rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, December 28, 2011

எனக்கு தெரிந்த சினிமா 2011

தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான பயணத்தில் சில சொதப்பல்களுடன் 2011 சினிமா முடிவடைகிறது..(முடிவடைந்து விட்டது...) இக்காலப்பகுதியில் வந்த படங்கள்... நடிக நடிகைகள்... இயக்குனர்.. இசையமைப்பாளர்கள் பற்றிய ஓர் அலசல் இதோ...

2011 எனக்கு பிடித்த படத்துடன் ஆரம்பமானது... அது காவலன்...  தொடர்ச்சியான சரிவில் இருந்து விஜயை காப்பாற்றிய படம் இது... இப்படத்தில் விஜய், அசினின் நடிப்பும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரொம்பபிடித்ததாக அமைந்தது... அதிலும் ஒருவிடயத்தை சொல்லிவிட்டு அவர் சொன்னாரா இவர் சொன்னாரா என குழம்புவதுடன் குழப்புவதும் கலக்கல்...

விஜய் என்றால் போட்டிக்கு அஜித் தான்... மங்காத்தா... அஜித்தின் 50வது படம் என்றதாலும் கோவா என்ற மொக்கை படம் எடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்தபடம் என்பதாலும் முதல்நாள் தியேட்டருக்கு போய் அடிபட்டு ரிக்கெட் கிடைக்காமல் 2ம் நாள் பார்த்ததால் பயங்கர எதிப்பார்ப்புடன் படம்பார்த்து திருப்தி அடைந்தேன்... அஜித்தின் ஏகன், அசல் பார்த்ததால் ஏற்பட்ட எரிச்சல் மங்காத்தாவின் கதை, விறுவிறுப்பு, என்பவற்றால் மறைந்தது... அண்மையில் 50வது வெற்றிவிழா கொண்டாடியதிலிருந்து அதன் வெற்றியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்...

மீண்டும் விஜய் புராணத்திற்கு வருவோம்.. ஜெயம்ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம்... பெரும்பாலும் எல்லோரும் வேலாயுதத்திற்கு நல்ல கருத்துகளே வழங்கியுள்ளார்கள்... எனக்கும் படம் பிடித்தது..

தெய்வதிருமகள்-- உலகம் முழுதும் உள்ள அனைவரும் விரும்பி, ரசித்து பார்த்த படம் இது...வியாபாரரீதியில் பெருமளவு வெற்றி ஆனால் குத்துபாட்டு, கவர்ச்சி ஆட்டம் பார்க்க போனவர்களுக்கு தோல்வியே...
ஆனால் ஐ ஆம் சாம் படத்தின் கொப்பி என்ற கருத்தால் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை... ஆனால் நடிகன் என்ற ரீதியில் விக்ரம்மிற்கு விருது வழங்கலாமே...

எங்கேயும் எப்போதும்..-- அறிமுக இயக்குனர் சரவணனின் கை வண்ணத்தில் வேறுபட்ட குணம் கொண்ட காதலர்களின் பஸ் பயணத்தையும் விபத்தையும் காட்டுவது சூப்பர்... விபத்திலிருந்து ஆரம்பிப்பது புதுமுயற்சி...
பாடல்களும் உறுத்தவில்லை... கதையோடு பாடல்கள் நகர்வது பலம்... நல்ல மெசேச் படம்...

7ம் அறிவு.. தமிழர்கள் பெரிதும் அறியாத தமிழனைப்பற்றி காட்டியதற்கு முருகதாஸிற்கு சல்யூட்... ஆனால் சில கமர்சியல் மாற்றங்கள் தேவையற்றது... நோக்குவர்மம் என்று கார், பைக்கை பறக்க வைத்து விளையாட்டுகாட்டுகிறார்... அலுத்தது.. மற்றபடி நல்லபடம்...

கோ-- பத்திரிக்கையாளன் சந்திக்கும் எதிர்ப்பு, காதல், கடமை, நட்பு என நல்ல கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல இசை என எல்லாவிதத்திலும் முழுமையாக வந்து சூப்பர் ஹிட் ஆன படம்... ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் எல்லோருக்கும் ஒரு மைல்கல்லான படம்.. கே.வீ.ஆனந்த் செமஆளுன்னு மீண்டும் உணர்த்திய படம்..

ஆடுகளம்- தேசியவிருதே பெற்ற படம் நான் சொல்லதேவையில்லாததால் விட்டுவிடுகிறேன்..

அதைவிட சில பிடித்தபடங்கள் எங்கேயும் காதல், வானம், மயக்கம்என்ன?, வேங்கை,... 

---------------------------
இந்தவருடம் பிடித்த நடிகர்கள்-- விஜய், அஜித், சூர்யா, எங்கேயும் எப்போதும் சர்வா, ஜீவா 
இந்தவருடம் பிடித்த நடிகைகள்-- தெய்வதிருமகள் சாரா மட்டும்தான்பா...

இயக்குனர்கள்-- கே.வீ.ஆனந்த், விஜய், சித்திக், ராதாமோகன்(பயணம்) , வெங்கட்பிரபு
இசையமைப்பாளர்கள்- ஜு.வீ.பிரகாஸ்(தெய்வதிருமகள், மயக்கம் என்ன, ஆடுகளம்), ஹரீஸ் ஜெயராஜ்(எங்யேயும்காதல்,கோ,7ம் அறிவு, வித்தியாசாகர்(காவலன்)

யுவன் எங்கயோ மிஸ்ஸிங்.. ஒண்ணுமே பிடிக்கல.. ராஜபாட்டை சுத்தமா பிடிக்கல...
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

7 comments:

varanan said...

காவலன் பிடிச்சிருக்கா??? எப்பிடிடா?? மற்ற எல்லா படமும் நல்லதுடா...

Kabil said...

பேபி சாராவ பிடிக்காமல் ஒரு மனுசனும் இருக்கமாட்டான்....

Karthika Supramanijan said...

ஐ லவ் பேபி சாரா... விஜய் சாரையும் தான்.... பட் சூர்யா ரொக்ஸ்....

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

பதிவில போட்ட எல்லா படமும் நல்ல படம் தான்... சந்தேகமே வேண்டாம்...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அது தெரிஞ்ச விசயம் தானே கபில்... எதிர்காலத்தில அதாவது 20 வருசத்துக்கு பிறகு சூப்பர்ஸ்ரார் ரஜனிக்கு ஒரு சோடி கிடைக்கும்.. அதுதான் சாரா... ஹிஹிஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு வரிசை...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

கருத்துக்கு நன்றி அண்ணா..