rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, December 6, 2011

நூறாவது பதிவு.:-வாழ்த்துக்கள் வேண்டப்படுகின்றன.

உங்களுக்காக இதுவரை 99 தடவை பதிவுகள் (பலருக்கு கரைச்சல், எரிச்சல்) தந்ததற்காக நான் சந்தோசப்படுகிறேன்...பலர் 1000 பதிவிற்கு மேல் தந்தாலும் என் முதல் நூறு இதுதான். என்னால் இதுவரை பதிவிடப்பட்ட 99  பதிவுகளில் ஒருசிலவாவது உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் தொடர்கிறேன். என் பதிவுகளை வாசித்து கஸ்டப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகள். 

இது என் ஃபிளாக் பற்றிய கதை. 
பாடசாலையில் உயர்தரத்தில் தகவல்தொழில்நுட்பம் படிக்கும் போது என் ஆசிரியர் மூலமாகவே இதை பற்றி அறிந்தேன். எனக்கு சுத்தமாக எழுதும் ஆர்வமே இல்லை. ஏதோ ஆசிரியர் சொல்லும் போது கேட்க வேண்டுமே (ஆசிரியர் சொல்கேட்டால் நல்லபிள்ளை என்ற பாராட்டு கிடைக்கும் என்ற நப்பாசையில்...)என்ற கட்டாயத்தின் பேரில் எழுத ஆரம்பித்தேன். 
2009 மே மாதம் என்னுடைய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்தேன். எழுதும் ஆசை வரவில்லை.. பிளாக்கில் எழுதுவது எப்படி என்று தெரியாததும் ஒரு காரணம். பிற பிளாக்கர்களை பார்க்கும் போது எரியாதசுவடுகள் பவனின் ஃபிளாக் பார்த்தேன். பிடித்திருந்தது. அவரை தொடர்புகொண்டு எப்படி பதிவிடுவது பற்றி தகவல்களை அறிந்தேன். நன்றி பவன் அண்ணா...

அக்காலத்தில் விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. அங்கிருந்து சில தகவல்களை சுட்டு பதிவிட்டேன். 25ம் திகதி ஏப்ரல் 2010 அன்றுதான் என் முதல் பதிவு பிளாக்கரில் பதிவிடப்பட்டது. அப்பதிவுகள் மூலம் என் பாடசாலை மட்டத்தில் புகழடைந்தேன்...!!!!!! 
விக்கிபீடியாவில் கொப்பி-பேஸ்ட் செய்து அலுத்து போனதாலும் பாடசாலைக்கு சென்று அலுத்து போனதாலும் சொந்தமாக கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். 
எழுதி எழுதி கைரேகை தேய்ந்தது தான் மிச்சம். உருப்படியான ஒரு பதிவும் இடவில்லை. அந்த நேரம் Samsung PL55 Digital Camera கிடைத்தது. கமரா கைல கிடந்ததால காணும் எல்லாத்தையும் புகைப்படம் எடுத்தேன். அவற்றை பதிவாக இட்டேன். ஓரளவு வரவேற்பு கிடைத்தது. காவலன் பட விமர்சனம் எழுதியதில் இருந்து சினிமா விடயங்களுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்து சில முக்கிய படங்களின் விமர்சனம் எழுதினேன். பிறகு எக்சாம் டைம் கொஞ்ச மாதம் ஃபிளாக்கிற்கு லீவு விட்டு செப்ரெம்பர் மாதம் தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தேன். ஒக்டோபர் மாதம் என் 50 வது பதிவு இடப்பட்டது. இன்று நூறாவது பதிவு. 

இந்நன்னாளில் என் பின்தொடர்வோராக காணப்படுவோருக்கும் சில சமயங்களில் கொமண்ட் பண்ணும் நல்லுள்ளங்களுக்கும் இன்ட்லியில் தொடர்பவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழ்10, யுடான்ஸ், இன்ட்லி தளங்களுக்கும் நன்றி. 
இதுவரை காலமும் இட்ட பதிவுகளால் யாரையாவது நோகடித்திருந்தால் என்னை மன்னித்துகொள்ளுங்கள்.

இனிமேல் இவ்வளவு பெரியபதிவு இடப்படமாட்டாது. சுலபமாக வாசிக்ககூடிய பதிவுகளே இனி வரும். 

பி.கு:- இன்றைய நாளை கொண்டாட விரும்புவோர் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு உங்கள் பாக்கட்டிலிருக்கும் பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு வரவும். (வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் வேகமாக ஓட முடியுமானால் காசு கொடுக்காமல் முடிந்த அளவு வேகமாக ஓடி தப்புங்கள்... அடி வாங்கினால் நான் பொறுப்பில்லை...)


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

visagan said...

ellam sari tambi
nee ietuvarai enta enta blogs la irruntu suddu suddu pativu potai endata solle irrunta innum nalla irruntu irrukumae..........!!!!!!!!

varanan said...

இதுவரை கிளப்பின கரச்சல் போதும்டா... இன்னும் னா தாங்காதுடா...

////////அந்த நேரம் Samsung PL55 Digital Camera கிடைத்தது. கமரா கைல கிடந்ததால காணும் எல்லாத்தையும் புகைப்படம் எடுத்தேன்./////////

எவண்டா கமரா தந்தது??? அவன கொல்லனும்டா...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

சொல்லுவாயடா குண்டா... அடி வேண்டுவாய்...