rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 3, 2011

இன்றைய நாளின் விசேடம்... மாற்றுத்திறனாளிகளின் நாள்...

உலகலாவிய ரீதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.மாற்றுத்திறனாரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும்.

ஐக்கிய நாடுகள் சபை, 1981-ம் ஆண்டை 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக' அறிவித்தது. இதன் பின்னர் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளாகவும் அறிவித்தது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: