rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, December 14, 2011

என் முதல் இணையதள உருவாக்கம்...-சுன்னாகம் நூலகம்



சுன்னாகம் நூலகத்திற்காக என்னால் உருவாக்கப்பட்ட இணையதளத்தின் அங்குரார்ப்பன விழா இன்று இடம்பெற்றது..


Please Go- www.chunnakamlibrary.com


வலி.தெற்கு பிரதேசசபை சுன்னாகம் பொதுநூலக தேசிய வாசிப்பு மாத நிறைவுநாள் நிகழ்வுகள் 14.12.2011 புதன் காலை 10.00 மணிக்கு சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் கௌரவ தவிசாளர் திரு.தி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.


சுன்னாகம் நூலக இணையதளம் கௌரவ தவிசாளர் திரு.தி.பிரகாஷ் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 130வது ஜனன தினத்தையொட்டி ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஓவிய, சிற்ப கலைஞர் திரு.பொ.பசுபதியின் ஓவியங்கள், சிற்பங்கள் கண்காட்சி கூடம் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கல்வித்திணைக்களம் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.





வாசகர்வட்ட வெளியீடான வெள்ளிமலை சஞ்சிகை பற்றிய மதிப்பீட்டுரை மூதறிஞர்.சிற்பி சிவசரவணபவன் அவர்களால் ஆற்றப்பட்டது. 


வெள்ளிமலை சஞ்சிகையின் 11 வது இதழ்ப் பிரதியை சுன்னாகம் மக்கள் வங்கி முகாமையாளர் சு.இராஜமனோகரன் பெற்றுக்கொண்டார்.


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

6 comments:

varanan said...

தொடர்ந்து கலக்கு மச்சி... வாழ்த்துக்கள்....

Kabil said...

எவ்வளவு துட்டு வாங்கினாய்... ரீட் இல்லையா??

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

இதெல்லாம் சமூக சேவைடா... காசுக்காக இல்லை... கருத்துக்கு நன்றி

GOVINDARAJ,MADURAI. said...

நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@GOVINDARAJ,MADURAI. -- நன்றி அண்ணா..

Kabil said...

சமூக சேவையா.... எப்பயிருந்துடா இப்பிடி மாறின்னீ... சொல்லவேயில்லை....