rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Thursday, October 27, 2011

7 ம் அறிவு- திரைவிமர்சனம்

ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சையன்ஸ் படம் பார்த்த திருப்தி.. ஆனால் பூரணமில்லை.
ஆரம்பத்தில் போதிதர்மன் யார்? என்று கதை போகும். இந்தியாவின் பல்லவ சாம்ராச்சியத்தின் 3ம் இளவரசனே போதிதர்மன். சண்டை, மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற இவர் சீனா செல்கிறார். அங்கே மக்கள் முதலில் இவரை வெறுக்கின்றனர். ஆனால் சூர்யா (போதிதர்மன்) அவர்களுக்கு ஏற்பட்ட தொற்றுநோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கிறார். அதனால் இவரை மக்கள் மதிக்கின்றனர். பின் இந்தியா திரும்ப விரும்பும் போது சிலர் இவரின் உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டால் நாடு வளம் பெறும் என சொல்வதை நம்பி விசம் வைத்துவிடுகின்றனர். சூர்யா விசம் என தெரிந்தும் உண்டு இறக்கிறார். 

பல்லவ சாம்ராச்சியத்தை காட்டும் போது செய்யப்பட்ட போது செய்யப்பட்ட கிராபிக்ஸ் செமையாக இருக்கும். தசாவதாரத்தில் கோயில் கோபுரத்திலிருந்து கமரா மூவ் ஆகும் காட்சி இருப்பது போல இங்கு அந்நகரின் போல் செல்லும் காட்சி அருமை. ஆனால் கமரா மூவ்மென்ட் வேகமாக செல்வதால் படத்தின் குவாலிட்டி குறைவாக தோன்றுகின்றது.

அடுத்து இன்றைய சீனாவில் ஒப்பிரேசன் ரெட் பற்றிய விவாதம் நடைபெறும். அடுத்து இன்றைய சூர்யா.... சேர்க்கஸ்ஸில் வேலை செய்கிறார். சேர்க்கஸ்ஸிற்கு பார்வையாளர்களை வரவழைக்க ஒரு பாட்டு. சூர்யா சேர்க்கஸ்ஸில் வேலை செய்வதாக காட்டப்பட்டாலும் சில இடத்தில் மட்டுமே சேர்க்கஸ் செய்கிறார்.(அதுவும் 3 பந்தை மாற்றி மாற்றி வீசுவது, வளையம் சுற்றுவதோடு சரி) மற்றபடி முதலாளி மாதிரி காட்டப்படுவது ஓவர். பிறகு சுதாவின் (ஸ்ருதி) அறிமுகம்.. சூர்யாவோடு பழகி காதலிப்பதாக நடிக்கிறார். நடிப்பது தெரிந்ததும் வழக்கம் போல சூர்யா கோபப்படுவதும் பாட்டுப்பாடுவதும் வழமைபோலவே. யம்மா யம்மா பாடலில் சூர்யா சூப்பர்யா... 

சூர்யாவிடம் DNA வை எடுக்கவே தான் வந்ததாக கூறி விளக்கப்படுத்துவது அற்புதம். ஒப்பிரேசன் ரெட்டை நாயில் தொடங்குவது என்ன 
லாஜிக். நுயெனின் நடிப்பும் சூப்பர். நாயில் வைரஸ் பரவுவதை காட்ட ஓடிஓடி நாயை வீடியோ எடுத்திருக்கிறார்கள்... பாவம்.... நாய்.....

ஸ்ருதி, சூர்யாவை துரத்தும் காட்சியில் நுயெனின் பார்வை வசியத்தால் ஏற்படும் விபத்து, சண்டைக்காட்சி நன்று.. ஆனால் ரொம்ப ஓவர்...
நாய்க்கு பரவிய வைரஸ் மக்களுக்கும் தாக்கி இறக்கும் போது சூர்யாவின் DNAவை துண்டி (சூர்யா போதிதர்மரின் வழி வந்தவராம்) நோய் கிருமிக்கான மாற்று மருந்தை கண்டுபிடித்து ஒப்பிரேசன் ரெட்டையும் நுயெனையும் அழித்து பேட்டி கொடுக்கிறார். படம் முடிக்கிறது.

சந்தேகங்கள்...
 1. போதிதர்மர் விசம் எண்டு தெரிந்தும் சாப்பிடவேணுமா?
 2. DNAஆய்வு கூடம் ரொம்ப நோர்மலா இருக்குதே!!!
 3. தமிழ் தெரியாத நுயென் எப்பிடி தமிழ்நாடு முழுக்க சுத்தினார்?


சரி போகட்டும்...
யாரும் மேக்கப் போட்டுக் கொண்டு தண்ணீக்குள்ள இறங்க கூடாது. முன் அந்தி பாடலில் ஸ்ருதிக்கு மேக்கப் போட்டு தண்ணிக்குள்ள இறக்கி ஊடழளந-ரி ளாழசவள எடுத்திருக்கீனம். மேக்கப் போட்டதால பாக்க சகிக்கல. அதோட உச்சி பிரித்து தலை வாருவது ஸ்ருதிக்கு அழகை குறைக்கிறது.
சூர்யாவின் இறுதி சண்டைக்காட்சியில் போதிதர்மர் போல் சண்டை போடும் போது சில இடங்களில் முகத்தில் கஸ்ரப்படுவது தெரிகிறது.

என்னதான் என்றாலும் ஸ்ருதி மற்ற விஞ்ஞானிகளுடன் தமிழ் குறித்து சண்டை போடுவது சிறந்த காட்சி... முக்கியமாக தமிழ் பற்றி கதைக்கும் போது தியேட்டரில் விசில் பறந்தது. கைதட்டல் பலமாக காணப்பட்டது.

ஆக மொத்தம் நல்ல படம்... வித்தியாசமான படம்... வெற்றிப்படம்...

தமிழுக்கு தலை வணங்குகின்றோம்....

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Tuesday, October 25, 2011

வில்லுப்பாட்டு செய்வமா??

வணக்கம். எப்பிடி இருக்கிறீங்க. இப்ப ஒரு வில்லுப்பாட்டு பாடலை பார்ப்போமா?

------------------------------------------------------------------------
நல்லூர் கந்தனின் திருவிழா காலத்தில தினமும் கந்தையா கோயிலுக்கு வருவார். அண்டைக்கு தேர்த்திருவிழா. மேற்கு வீதி. அங்க ஒரு ஆள காணுறாரு. பட்டு வேட்டி. தங்கமோதிரம். கழுத்தில வைரசங்கிலி. எண்டு படு அமர்க்களம்.( இப்ப எல்லோரும் அப்படிதான். ஆனா பாட்டு எழுதப்பட்டது 2007.) அவர பாத்ததும் கந்தையா யோசிச்சாரு. திடீரென பொறி தட்டியது... அட நம்ம அம்பலத்துநாதன்... கிட்டப்போய்......

(செம்பருத்திப்பூவே செம்பரத்திபூவே பாடல் மெட்டில்)

செம்பருத்தி பூவே உண்மையான பாடல்...


அம்பலத்துநாதா அம்பலத்துநாதா
ஒன்றாய் பள்ளி போனோம் நினைவில்லையா?
என்னையறியாமல் ஜேமனுக்கு போனாய்.
போடருக்குள் நுழைந்தாய் நினைவில்லையா?
உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா?
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான்
சொல்லாமல் தவிக்கின்றேன்.... (அம்பலத்து)

பாட்ட கேட்டதும் அம்பலத்தாருக்கும் பொறி தட்டியது..

(அதே மெட்டில்)
நீயென்ன சொல்வது நானறிவேன்.
நான் என்ன சொல்வது நீயறிவாய்.
நானென்ன சொல்லவந்தேன்.
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
இந்த கடவுள் தான் அறியும்.
ஊருக்குள் என்ன சொல்ல வந்ததெண்டு
கந்தையா உனக்கென்ன தெரியாதா?
ஓஓ...... அடியா நொருக்கா தெரியவில்லை.
பிடித்தால் சிறையா புரியவில்லை.
அதை சொல்ல தான் நினைக்கின்றேன்.
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்.

என்ன நடந்தது தெரியுமா???

ஒண்ணா படிச்ச காலத்தில ஒருமுறை அம்பலத்தார் பள்ளிக்கூடத்தின்ர ஓட்ட பிரிச்சு உள்ள இறங்கி பள்ளிக்கூட ரேடியோவ திருடிற்றான். அத எடுத்து கொண்டு ஓடும் போது அதிபர் கண்டுட்டார். அப்ப கந்தையா முன்னால வர அவனிட்ட ரேடியோவ குடுத்திட்டு ஓடிற்றான் அம்பலத்தார். கந்தையா ரேடியோவோட நிக்கிறத பாத்து அம்பலத்தாற்ற கூட்டாளி தானே கந்தையா என்டு அவன போட்டு அடிச்சு உதைச்சு விசாரண அது இது எண்டு விசயம் பெரிசாகிப்போச்சுது. அந்தநேரம் அம்பலத்தார் அண்டைக்கு ஓடின ஓட்டம் கொழும்புக்கு போய் அங்க இங்க ஆக்கள பிடிச்சு ஜேமனுக்கு போய்ற்றாரு. இப்ப தான் வந்திருக்கிறாரு.
-----------------------------------------------------------

சரி சரி சாமி வடக்கு வீதிக்கு போய்ற்றார் எண்டு நான் வந்திட்டன். பிறகு என்ன நடந்தது எண்டு தெரியல. இன்னொரு தரம் அவயள பாத்தா நடந்தது என்னனு கேட்டு சொல்லுறன்.


ஆக்கம்-- க.சௌந்தரராஜன். கொப்பி பேஸ்ட் வேண்டாம்... இன்னும் வில்லுப்பாட்டு வரும்...

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Monday, October 24, 2011

பிரபல பதிவராக

எல்லா பதிவர்களுக்கும் பிரபல பதிவர் ஆக ஆசை இருக்கும்.. எனக்கும் தான்.. ஆனா அது மட்டும் நடக்க மாட்டன் என்டுது.. அப்ப தான் அதயே பதிவா போட்டா என்னண்னு.. இது தான் இந்த பதிவு உருவாக காரணம். சரி இனி பிரபலமாக வழிகளை பார்ப்போர்..

முதலாவது வழி
சினிமா
உள்ள ஒட்டுமொத்த வாசகர்களும் சினிமா சம்பந்தமான விடயம் என்டதும் ஓஓஓஓடிடிடி வாறாங்கள்... ஆனா பெரும்பாலான பதிவர்களுக்கு 1ல் நாள் சினிமா ரிக்கட் கிடைக்காது.. அந்த கேப்பில பின்னுக்கு நிக்கிற பதிவர் 1ல் நாள் படம் பாத்துட்டு சுடசுட விமர்சனம் போட்டு முன்னுக்கு வந்திடுவார். எனக்கும் சினிமாக்கும் கொஞ்சம் அதிகமா கேப் இருப்பதால் இது சரி வராது..
அடுத்தது

இரண்டாவது வழி
நகைச்சுவை
எதுக்கு மயங்குறானோ இல்லையோ இதுக்கு எல்லோரும் மயங்குவாங்கள். ஆனா என்னப்போல சில பலருக்கு நகைச்சுவைனா என்னண்டு கேப்பாங்கள்... அதால அது துப்பரவா சரி வராது..

மூன்றாவது வழி
தமிழ், ஈழம் போன்றன.. தமிழர்கள் எல்லோரும் பார்க்கும் செய்தி இது தான்.. 

அதயும் விட்டா 


நான்காவது வழி
17+1 பதிவு தான்..
என்னண்டு பாக்கிறீங்களா.. அட 18+.. தான்.. 17+1 18 தானே.. 
அதுவும் சரிவராது..


வேற வழியே இல்லை..
பேசாமல் பதிவுலகை விட்டு போகவேண்டியதுதானானானானா....

அது மட்டும் நடக்காது... என்ன மாதிரி சின்னப்புள்ளைங்கள முன்னுக்கு கொண்டு வரத்தானே நீங்க இருக்கிறீங்க...

வேற ஏதாவது வழி இருக்கா??? சொல்லுங்கப்பா...
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

முத்திரை சேகரிப்பு...Stamp Collection..

என் சேகரிப்பில் உள்ள முத்திரைகளில் சில உங்கள் பார்வைக்கு..

ஆனந்தகுமாரசுவாமியின் நினைவாக வெளியிடப்பட்ட முத்திரை.


ஆறுமுக நாவலரின் நினைவாக வெளியிடப்பட்ட முத்திரை.

பிரித்தானியர் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.
இதில் முதலாவதாக இருப்பது யார் தெரியுமா??  Comment ல் தருக..பிரித்தானியர் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.பப்புவா நியூகினி தீவின் முத்திரை.


இன்றைய தென்ஆப்பிரிக்கா முன்பு ரொடீசியா எனப்பட்டது. அக்காலப்பகுதியில் வெளியிட்பட்டது.. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......