rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, December 20, 2011

உண்மையான போதிதர்மன் யார்?...

போதிதர்மன் தமிழ் பௌத்தர் என்பதால் பௌத்தமதத்தின் தமிழ்நாட்டு வளர்ச்சியில் இருந்து ஆரம்பிக்கிறேன்...

ஏற்கனவே போதிதர்மன் யார் என்பதை பற்றி சிறு விளக்கங்கள் தந்தேன்.. இது முழுமையான பதிவு... இங்கே சொடுக்குங்கள்... பழைய பதிவுக்கு...

அறிமுகம்
தமிழ் நூல் மரபில் புத்தரைப் பல்வாறு அழைப்பதுண்டு. பார்மிசை நடந்தோன், பகவன், புங்கவன், தருமன், சாந்தன், வாமன், புனிதன், சினன், வரன், என பல உண்டு. சில இடங்களில் புத்தரை திருமால் எனவும் கூறுகின்றனர். இப்பெயர்கள் பிங்கல நிகண்டு எனும் நூல் கூறுகின்றது. மயிலை, சீனி வேங்கடசாமியின் (1940) பௌத்தமும் தமிழும் என்ற நூலின் படி கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திற்கு பௌத்தம் வந்துவிட்டதுடன் அதன் செல்வாக்கும் பரவத்தொடங்கிவிட்டது. சங்ககாலத்திலேயே பௌத்தபள்ளிகள் இருந்ததாக எஸ்.என்.கந்தசாமி என்பவர் தனது பௌத்தம் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். புறநானுற்றிலே இடம்பெற்றுள்ள சிபி(சிவி) ஜாதக ஒப்பீட்டை ஆதாரமாக காட்டி அக்காலத்திலே பௌத்தம் தமிழகத்தில் காணப்பட்டதாக தர்மரத்தின தேரர் (1968) 'Buddhism in South India' ல் குறிப்பிட்டுள்ளார்.

ரி.என். ராமச்சந்திரனின் அபிப்பிராயப்படி கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி தமிழ்நாட்டு பௌத்தத்தின் பொற்காலப்பகுதி என்பதை தமிழின் செவ்வியல் இலக்கியங்கள், பௌத்தஆசிரியர்களின் ஆக்கங்கள் படம்பிடித்து காட்டுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சமண இலக்கியமான நீலகேசி, தேவாரம், நாலாயிரம்திவ்வியபிரபந்தங்கள், பெரியபுராணம் போன்றவற்றிலும் அக்கால பௌத்தம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

பௌத்தத்திற்கு தமிழ்நாட்டு அறிஞர்களது பங்களிப்பு
கிடைக்கப்பெற்ற ஆதாரங்களது அடிப்படையில் பல்லவர் உட்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த பௌத்த அறிஞர்களில் சங்கமித்திரர், புத்ததத்தர், மகாதேரர், போதிதருமர், திக்நாகர், தருமபாலர் (நாளந்தா பல்கலைக்கழக தலைவர்) வஜ்ரபோதி போன்றோர் குறிப்பிடத்தக்கோர்.

மேலும் தொடரும்...

மூலம் ,நன்றி- நினைவுரு (பேராசிரியர். சோ. கிருஷ்ணராஜா யாழ் பல்கலைக்கழக ஞாபகார்த்த வெளியீடு)

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

varanan said...

திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா?? இதிலயே முழுசா சொல்ல மாட்டியா??? அடுத்த பதிவும் இருக்கா...

Kabil said...

டேய் இந்த வருசத்துக்கான 100 வது பதிவாடா இது... முன்னேறீட்டாயடா மச்சி... கலக்கு...

Karthika Supramanijan said...

அண்ணா... எப்ப இத கண்டுபிடிச்சிங்க.... நல்லாயிருக்கு கலக்குங்க...