கந்தையாட்ட குடுத்த அம்பலத்தார் அண்டைக்கு ஓடின ஓட்டம் கொழும்புக்கு போய் அங்க இங்க ஆக்கள பிடிச்சு ஜேமனுக்கு போய்ற்றாரு. இப்ப தான் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறாரு.
-----------------------------------------------------------

சரி சரி சாமி வடக்கு வீதிக்கு போய்ற்றார் எண்டு நான் வந்திட்டன். பிறகு என்ன நடந்தது எண்டு தெரியல. இன்னொரு தரம் அவயள பாத்தா நடந்தது என்னனு கேட்டு சொல்லுறன்....

---------------------------------------------------------------------------------------------------------------------

இதயும் படியுங்க...
அக்காலப்பகுதியிலே செம்பருத்திப்பூவே செம்ருத்திபூவே பாடல் செமஹிட்... அதோட ஜேமனுக்கு போறதும் அங்க வேலை செஞ்சு திரும்பி வரும்போது தங்கமோதிரம், வைரசங்கிலி எண்டு படு அமர்க்களப்படுத்துவீனம்..

"\\\ நடந்தது என்னனு கேட்டுசொல்லுறன். நன்றி...///" எண்டு சொன்னதும் எத்தின நல்லுள்ளங்களின்ர மனசு குளிர்ந்திச்சுதோ தெரியல..!!! 

இப்ப நான் உங்களுக்கு நன்றி சொல்லுறன்... என்ன மனசு குளிருதா???


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

13 comments:

varanan said...

தெரியும்டா... வில்லுப்பாட்டு எண்டு தனிப்பாட்டு செய்தது... என்னயும் கூப்பிட்டனி என்ன... ஆனா நான் நாடகத்துக்கு போய்ட்டன்...

varanan said...

டேய் அம்பலத்தார் எண்டு ஒரு பதிவர் இருக்கிறாரே அவர நினைச்சா எழுதினது???

Kabil said...

ஏன்ரா சினிமா பாட்ட மாத்துறாய்... ஒறிச்சியலா பாட்டு எழுது... இதுக்கு வாரணணையும் கூப்பிட்டனியா?? உருப்பட்டுடும்..

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

வில்லுப்பாட்டோ தனிப்பாட்டோ நீ வர இல்லை... சோ உனக்கு அத பற்றி கதைக்குற தகுதி இல்ல... ஹிஹி...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

பதிவிலயே போட்டிருக்கிறனே... இப்பாடல் 2004ல் எழுதப்பட்டது என்டு... அதால அந்த கேள்விக்கு இடமில்லை...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

வாரணனை பற்றி உனக்கு தெரியாது... அவன் பாடினா ஊருக்கே கேக்கும்.. மைக் தேவையில்லை... வீட்ட ஓடின ஆக்களுக்கும் கேக்கட்டும் எண்டு வாரணனை கூப்பிட்டன் ஆனா அவன் வரலை...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அதால சனம் தப்பீட்டுது..

அம்பலத்தார் said...

ஸ்ரீ,கந்தையாவுக்கு பிறகு என்ன நடந்ததென்று அறிஞ்சிட்டியளோ? பாவம் அம்பலத்தானாலை ரொம்பக் கஸ்டப்பட்டிட்டானோ.

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அட அம்பலத்தண்ணையே...
மீதி இன்னும் தொடரும்... பெரிய வில்லுப்பாட்டு கச்சேரிக்கு தேவையான சரக்கு அம்பலத்தார் கந்தையாண்ணை கதையில இருக்குது...

அம்பலத்தார் said...

இப்படியே இன்னும் 4,5 கிசுகிசுப் பதிவு போட்டியளென்றால் அமபலத்தாரை சீக்கிரமே பிரபலமாக்கிய பெருமை உங்களுக்கு கிடைக்கும். தொடருங்கோ

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அம்பலத்தண்ணைக்கு வந்த ஆசைய பாத்தியளே... கண்டிப்பாக செய்கிறேன்.....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

நானும் அத தான் சொல்லுறன் சகோதரரே....