rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, October 7, 2011

ஜொப்ஸ்க்கு தலைவணங்குகிறோம்....

ஸ்டீவ் ஜொப்ஸ் இந்த பெயருக்குள்ள வலிமை இப்பொழுது தெரிகிறது.

பிறப்பு பெப்ரவரி 24.1955- அக்டோபர் 5. 2011 ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியாகவும் விளங்கிய இவர் 5.10.2011 காலமானார். கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டரசு அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
ஸ்டீவ் ஜொப்ஸ் 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அனிமேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் வால்ட் டிஸ்னி போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகஸ்ட் 24. 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்

ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் Steve Wozniak, Mike Markkula ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க Macintosh கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் தலைமையுடன் மோதி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி NeXT என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் NeXT நிறுவனத்தை வாங்கிய பின் ஸ்டீவ் ஜொப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாளராக(CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார்.

வியாழன், அக்டோபர் 6, 2011
ஸ்டீவ் ஜாப்ஸ் புதன்கிழமை தனது 56 வது அகவையில் புற்றுநோயால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினித் தொழில்நுட்பத் துறையை புரட்சிகரமாக மாற்றி அமைத்த இவர்இ 2010 இல் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் பெறுமதி (350 பில்லியன்) மிக்க நிறுவனமாக வளர்த்தெடுத்தார். இவர் உலகில் மிகவும் பணமும்இ செல்வாக்கும் மிக்கவர்களில் ஒருவர் ஆவார்.
1998 இல் ஆப்பிள் ஐ-மாக் கணினியை வெளியிட்டது. 2001 இல் ஐபாட்டையும், அதே ஆண்டு I Tune ம், 2007 இல் ஐபோனையும், 2010 ஐபாட்டையும் ஆப்பிள் வெளியிட்டது. இவை அனைத்தும் சந்தையில் மிக வரவேற்பைப் பெற்றுப் பெரும் தொகையில் விற்பனையாகின. இதனால் 2010 இல் 350 பில்லியன் பெறுமதியுடன் உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக அப்பிள் மாறியது.
இவர் வெளியே அறியப்பட்ட பெரும் கொடைகள் எதையும் செய்யவில்லை. மாற்றாக இவர் தனது படைப்புக்களே உலகுக்கு தான் செய்யும் கொடை என்றும், அதுவே அவரை நிம்மதியாக நித்திரை கொள்ள வைக்கிறது என்றும் கூறினார்.

இவரது இறப்பு ஆப்பிள் நிறுவனத்தில் எதிர்கால புத்தாக்க நிலையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. இவரது நெறிப்படுத்தல் இல்லாமல் ஆப்பிள் பழைமை பேணி புத்தாக்க வீச்சை இழந்துவிடும் என்று சிலர் எதிர்வு கூறுகிறார்கள்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதியாக வெளியிடப்பட்ட IPhone 4S ஓரளவே வெற்றியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஜொப்ஸின் வாழ்க்கை பலருக்கு முன்னுதாரணமாகியதை மறுக்க முடியாது.


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: