rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 31, 2011

2012 ஐ வரவேற்போம்..

Happy New Year Machi... Sorry Only Tamil ya... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
புதுவருட ஆரம்ப படமாக இது இருப்பது நல்லது போல இருக்குதே... ஹிஹிஹி... உலகம் அழியுறதுக்குள்ள அனுபவிச்சு முடிச்சிடனும்னு ஊக்கமழிக்கும் படம் இது...


.
படங்கள் உதவி கூகிளு...
. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

2011 என்ன நடந்தது...

இன்றுடன் 2011 முடிவடைகிறது... இந்த 365 நாள்ள என்ன செஞ்சு கிழிக்கப்பட்டது என்பது பற்றிய பதிவு இது... உலக விடயங்கள் முதலில்...

 பெப்-02-- 2ஜீ ராசா கைது...


பெப்-20- பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மரணம்.


மார்ச்-11- ஜப்பான் பூகம்பத்தால் புகுசிமா அணுஉலை வெடிப்பு..


ஏப்-02- 11 வது உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 28 வருட கனவை இந்திய அணி நிறைவேற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.


ஏப் 24 சத்திய சாயி பாபாவின் மகாசமாதி..


ஏப்-29- வில்லியம்- கேட் திருமணம்.


மே-03- இலங்கைத்தமிழர் ராதிகா சிற்பேசன் கனேடிய தேர்தலில் வெற்றி பெற்றார்.


அமெரிக்க அரசின் மிகப்பெரிய சாதனை... பின்லேடனை சுட்டுக்கொல்வது... வல்லரசில் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டிய பின்லேன் என்ற சாதனையாளனை சுட்டுக்கொன்றது அமெ... ஆனால் அதிலும் புகைப்படம் கிராபிக்சில் செய்யப்பட்டது அது இது என பல பிரச்சினைகள்...


மே-13- தமிழகசட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி...


மே-28- 4வது ஐபிஎல் லில் சென்னை சுப்பர்கிங்ஸ் 2வது முறை வெற்றி..


ஜீன்-27- எந்திரன் படத்துக்கு 3 சர்வதேசதிரைப்பட விருதுகள் கிடைத்தன..


ஜீலை-9-தென்சூடான் எனும் புதிய நாடு அவதரித்தது.(சுதந்திரதினம்)..


ஓக-16- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே கைது.


செப்-11- இயக்குனர். பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் விருது..


ஒக்-5- அப்பிள் நிறுவன உருவாக்குனர் ஸ்டீவ் ஜொப்ஸ் மரணம்.


ஒக்-20- சர்வாதிகாரி கடாபி கிளர்ச்சிப்படையால் சுட்டுகொல்லப்பட்டார்.

ஒக்-31- உலகசனத்தொகை 700கோடியை எட்டியது.

டிச-8- 219 ஓட்டங்களை சேவாக் விளாசி அதிகூடிய 1நாள் போட்டியில் அதிக ஓட்டம் அடித்த வீரராக சாதனை படைத்தார்.இந்தளவும் வேற ஆக்கள் கிழிச்சது... முதல்ல நாம என்ன கிழிச்சம் எண்டுறத யோசியுங்க.. நாடு உருப்படும்...

ஓஓ நீங்க நான் என்ன கிழிச்சன் எண்டு கேக்குறீங்களா??

உள்ளதிலயே நான்தான் கனக்கா கிழிச்சனான் பாக்கபோறீங்களா??

இந்தளவு கிழிச்சது காணுமா??? he he he...

இனி நாம செய்தது...

கிழிப்பு 1 :::  இந்த வருசம் தான் நிறைய படம் பாத்தனான்..

கிழிப்பு 2 :::கஸ்ரப்பட்டு இந்த வருசம் மட்டும் 101 பதிவு எழுதியிருக்கிறன். (அவனவன் 1000 பதிவ தாண்டியிருக்கிறான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...)

கிழிப்பு 3 :::  எல்லாவேலையயும் பாத்துக்கிட்டு A/L Final எக்சாம் எழுதியது... ஆனா அதிலயும் நிறைய பிரச்சினை...((ரிசல்ட் கேக்கப்படாது..))

கிழிப்பு 4 ::: முக்கியமா பயங்கர காய்ச்சலோடும் இன்று பதிவெழுதவேண்டும் என்ற முடிவில் இந்த பதிவு எழுதுவது...(Kadavulee...)

கிழிப்பு 5 ::: எந்த கொண்டாட்டமும் இன்றி புதுவருடத்தை கழிக்க எண்ணியது...(No Money. No Money..No Honey  No Honey da..)

ஹப்பி நியூ இயர் மச்சி.. சொரி... ஒன்லி தமிழ் ya... 
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...
.


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, December 30, 2011

கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 3


முன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் பதிவுக்கு செல்ல


எல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள்... அத நக்கல் அடிச்சா கொந்தழிச்சு போயிடுவீங்கனு கவலைப்படாமல் போட்ட பதிவு... சிரிக்க மட்டுமே... 
சிரிப்பு வராட்டி மனம் விட்டு அழுங்கள்... இவன் எல்லாம் ஏன் பதிவுலகு வந்தான் என்பதை நினைத்து.....

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Thursday, December 29, 2011

தமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...???

உலக அமைதிக்கானது இந்த 'லவ் ஆன்தம்' என்ற வாசங்களோடு தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சோஒனி மியூசிக் நிறுவனத்துகாக பாடி நடித்துக் கொடுத்திருந்தாராம் சிம்பு!


அந்தப்பாடலை சோனி மியூசிக் புத்தாண்டில் வெளியிட இருந்த நிலையில், தற்போது தனுஷீன் கொலவெறி பாடல் உலகையே கலக்கிக் கொண்டிருகிறது என்று சொல்லப்படுவதால்  இதன் முன்னோட்டத்தை இரண்டே முக்கால் நிமிடம் வெளியிடும்படி சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் சோனி மியூசிக் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது என்று
தகவல் கிடைக்கிறது.

.. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, December 28, 2011

எனக்கு தெரிந்த சினிமா 2011

தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான பயணத்தில் சில சொதப்பல்களுடன் 2011 சினிமா முடிவடைகிறது..(முடிவடைந்து விட்டது...) இக்காலப்பகுதியில் வந்த படங்கள்... நடிக நடிகைகள்... இயக்குனர்.. இசையமைப்பாளர்கள் பற்றிய ஓர் அலசல் இதோ...

2011 எனக்கு பிடித்த படத்துடன் ஆரம்பமானது... அது காவலன்...  தொடர்ச்சியான சரிவில் இருந்து விஜயை காப்பாற்றிய படம் இது... இப்படத்தில் விஜய், அசினின் நடிப்பும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரொம்பபிடித்ததாக அமைந்தது... அதிலும் ஒருவிடயத்தை சொல்லிவிட்டு அவர் சொன்னாரா இவர் சொன்னாரா என குழம்புவதுடன் குழப்புவதும் கலக்கல்...

விஜய் என்றால் போட்டிக்கு அஜித் தான்... மங்காத்தா... அஜித்தின் 50வது படம் என்றதாலும் கோவா என்ற மொக்கை படம் எடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்தபடம் என்பதாலும் முதல்நாள் தியேட்டருக்கு போய் அடிபட்டு ரிக்கெட் கிடைக்காமல் 2ம் நாள் பார்த்ததால் பயங்கர எதிப்பார்ப்புடன் படம்பார்த்து திருப்தி அடைந்தேன்... அஜித்தின் ஏகன், அசல் பார்த்ததால் ஏற்பட்ட எரிச்சல் மங்காத்தாவின் கதை, விறுவிறுப்பு, என்பவற்றால் மறைந்தது... அண்மையில் 50வது வெற்றிவிழா கொண்டாடியதிலிருந்து அதன் வெற்றியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்...

மீண்டும் விஜய் புராணத்திற்கு வருவோம்.. ஜெயம்ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம்... பெரும்பாலும் எல்லோரும் வேலாயுதத்திற்கு நல்ல கருத்துகளே வழங்கியுள்ளார்கள்... எனக்கும் படம் பிடித்தது..

தெய்வதிருமகள்-- உலகம் முழுதும் உள்ள அனைவரும் விரும்பி, ரசித்து பார்த்த படம் இது...வியாபாரரீதியில் பெருமளவு வெற்றி ஆனால் குத்துபாட்டு, கவர்ச்சி ஆட்டம் பார்க்க போனவர்களுக்கு தோல்வியே...
ஆனால் ஐ ஆம் சாம் படத்தின் கொப்பி என்ற கருத்தால் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை... ஆனால் நடிகன் என்ற ரீதியில் விக்ரம்மிற்கு விருது வழங்கலாமே...

எங்கேயும் எப்போதும்..-- அறிமுக இயக்குனர் சரவணனின் கை வண்ணத்தில் வேறுபட்ட குணம் கொண்ட காதலர்களின் பஸ் பயணத்தையும் விபத்தையும் காட்டுவது சூப்பர்... விபத்திலிருந்து ஆரம்பிப்பது புதுமுயற்சி...
பாடல்களும் உறுத்தவில்லை... கதையோடு பாடல்கள் நகர்வது பலம்... நல்ல மெசேச் படம்...

7ம் அறிவு.. தமிழர்கள் பெரிதும் அறியாத தமிழனைப்பற்றி காட்டியதற்கு முருகதாஸிற்கு சல்யூட்... ஆனால் சில கமர்சியல் மாற்றங்கள் தேவையற்றது... நோக்குவர்மம் என்று கார், பைக்கை பறக்க வைத்து விளையாட்டுகாட்டுகிறார்... அலுத்தது.. மற்றபடி நல்லபடம்...

கோ-- பத்திரிக்கையாளன் சந்திக்கும் எதிர்ப்பு, காதல், கடமை, நட்பு என நல்ல கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல இசை என எல்லாவிதத்திலும் முழுமையாக வந்து சூப்பர் ஹிட் ஆன படம்... ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் எல்லோருக்கும் ஒரு மைல்கல்லான படம்.. கே.வீ.ஆனந்த் செமஆளுன்னு மீண்டும் உணர்த்திய படம்..

ஆடுகளம்- தேசியவிருதே பெற்ற படம் நான் சொல்லதேவையில்லாததால் விட்டுவிடுகிறேன்..

அதைவிட சில பிடித்தபடங்கள் எங்கேயும் காதல், வானம், மயக்கம்என்ன?, வேங்கை,... 

---------------------------
இந்தவருடம் பிடித்த நடிகர்கள்-- விஜய், அஜித், சூர்யா, எங்கேயும் எப்போதும் சர்வா, ஜீவா 
இந்தவருடம் பிடித்த நடிகைகள்-- தெய்வதிருமகள் சாரா மட்டும்தான்பா...

இயக்குனர்கள்-- கே.வீ.ஆனந்த், விஜய், சித்திக், ராதாமோகன்(பயணம்) , வெங்கட்பிரபு
இசையமைப்பாளர்கள்- ஜு.வீ.பிரகாஸ்(தெய்வதிருமகள், மயக்கம் என்ன, ஆடுகளம்), ஹரீஸ் ஜெயராஜ்(எங்யேயும்காதல்,கோ,7ம் அறிவு, வித்தியாசாகர்(காவலன்)

யுவன் எங்கயோ மிஸ்ஸிங்.. ஒண்ணுமே பிடிக்கல.. ராஜபாட்டை சுத்தமா பிடிக்கல...
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Tuesday, December 27, 2011

அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்

நான் 7ம் வகுப்பு படிக்கும் போது அந்தநேரத்தில் புழக்கத்தில் இருந்த சில நடைமுறைகளையும் சூழ்நிலைகளையும் பற்றிய சொற்களை பயன்படுத்தி என் அப்பாவால் எழுதப்பட்டு நான் ரியூசன் ஆண்டுவிழாவில் பாடியது... (கத்தியது என்று கூட சொல்லலாம்...) இப்பவும் ஞாபகம் இருக்குது அப்ப என்ர வயசு பொடியள் எல்லாம் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாலும் அன்று அவர்களின் நாடகம் அரங்கேற இருந்ததாலும் என்னோடு சேர்ந்து வில்லுப்பாட்டாக செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை... நான் தனிமரமாக வில்லுப்பாட்டு என்று மேடை ஏறியதும் பின்னால் இருந்த சனம் வீட்ட கிளம்பிட்டுது... (என்ன கொடுமைடா...) என் பாட்டையும் அதனை கேட்கும் கொடுமையையும் சகித்துக்கொண்டு முன்வரிசைப்பல் இல்லாத சில கிழக்கட்டைகள் முன்வரிசையில் அமர்ந்திருந்த தைரியத்தில் சில பாடல்களை இழுத்துவிட்டேன்...(ஒருவேளை அந்த கிழடுகளுக்கு காது கேக்காதோ தெரியல....) அந்த வில்லுப்பாட்டு பாடலில் எனக்கு பிடித்த பாடல் தொகுதியை வாசியுங்கள்...

---------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம். எப்பிடி இருக்கிறீங்க. இப்ப ஒரு வில்லுப்பாட்டு பாடலை பார்ப்போமா?
------------------------
நல்லூர் கந்தனின் திருவிழா காலத்தில தினமும் கந்தையா கோயிலுக்கு வருவார். அண்டைக்கு தேர்த்திருவிழா. மேற்கு வீதி. அங்க ஒரு ஆள காணுறாரு. பட்டு வேட்டி. தங்கமோதிரம். கழுத்தில வைரசங்கிலி. எண்டு படு அமர்க்களம்.( இப்ப எல்லோரும் அப்படிதான். ஆனா பாட்டு எழுதப்பட்டது 2004.) அவர பாத்ததும் கந்தையா யோசிச்சாரு. திடீரென பொறி தட்டியது... அட நம்ம அம்பலத்துநாதன்... கிட்டப்போய்......

(செம்பருத்திப்பூவே செம்பரத்திபூவே பாடல் மெட்டில்)

செம்பருத்தி பூவே உண்மையான பாடல்...

அம்பலத்துநாதா அம்பலத்துநாதா
ஒன்றாய் பள்ளி போனோம் நினைவில்லையா?
என்னையறியாமல் ஜேமனுக்கு போனாய்.
போடருக்குள் நுழைந்தாய் நினைவில்லையா?
உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா?
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான்
சொல்லாமல் தவிக்கின்றேன்.... (அம்பலத்து...)

பாட்ட கேட்டதும் அம்பலத்தாருக்கும் பொறி தட்டியது..

(அதே மெட்டில்)
நீயென்ன சொல்வது நானறிவேன்.
நான் என்ன சொல்வது நீயறிவாய்.
நானென்ன சொல்லவந்தேன்.
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
இந்த கடவுள் தான் அறியும்.
ஊருக்குள் என்ன சொல்ல வந்ததெண்டு
கந்தையா உனக்கென்ன தெரியாதா?
ஓஓ...... அடியா நொருக்கா தெரியவில்லை.
பிடித்தால் சிறையா புரியவில்லை.
அதை சொல்ல தான் நினைக்கின்றேன்.
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்.

என்ன நடந்தது தெரியுமா???
அம்பலத்துநாதரும் கந்தையாவும் ஒரே வகுப்பில் படிச்சவங்க... கூட்டாளிங்க... ஒருமுறை அம்பலத்தார் பள்ளிக்கூடத்தின்ர ஓட்ட பிரிச்சு உள்ள இறங்கி பள்ளிக்கூட ரேடியோவ திருடிற்றான். அத எடுத்து கொண்டு ஓடும் போது அதிபர் கண்டுட்டார். அப்ப கந்தையா முன்னால வர அவனிட்ட ரேடியோவ குடுத்திட்டு ஓடிற்றான் அம்பலத்தார். கந்தையா ரேடியோவோட நிக்கிறத பாத்து அம்பலத்தாற்ற கூட்டாளி தானே கந்தையா என்டு அவன போட்டு அடிச்சு உதைச்சு பொலிஸ் விசாரண அது இது எண்டு விசயம் பெரிசாகிப்போச்சுது. ரேடியோவ கந்தையாட்ட குடுத்த அம்பலத்தார் அண்டைக்கு ஓடின ஓட்டம் கொழும்புக்கு போய் அங்க இங்க ஆக்கள பிடிச்சு ஜேமனுக்கு போய்ற்றாரு. இப்ப தான் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறாரு.
-----------------------------------------------------------

சரி சரி சாமி வடக்கு வீதிக்கு போய்ற்றார் எண்டு நான் வந்திட்டன். பிறகு என்ன நடந்தது எண்டு தெரியல. இன்னொரு தரம் அவயள பாத்தா நடந்தது என்னனு கேட்டு சொல்லுறன்....

---------------------------------------------------------------------------------------------------------------------

இதயும் படியுங்க...
அக்காலப்பகுதியிலே செம்பருத்திப்பூவே செம்ருத்திபூவே பாடல் செமஹிட்... அதோட ஜேமனுக்கு போறதும் அங்க வேலை செஞ்சு திரும்பி வரும்போது தங்கமோதிரம், வைரசங்கிலி எண்டு படு அமர்க்களப்படுத்துவீனம்..

"\\\ நடந்தது என்னனு கேட்டுசொல்லுறன். நன்றி...///" எண்டு சொன்னதும் எத்தின நல்லுள்ளங்களின்ர மனசு குளிர்ந்திச்சுதோ தெரியல..!!! 

இப்ப நான் உங்களுக்கு நன்றி சொல்லுறன்... என்ன மனசு குளிருதா???


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2


முன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் பதிவுக்கு செல்ல

எல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள்... அத நக்கல் அடிச்சா கொந்தழிச்சு போயிடுவீங்கனு கவலைப்படாமல் போட்ட பதிவு... சிரிக்க மட்டுமே... 
சிரிப்பு வராட்டி மனம் விட்டு அழுங்கள்... இவன் எல்லாம் ஏன் பதிவுலகு வந்தான் என்பதை நினைத்து........

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Sunday, December 25, 2011

நண்பன் Trailer

நண்பன் படத்தின் புத்தம்புதிய உயர்தரமுன்னோட்ட காட்சி... யூரியூப்பில் இருந்து...

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

கிறிஸ்மஸ் வாழ்த்தும்... சுனாமி நினைவும்...

அன்பார்ந்த வாசகர்களே... 
அறிவார்ந்த பின்தொடர்வோரே... 
நல்லுள்ளம் கொண்ட கருத்துரை இடுவோரே... 
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... 25.12.. மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கவும் இனிவரும் காலத்தில் எல்லா வளங்களும் பெற்று நன்றாக வாழ வேண்டுகிறேன்... 

=================================================================================
=================================================================================
=================================================================================

அத்துடன் 26.12 என்ற கருப்புதினம் நாளை என்பதால் சுனாமியால் உயிரிழந்த அனைவரின் ஆத்மசாந்திக்காகவும், குடும்பத்தினரின் மனசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்...  

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......