rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, November 21, 2011

பவர்ஸ்டார்-பஞ்ச் டயலாக்...

பவர் பற்றி ஏதாவது போடலாம் எண்டா எதிர்காலத்தில சி.எம் ஆகி ஏதாவது பிராப்ளம் தந்தா என்ன பண்ணுறது எண்ட பயம் ஆனாலும் பரவாயில்லைனு ஒரு பதிவு.. ஏற்கனவே 7ம் அறிவை பின்தள்ளிய பவர்ஸ்டார். பற்றி ஒரு பதிவு போட்டன்.. 
நானே நினைச்சு பாக்கல அதுவும் 7ம் அறிவு விமர்சனத்தை விட சூப்பரா ஓடிச்சுது. 
பவரின் போட்டோஸின் அழகை பார்ப்பதற்கு 699 பார்வையாளர்கள் பார்த்தார்கள்...
7ம் அறிவை பின்தள்ளிய பவர்ஸ்டார்!!! பதிவை 654 பேர் பார்த்துள்ளார்கள்..
7 ம் அறிவு- திரைவிமர்சனம் 579 பேர் பார்த்துள்ளார்கள்... 
என்ன சொல்லுறீங்க...
இனி பவர்தான் என் பிளாக்கிற்கு குலதெய்வம்.. சொறி.. பவர் தெய்வம்...

நம்ம பவர் பற்றின பவர் ஜோக்ஸ் சில...(இவை பவர்ஸ்டாரின் அடுத்தபட!!!! வசனமாக இருக்கவேண்டியவை..)
  • சினிமாக்கு மட்டும் நான் பவர் இல்லை.. தமிழகத்திற்கே பவர்...

  • ரசிகர்: பவர் நீங்க இருக்கும் போதே இந்தியால பவர் கட்டா???
  • உங்க முகவெட்டுக்கு நீங்க ஹாலிவுட் மட்டுமில்லை... ஏலியன்ஸ் எடுக்கிற படத்திலயும்... நீங்க ஹீரோவா நடிக்கலாம்..(மனிதனா கூட நடிக்கமுடியாது...) நான் சொன்னது படத்தில இருக்கிற முகவெட்ட பற்றி...

  • தலைவா உங்க ஸ்டைல் என்ன? நடிப்பு என்ன?? ஆமா உங்க படம் எங்க ஓடுது??
  • உங்களுக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் தர இல்லை...(தந்தா ஆஸ்கருக்கே அவமானம்... அப்பிடியா தலைவா??)

  • தேர்தல்ல நிக்கிற நோக்கம் இருக்கா?? நிக்காட்டாலும் ரசிகர்கள் விடமாட்டாங்க... வேட்பாளர் ஆகாமலே அடுத்த சி.எம் நீங்கதான்.
  • எல்லாரும் படத்தை தான் 3 மணிநேரம் பாப்பாங்க.. ஆனா நாங்க உங்க பட போஸ்ரரையே 3 மணிநேரம் பார்ப்போம்...(எப்படா இந்த படம் வந்தது என்ற சந்தேகத்துடன்...)

இவற்றை பவர்ஸ்டாரை தம் குலசாமியாக நினைப்பவர்கள்... அவரது ரசிகர்கள் பார்த்து என்மீது கோபப்படகூடாது...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: