rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, November 9, 2011

பதிவுலகில் பராசக்தி!!!

இந்த பதிவுலகம் பாலோவர்ஸ் நிறைந்த பல பதிவர்களை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல பதிவுகளையும் கண்டிருக்கிறது. ஆகவே இப்பதிவு விசித்திரமல்ல,  பதிவெழுதும் நானும் புதுமையானவனல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய வலையோடிதான்.

வலையுலகில் புகுந்தேன். பேஸ்புக்கில் நட்புவட்டம் பெருக்கவா இல்லை. பெயர் தெரியாவர்களின் போட்டோக்களிற்கு கொமன்ட் பண்ண...
டுவீட்டரில் ட்வீட்டினேன். புது ட்வீட் போடவா இல்லை. யாரோ போட்டதை ரீட்வீட் போடவே.. பதிவுலகில் தலைகாட்டினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. வலையுலகில் புகுந்தேன். மொக்கை நியூஸ் படிக்கலாம் என்பதனாலா அல்ல. வலையுலகில் வட்டமடிக்கவில்லையே என்ற எண்ணம் இருக்கக்கூடாது என்பதற்காக. பதிவுலகில் புகுந்தேன். பதிவுலகில் பிரபல்யமாகவா அல்ல. பதிவு போடுகிறேன் என்ற ஓவர் பில்டப்பிற்காக.

உனக்கேன் இவ்வளவு ஓவர் பில்டப், உலகத்தில் யாருக்கும் இல்லாத பில்டப், என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. யாரோ போட்ட போஸ்ட்டை தான் போட்டதான பீற்றிக்கொள்வார்களே – அதைப் போல.

என்னை பிளாக்கர், பிளாக்கர் என்கிறார்களே, இந்தக் பிளாக்கரின்; வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள மொக்கைகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். கொமன்ட் போட நண்பர்கள் இல்லை என் பிளாக்கில், ஏன்ரா பதிவுலகு வந்தாய் என திட்டும் தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள். நேரடி கொப்பிபேஸ்ட் செய்ததில்லை நான். ஆனால் அதையே சொந்த போஸ்ட் போன்று போட்டிருக்கிறேன்.  கேளுங்கள் என் பதிவுலக கதையை! இணைய பாவனையாளர்களே! கொமன்ட் எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

என் வலைத்தள பெயரோ என்னைத்தேடி.. ஓரளவு மங்களகரமான பெயர் என நினைக்கிறேன். ஏன் போட்டேன் என்னைத்தேடி. அவரவர் தம்மை பற்றி அறிவதற்காகவா? இல்லை இதை பார்த்தாவது என்னைத் தேட மாட்டார்களா என்பதற்காக..  ;. நான் நினைத்திருந்தான் பிற தளங்களிலிருந்து பதிவை சுட்டு போட்டு வாசகர்களை வரவைத்திருக்கலாம். வலை விளம்பரங்களை போட்டு காசு பார்த்திருக்கலாம். செய்தேனா! இல்லையே!!! (தெரியாது. அதால செய்யல!!!)

என்னை பாலோ செய்தார்களா?. அல்லது லைக்காவது செய்தார்களா?. பதிவுலகில்; உங்கள் முன் நிற்கிறேனே (அட நான் தான்), இவன் மொக்கை போஸ்ட் போட வந்தான். மொக்கை வராததால் விட்டு விட்டான்;.

மற்ற பதிவர்கள் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக தங்கள் தளத்தை போலோ செய்ய கேட்டனர். அதில் தலைமையானவன் இந்த ஹரி.(ஹரி உன்னை தான்.) தன் தளத்திற்கு புதிய வெட்ஜ் போட சொல்லுகிறான். ஆனால் என்னை பதிவுகள் (உங்களுக்கு தற்கொலைக்கு சமன்) போட தூண்டியது இவன் தான். (அதுக்காக அடிக்கிறதா இருந்தா அவன ரூம் போட்டு கூட அடிக்கலாம்.)

தமிழ்மணத்தில் லிங் குடுக்க முயற்சித்தேன் எரர் மெஸ்சேச் என்னை மிரட்டியது. இன்ட்லியில் இணைப்பு கொடுத்தேன் இணைய இணைப்பே தகிடுதத்தோம் செய்தது. நாடினேன் நாடினேன் தமிழ்10 ஐ நாடினேன் தமிழ் சரியில்லையென்று தமிழர்கள் நக்கல் செய்தார்கள். என் கஸ்டத்தை போக்கியிருக்கவேண்டும். இன்று நியாயம் பேசுபவர்கள்;. செய்தார்களா? லிங் கொடுக்க விட்டார்களா?

யாரோ ஒரு தில்லாலங்கடி:- தன் பதிவை பற்றி எழுதுவதை விட்டு வேறு தளங்களுக்கு செல்கிறார் இவர்...

நான்:- யார் தளமுமில்லை. அதுவும் என் பிரச்சினைதான். என் பிளாக்கின் பிரச்சினை. அதற்கு காரணம் நீங்கள். 
பிளாக் இல்லாமல் என்ன வலையுலவி நீ என பேசியது ஒரு குற்றம்? 
அது பிளாக்கை கிறியேற் செய்த என்குற்றமா? செய்ய சொன்ன உங்கள் குற்றமா?.

ஒழுங்கான மொக்கை போஸ்ட் போடுற இல்லைனுறாங்களே அது ஒரு குற்றம். 
அது மொக்கை போடதெரியாத என் குற்றமா? மொக்கை போட தெரியாத என்ன மொக்கை போஸ்ட் போட சொன்ன உங்கள் குற்றமா? 

உங்களின் தூக்கத்தை கெடுத்ததாக திட்டுகிறீர்களே அது ஒரு குற்றம். 
நானா வாசிக்க சொன்னேன் உங்களை. 

இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? அதுவும் உங்கள் குற்றமே.  

இதுதான் என் பதிவேட்டின் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் மொக்கை, சீரியஸ், அனுபவம், அரசியல்...வந்தது வந்திட்டீங்க கருத்துரை இட்டு செல்லவும்.

என்றும் நன்றியுடன்:-


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: