rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, November 19, 2011

பாட்டி வடையா சுட்டவா?? கமல் சொன்ன கதை

போன தடவை மேஜர். சுந்தராஜன் கதை சொன்னது ஞாபகமிருக்கும் எண்டு நினைக்கிறன். பார்க்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.

இந்த முறை உலகநாயகன் கமலை அழைத்தோம்.
அவரும் பாட்டிபுராணமே பாடினார். சொறி.. சொன்னார்.

இந்த பாட்டி இன்று நேற்று வடை சுட்ட பாட்டி இல்லை.. சரித்திர காலத்திலே.. அதாவது சேரனும் சோழனும் இலங்கை அரியணையில் அமர போர்புரிந்து கொண்டிருந்த காலம். அதே நேரம் சிவனா அரியா சிறந்தவர்கள் என சோழர்களிடையே மதவேற்றுவை வந்த காலம். அவ்வேளையிலே சோழமண்டலத்தின் தெற்கே காவேரி கரையிலே அரியையும் சிவனையும் தவறாது வணங்கி வந்த ஒரு தமிழ் கிழத்தி வடை சுட்டு வந்தாள். கிழத்தி என்பது கிழவி என்பதை மரியாதைப்படுத்தும் சொல். அவ்வழியில் வந்த கருங்காக்கை கிழத்தி சுடும் வடையின் அழகிலே மதி மயங்கிற்று.. யாரும் அறியா வண்ணம் வடையை திருட வழிவகுத்தது.. செயல்படுத்தவும் செய்தது. கிழத்தியோ காக்கா வடையில் பட்டதால் ஏற்பட்ட தீட்டிற்காய் மனம் வருந்தி ஏற்கனவே சுட்ட வடைகளை நதியிலே வீசினாள்.
நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தான் சொல்லுகிறேன்.. பாவம் தமிழ் கிழத்தி.. சுட்டவடையை வீதிய அப்பக்தியில் சிறந்த பாட்டிக்கு உதவியிருக்க வேண்டுமல்லவா நீங்கள் சொல்லும் கடவுள்??

அடுத்த பதிவும் பாட்டி வடை சுடுவார்...
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: