rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, December 1, 2011

பாதுகாப்பாக வாழ்வோம்..எயிட்ஸ்ஸை தடுப்போம்..

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்.
இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்கள் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு (Mucous membrane) அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது

இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களை சாரும் பொழுதோ ஏற்படக்கூடும்.
எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும்.  2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது. எயிட்ஸ் முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981 இல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் ஹெச்ஐவி எனக் கண்டறியப்பட்டது.

ஹெச்ஐவி எயிட்ஸுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. ரெட்ரோவைரஸ் எதிர்மருந்து ஹெச்ஐவி நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை. நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தாலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரஸின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும் புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

பாதுகாப்பாக வாழ்வோம்... எயிட்ஸ்ஸை தடுப்போம்...

நன்றி:- தமிழ் விக்கிபீடியா  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: