rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, December 13, 2011

9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..

இப்ப எங்க பாத்தாலும் 7ம் அறிவின் தாக்கத்தால் உள்ள இளசுகள் முதல் கிழசுகள் வரை எல்லோரும் நோக்குவர்மம் (பேக்குவர்மம்.) என்றும் ஐம்பூதத்தை கட்டுப்படுத்தல் என்று வலிப்பு வந்த காக்கா மாதிரி 2 விரலை நிலத்தை நோக்கி நீட்டிய படி திரியுறாங்கள். 

அத பார்த்து பார்த்து வெறுத்து போய் இப்பதிவு எழுதுகிறேன். யார் இந்த போதிதர்மர்.இந்த கேள்வியை படத்தின் ஆரம்பத்திலேயே முருகதாஸ் கேட்டுவிட்டார் தான். ஆனால் மிக சரியான பதில் யாரும் கூறவில்லை. 

தமிழர்களால் இதற்கான ஆய்வு பெருமளவு இடம்பெறவில்லையானாலும் சில அறிஞர்கள் அவரைப்பற்றி சில குறிப்புக்களை வேறுவேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். போதிதர்மர் காஞ்சிபுர பல்லவ மன்னனின் மகனாக பிறந்தவர் என்று அறியப்படுகிறது. 
அவர் சீனா சென்று போர்க்கலை, மருத்துவம் பரப்பியதாக படத்திலேயே கூறப்படுகின்றது.

ஆனால் படத்திற்காக போதிதர்மர் நோக்குவர்மம், பஞ்சபூதத்தை கட்டுப்படுத்தும் சக்தி பெற்றவராக காட்டப்படுவது. படத்திற்காக மட்டுமே. நிஜத்தில் நோக்குவர்மமும் இல்லை பேக்குவர்மமும் இல்லை.

மேலும் சில உண்மைகள் தொடர்ந்து வெளிவரும்.

ஒரு முக்கிய தகவல்:- 
போதிதர்மனை தொடர்ந்து 9 போதிதர்மர்கள் வாழ்ந்ததான வரலாறு கூறுகின்றது. அதை பற்றியும் தொடர்ந்து கூறுகிறேன்.

கொமண்ட் செய்யவும். என்னை ஊக்குவிக்கவும்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

13 comments:

varanan said...

இது உண்மையா ஹர்சன்??

Janavirajan said...

தொடருங்கள்.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... பதிவுக்கு நன்றி

*anishj* said...

தொடருங்கள்...! நன்றி !!!!

//அவர் சீனா சென்று போர்க்கலை, மருத்துவம் பரப்பியதாக படத்திலேயே கூறப்படுகின்றது.//

போதிதர்மன் சீனா சென்றதன் நோக்கமமே தனது மதத்தை பரப்புவதற்க்காக...

படத்தில் காட்டியிருக்குற மாதிரி அவர் குதிரையில் எல்லாம் சீனா போகல... கடல் மார்க்கமாதான் போனார்... :)

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

நீங்கள் கூறுவது சரிதான்.*anishj*

அவர் கப்பல் மூலமாகத்தான் சென்றார்.

கருத்துக்கு நன்றி...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

மேலும்... படத்தில் கடற்பயணம் என்றால் ஒருசில காட்சிகளே காட்டமுடியும். ஆனால் நிலப்பாதை என்றால் பல அழகிய காட்சிகளை (Locations) காட்டமுடியும். இதை சினிமா கோணத்தில் காணவேண்டும்...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

படம் ஓடவேண்டுமானால் சில மாறுதல்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் போதிதர்மனுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது தமிழகத்தில் 7ம் அறிவு மட்டுமே.

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

நான் எழுதுவதெல்லாம் உண்மை... உண்மையை தவிர வேறொன்றுமில்லை.../////// @Varanan

Anonymous said...

unmai yeandran nirubiyungal

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

நிச்சயமாக....
பெயரை குறிப்பிட்டு கருத்துரை இடவும்..
தயவு செய்து Anonymous ஆக கருத்துரை இடவேண்டாம்

RMY பாட்சா said...

பட வியாபாரதிர்காக போதிதர்மறை
மிகைபடுத்திக்காட்டி உள்ளார்கள்.

“வலிப்பு வந்த காக்கா மாதிரி 2 விரலை நிலத்தை நோக்கி நீட்டிய படி திரியுறாங்கள்”
நெத்தி அடி நண்பா....

உங்கள் தொடரை ஆவலுடன் எதிற்பார்கிறோம்.

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ RMY பாட்சா -- எதிர்பார்ப்பதற்கு நன்றி அண்ணா...

எதிர்பார்ப்பதற்கு நன்றி அண்ணா..

உங்கள் பதிவான 'வடிகட்டிய அயோக்கியத்தனம்.' சூப்பர் பதிவு அண்ணா

A.GURU said...

நோக்கு வர்மம் உள்ளது நண்பரே,கேரளத்தில் பிரகாசன் குருக்கள் உள்ளார்.யூ டியூப்பில் கூட பார்க்கலாம்.நேரில் சென்றும் பார்க்கலாம்.

Sriharshan Sharma said...

ஆம் நண்பரே.. நானும் பார்த்தேன். புத்தகங்களிலும் வாசித்தேன். நான் படத்தில் கூறப்பட்ட விடயத்தை மட்டும் சொன்னேன்.
கருத்திற்கும், எடுத்துக்காட்டியதற்கும் நன்றி..