rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, November 30, 2011

மயக்கம் என்ன? திரைவிமர்சனம்

கார்த்திக் சுவாமிநாதன்(தனுஸ்) பிரண்ட்ஸ் இவர ஜீனியர்ஸ் என்டு கூப்பிடுவீனமாம்...

போட்டோகிராபர் ஆகும் விருப்பத்துடன் எங்கள மாதிரி வெட்டியா சுத்துற சாதாரணபையன்.சிறந்த வைல்ட்போட்டோகிராபர்ட்ட அசிஸ்டன்ரா சேர விரும்பி போகிறார் அவர் இவரை கேவலப்படுத்தி அனுப்பிறார். அதுக்கிடையில ரிச்சா கங்கோபத்யாவோ என்னவோ அவாவோட முட்டல் மோதல் என ஆரம்பித்து அதுவும் லவ் ஆகிற சமயம் திரும்ப சிறந்த வைல்ட்போட்டோகிராபர்ட்ட போறார். 
அவர் தனுஸை சில படங்கள் எடுத்து வரும்படியும் பிடித்திருந்தால் அசிஸ்டன்ட் ஆக்குவதாகவும் கூறுகிறார். தனுஸ் பிரண்ஸ்சோட காட்டுக்கு போய் அங்க இருக்கிற நீர்க்காகங்களை படம்பிடிக்கிறார்.
இவை நான் எடுத்த நீர்க்காகத்தின் படங்கள்...

அது அந்த பெரிய போட்டோகிராபருக்கு பிடிக்க இல்லை.. திட்டி அனுப்பிறாரு... தனுஸ் எரிச்சல்ல அந்த படங்களை அங்கயே விட்டுட்டு போறாரு.. அந்த படங்களை நெசனல் ஜோக்கிரபிக்கு பெரிய போட்டோகிராபர் தான் எடுத்த படங்கள் என்று கூறி அனுப்பி சிறந்த புகைப்படகலைஞர் பட்டம் பெறுகிறார்..
அதுக்கு முன் ரிச்சாக்கும் தனுசுக்கும் கலியாணம் நடக்குது. தன்னுடைய புகைப்படத்திற்கு வேறு யாருக்கோ பரிசு கிடைத்த அதிர்ச்சியில் மாடியிலி இருந்து விழுந்து மெண்டல் ஆகிறாரு... ஆனா அப்பயும் புகைப்படம் எடுப்பதை விடவில்லை.. மெண்டலா இருந்தே சிறந்த புகைப்படம் எடுத்து சிறந்த புகைப்பட கலைஞர் விருது வாங்கி ஆஸ்கார் வென்ற தமிழன் ரஹ்மான் போல் தமிழிலேயே உரையாற்றுகிறார்...

இவ்வளவு தான் கதை.. இதற்கிடையே பல திருப்பங்கள்.. பல சொதப்பல்கள்..
சிறந்த கதைகரு... ஓரளவு நல்ல கதையோட்டம்...
ஆனால் இளைஞர்களுக்கான, புதிய தலைமுறை படம் என்று டேற்றிங், அது இது என்று சேர்த்திருப்பது படத்தை குழப்பி விட்டது...
சில வசனங்கள் சூப்பர்...
பாடல்களில் 'ஓடஓட' ,'காதல் என் காதல் 'சூப்பர் ஹிட்... 'ஓடஓட' கிராபிக்ஸ் நன்று...

பிறைதேடும் பாடல் நல்ல மெலடி... ஹெட்போனில் கேட்டுக்கொண்டே தூங்கலாம்...

டேற்றிங், மது, மாது இவங்றை நீக்கினால் நல்ல படம்...
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

சொந்த ஊர் போல வருமா???

நேற்று சொந்த ஊருக்கு சென்றபோது பெறப்பட்ட படங்கள்....
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனலைதீவில் சிறுவர் நூலக திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. 
அவ்விழாவிற்கு செல்லும் வழியில் பெறப்பட்ட கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்...


கரையோரம் உணவு தேடும் நண்டு


கரை தேடும் பயணத்தில் நாம்...


உயிருக்கு உத்தரவாதம் இல்லை... தினமும் இதே பயணம் எம்மக்களுக்கு....


லைசன்ஸ் இல்லை படகு ஓட்டுவதற்கு... ஆனாலும் விபத்தில்லை...


நடுவே மனித சஞ்சாரம் அற்ற பருத்தித்தீவும் ஓரத்தில் அனலைதீவும்...


மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் வழிகாட்டும் வெளிச்சவீடு...


இறங்குதுறையும் பயணத்திற்கு பயன்படும் பஸ்ஸிம்...


அனலைதீவு பொதுநூலகம்...


இடம்பெயர், உள்நாட்டு பறவைகள்...
நீராடும் நீர்க்காகம்...
பயணத்திற்கு பயன்படும் படகுகளும் பின்புலத்தில் நயினாதீவும்...


பருத்திதீவின் அழகிய தோற்றம்...(மனித சஞ்சாரம் அற்றது.. இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட வளமாக அறிவிக்கப்பட்ட பிரதேசம்..)

அனலைதீவின் முழுவீச்சு...
நெடுந்தீவின் பனைவளம்...சூரிய கிரணங்களால் அழகுறும் கடல்...

உயிருடன் சிப்பி...


இரைதேடும் பருந்து... பண்ணை பாலத்தருகே...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Monday, November 28, 2011

புகைப்பட கலாட்டா...3

என்னைப்போல பலர் நகைச்சுவை செய்ய முயன்று தடுக்கி விழுந்துள்ளார்கள். சிலர் மட்டுமே நகைச்சுவையில் பின்னி எடுப்பார்கள். சாதாரணபேச்சு நகைச்சுவையை விட புகைப்படங்களில் நகைச்சுவை அம்சத்தை ஏற்படுத்துவது ரொம்ப கஸ்டம்.. அவ்வாறான சில புகைப்படநகைச்சுவைகள்... இவை என்னால் வேறு இணைய பக்கங்களில் இருந்து சுடப்பட்டவையே...
அப்பா எனக்கும் கொஞ்சம்...


ஆடி வா.. பாடி வா... ஆணழகை தேடி வா...


பத்திப்பெட்டி இருக்கா???


டொங்குல் வைத்திருப்பவர்களுக்கான மிக சிறந்த ஐடியா...


கார் லொக் இல்லையா??ஓவர் படிப்பு உடம்புக்கு ஆகாது மச்சி...


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

நண்பன் சமீபத்திய புகைப்படங்கள்..

இளையதளபதி விஜயின் வேலாயுதம் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றியை பதிக்க வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில... தொடர்ந்து நண்பன், விஜய் படங்கள் போட விஜயின் ரசிகர்களே காரணம். வேறு பதிவுகள் எதிர்பார்ப்பவர்கள் சற்று பொறுக்கவும். ஒரு சீரியஸ் பதிவு தயாராகின்றது. 
வணக்கம் நண்பன்

டாக்டர் விஜயே டாக்கடரிட்ட போறதா??
இதில யாரு நல்லா நடிக்கிறாங்க??? விஜய் /  ஸ்ரீகாந்த் / ஜீவா

(விஜயின் மைண்ட் வாய்ஸ்) எங்கதான் இந்த கேர்ஸ்டைலை கண்டுபிடிச்சாங்களோ??

செம ரொமாண்டிக்

செம ரொமாண்டிக்

செம ரொமாண்டிக்
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......